பெரிய இழப்பை சந்திச்சுருக்காங்க.. அதை யூஸ் பண்ணி இந்தியாவை வீழ்த்துவோம்.. இலங்கை கோச் ஜெயசூர்யா உறுதி

Sanath Jayasuriya
- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர் ஜூலை 27ஆம் தேதி துவங்க உள்ளது. ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பின் ஜிம்பாப்வே மண்ணிலும் தொடரை வென்ற இந்தியா அடுத்ததாக இலங்கையை எதிர்கொள்கிறது.

அந்தத் தொடரில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சூரியகுமார் மற்றும் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் இந்தியா களமிறங்குகிறது. மேலும் 2026 டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் பயணத்தை இங்கிருந்து இந்தியா துவங்குகிறது. எனவே புதிய கேப்டன் தலைமையில் அதற்குத் தேவையான வீரர்களை கண்டறிய இந்திய அணி நிர்வாகம் முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்தியாவின் இழப்பு:
அதே சமயம் 2023 ஆசிய கோப்பை ஃபைனலில் இலங்கையை 50 ரன்கள் சுருட்டிய இந்தியா கோப்பையை வென்றது. அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பையில் இலங்கை லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த வகையில் சமீப காலங்களில் தடுமாற்றமாக செயல்பட்டு வரும் இலங்கை அணியை இம்முறையும் அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றது டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று இலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். எனவே அந்த முக்கிய வீரர்கள் இல்லாததால் கொஞ்சம் பலம் குறைந்துள்ள இந்திய அணியை இத்தொடரில் சிறப்பாக விளையாடி இலங்கை தோற்கடிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கௌதம் கம்பீர் போலவே இலங்கையின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் உலகின் மிகச்சிறந்த வீரர்கள். ஜடேஜாவையும் சேர்த்து அவர்களின் திறமை மற்றும் விளையாடிய கிரிக்கெட்டை பார்க்கும் போது அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர்கள் தற்போது இல்லாதது இந்திய அணிக்கு கண்டிப்பாக இழப்பு. எனவே நாங்கள் அந்த சாதகத்தை அதிகபட்சமாக பயன்படுத்திக் கொள்வோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: தோனியின் வளர்ப்பு.. அடுத்த 3 வருஷத்துக்கு தேவையானதை செய்யப் போறோம்.. இந்தியாவை எச்சரித்த பதிரனா

இருப்பினும் இந்திய அணியில் ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சிவம் துபே போன்ற தரமான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே தற்போதைய இலங்கை அணியை சமாளித்து வெற்றி காண்பதற்கு தேவையான தரம் இந்திய அணியில் இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி இந்தியாவை தோற்கடித்து 2023 ஆசிய கோப்பை தோல்விக்கு பழி தீர்க்க வேண்டும் என்பதே இலங்கை ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

Advertisement