தோனியின் வளர்ப்பு.. அடுத்த 3 வருஷத்துக்கு தேவையானதை செய்யப் போறோம்.. இந்தியாவை எச்சரித்த பதிரனா

Matheesa Pathirana
- Advertisement -

இலங்கை மற்றும் இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஜூலை 27ஆம் தேதி துவங்குகிறது. ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் வெற்றி கண்ட இந்திய அணி அடுத்ததாக ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற தொடரையும் வென்றது. அதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்த தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

இந்தத் தொடரில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம் பெறவில்லை. ஆனால் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூரியகுமார் தலைமையில் தரமான இளம் வீரர்களுடன் இத்தொடரில் இந்தியா களமிறங்குகிறது. எனவே 2023 ஆசியக் கோப்பை ஃபைனல் போல இம்முறையும் இலங்கையை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

தோனியின் வளர்ப்பு:
இந்நிலையில் இந்திய முன்னாள் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி தலைமையில் சிஎஸ்கே அணியில் விளையாடியது தமது வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியைச் செய்துள்ளதாக இலங்கை வீரர் மதிசா பதிரனா தெரிவித்துள்ளார். அத்துடன் இத்தொடரில் இந்தியாவை தோற்கடிக்கும் அளவுக்கு தங்களிடம் திறமை இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். எனவே இந்தியாவை வீழ்த்தினால் அடுத்த 3 வருடத்திற்கு தேவையான தன்னம்பிக்கை தங்களுக்கு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

துல்லியான யார்க்கர் பந்துகளை வீசுவார் என்பதால் பேபி மலிங்கா என்றழைக்கப்படும் அவர் இது பற்றி பேசியது பின் வருமாறு. “இந்தத் தொடர் நல்ல சவாலாக இருக்கும். இந்திய அணியில் புதிய பயிற்சியாளர் மற்றும் வீரர்கள் வந்துள்ளனதால் அவர்களின் சேர்க்கை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஆனால் அது எங்களுக்கு நல்ல சவாலாக இருக்கும். ஏனெனில் அவர்கள் உலக சாம்பியன்கள்”

- Advertisement -

“நாங்களும் நிறைய திறமை கொண்ட மிகவும் நல்ல அணியாக இருக்கிறோம். துரதிர்ஷ்டமாக டி20 உலகக் கோப்பையில் நாங்கள் நன்றாக செயல்படவில்லை. ஆனால் இந்த தொடரை நாங்கள் வென்றால் அது அடுத்த 3 வருடத்திற்கு தேவையான நம்பிக்கையை கொடுக்க எங்களுக்கு பூஸ்ட்டராக அமையும். அண்டர்-19 அளவில் விளையாடிய பின் இலங்கை அணியில் எனக்கு இடம் கிடைக்கவில்லை”

இதையும் படிங்க: இன்னும் 2 நாள் தான் இருக்கு.. இந்தியா இலங்கை தொடரில் இருந்து விலகிய நட்சத்திர வீரர் – விவரம் இதோ

ஆனால் சிஎஸ்கே அணிக்காக அறிமுகமாகி நன்றாக செயல்பட்டதால் இலங்கை முதன்மை அணியில் தேர்வானேன். சிஎஸ்கே அணியில் விளையாடியது எனக்கு கடவுள் கொடுத்த பரிசு. சிஎஸ்கே அணிக்கு விளையாடாத வரை என்னை பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. மஹி பாயுடன் இணைந்து விளையாடியது என்னைப் போன்ற இலங்கை இளம் வீரர்களுக்கு மிகவும் ஸ்பெஷலானது” என்று கூறினார்.

Advertisement