இன்னும் 2 நாள் தான் இருக்கு.. இந்தியா இலங்கை தொடரில் இருந்து விலகிய நட்சத்திர வீரர் – விவரம் இதோ

IND-vs-SL
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ மூலம் அறிவிக்கப்பட்டு தற்போது இலங்கை நாட்டிற்கு சென்றடைந்து பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான டிராவிட் பதவி விலகியதை அடுத்து புதிய பயிற்சியாளராக கம்பீர் தலைமையில் இந்திய அணியின் முதல் தொடர் இது என்பதனால் இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

அதோடு இந்த தொடரில் வீரர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை காணவும் ஆவலாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது ஜூலை 27-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான இலங்கை அணியும் அறிவிக்கப்பட்டு அவர்களும் தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடர் துவங்க ஒரு சில தினங்களே உள்ள நிலையில் தற்போது இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான சமீரா இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்தா சமீரா காயம் காரணமாக அவதிப்பட்டு உள்ளார் என்றும் அதன் காரணமாக அவரால் இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாட முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : முடிவுக்கு வந்த ஜடேஜாவின் கரியர்.. அவரது இடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 2 வீரர்கள் – இனிமே அவங்கதான்

மேலும் அவருக்கு பதிலான மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இலங்கை அணியின் அனுபவ வீரரான சமீரா இந்த தொடரில் இருந்து விலகி உள்ளது அந்த அணிக்கு ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement