கமின்ஸ், கபில் தேவை பாருங்க.. நானா கேட்க முடியுமா? இதனால தான் நாங்க ஒதுக்கப்படுறோம்.. பும்ரா ஆதங்கம்

Jasprit Bumrah 3
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்வதற்கு ஜஸ்ப்ரித் பும்ரா தொடர்நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார். சமீபத்திய வருடங்களாகவே 3 வகையான கிரிக்கெட்டிலும் அபாரமாக செயல்பட்டு வரும் அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறார். அதனால் தற்சமயத்தில் பும்ரா உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக திகழ்வதாக பல முன்னால் ஜாம்பவான் வீரர்கள் பாராட்டினர்.

அப்படிப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு சூர்யகுமாரை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. அது போன்ற சூழ்நிலையில் விராட் கோலிக்கு, ரோஹித் சர்மாவுக்கு நிகரான தரத்தை கொண்ட ஜஸ்ப்ரித் பும்ராவை கேப்டனாக நியமித்திருக்கலாம் என்பது ஒரு தரப்பு ரசிகர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

- Advertisement -

ஒதுக்கப்படும் பவுலர்கள்:
இந்நிலையில் கேப்டன்ஷிப் பொறுப்பை எனக்கு கொடுங்கள் என்று தாம் கேட்க முடியாது என பும்ரா தெரிவித்துள்ளார். மேலும் அதிகமாக காயத்தை சந்திக்க கூடியவர்கள் என்பதால் எப்போதும் கேப்டன்ஷிப் பொறுப்பு கேப்டன்களிடமே செல்வது வாடிக்கையாகி விட்டதாகவும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“அணியிடம் சென்று நீங்கள் என்னை கேப்டனாக்குங்கள் என்று நான் சொல்ல முடியாது. பேட்ஸ்மேன்களை அவுட்டாக்குவதால் பவுலர்கள் புத்திசாலித்தனமானவர்கள் என்று நான் கருதுகிறேன். இப்போது பேட்டுகள் வலுவாகியுள்ளது. மைதானங்கள் சிறிதாகியுள்ளது. அவற்றுக்கு எதிராகவும் நாங்கள் போராட வேண்டியுள்ளது. பந்தை அதிகமாக ஸ்விங் செய்வது பற்றிய செய்தி அல்லது டெக்னாலஜி வந்ததாக எனக்கு நினைவில் இல்லை”

- Advertisement -

“மக்கள் சிக்சர்கள் அடிப்பதையே விரும்புகின்றனர். அப்படி பவுலர்கள் மிகவும் கடினமான வேலை செய்கின்றனர். அவர்கள் பேட் அல்லது ஃபிளாட்டான பிட்ச்சுக்கு பின்னே ஒளிந்து கொள்வதில்லை. அந்த கடினமான வேலையில் பவுலர்கள் நிறைய சவால்களை சந்திக்கின்றனர். இவற்றையெல்லாம் தாண்டி சாதித்து வருவது பவுலர்களை தைரியமாக்குகிறது”

“கேப்டனாக செயல்பட நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். பட் கமின்ஸ் சிறப்பாக செயல்படுவதை நாம் பார்க்கிறோம். வாசிம் அக்ரம், கபில் தேவ், உலகக் கோப்பை வென்ற இம்ரான் கான் ஆகியோரை நான் பார்த்துள்ளேன். பவுலர்கள் மிகவும் புத்திசாலித்தனமானவர்கள். ஆனால் சில நேரங்களில் அவர்கள் உடலளவில் கிராமத்தை சந்திப்பார்கள். அதனாலேயே கேப்டன்ஷிப் பேட்ஸ்மேன்களுக்கு சென்று விடுகிறது”

இதையும் படிங்க: இந்தியாவுக்கு அதை விட எதுவும் முக்கியமில்ல.. டெய்லியும் நடப்பதை பாருங்க.. பாகிஸ்தானுக்கு ஹர்பஜன் பதிலடி

“ஆரம்பத்தில் என்னுடைய பவுலிங் ஆக்சன் வேலை செய்யாது என்று பலரும் சொன்னார்கள். ஆனால் தற்போது அதை மக்கள் காப்பி செய்ய முயற்சிக்கின்றனர். அந்த வகையில் உங்களுடைய செயல்பாடுகளை பேச விட வேண்டும். அதற்கு பட் கமின்ஸ் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. அவர் உலகக்கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்றுள்ளார். எனவே பவுலர்களுக்கு கேப்டன்ஷிப் என்பது பாரம் என்று நான் கருதவில்லை” எனக் கூறினார்.

Advertisement