சச்சின், என்னால கூட நெருங்க முடியாது.. அந்த வெ.இ வீரர் அப்படிப்பட்ட அற்புதமான பிளேயர்.. லாரா பாராடு

Brian Lara 2
- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாரா ஆகியோர் மகத்தான பேட்ஸ்மேன்களில் முதன்மையானவர்களாக போற்றப்படுகின்றனர். அதில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் 100 சதங்கள் அடித்துள்ள சச்சின் டெண்டுல்கர் பல உலக சாதனைகளுடன் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ஜாம்பவான் வீரராக போற்றப்படுகிறார்.

அதே போல இடது கை பேட்ஸ்மேனாக உலகின் டாப் பவுலர்களை தெறிக்க விட்ட ப்ரைன் லாரா டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தலா 10000 ரன்கள் அடித்துள்ளார். அத்துடன் 20 வருடங்களுக்கு முன்பாக 400* ரன்கள் அடித்த அவருடைய அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் உலக சாதனை இன்னும் உடைக்கப்படாமல் இருக்கிறது. அந்த வகையில் எத்தனை பேட்ஸ்மேன்கள் வந்தாலும் சச்சின் மற்றும் லாராவுக்கு நிகராக முடியாது என்பதே பெரும்பாலான வல்லுனர்களின் கருத்தாகும்.

- Advertisement -

இருவரையும் விட பெரியவர்:
இந்நிலையில் சச்சின் மற்றும் தன்னை விட முன்னாள் கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்ல் கூப்பர் சச்சினை விட சிறந்த பேட்ஸ்மேன் என்று பிரைன் லாரா பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றி தனது புத்தகத்தில் அவர் எழுதியுள்ளது பின்வருமாறு. “கார்ல் நான் பார்த்த வீரர்களில் சிறந்தவர். சொல்லப்போனால் நானும் சச்சின் டெண்டுல்கர் கூட அவருடைய திறமையை நெருங்க முடியாது என்று சொல்வேன்”

“கேப்டனாக இல்லாமல் அவருடைய புள்ளிவிவரங்களை பார்த்தால் அது வித்தியாசமானதாக இருக்கும். கேப்டனாகவும் கூட பொறுப்புடன் விளையாடிய அவருடைய சராசரி கிட்டத்தட்ட 50 தொடும். இருப்பினும் ஒரு கேப்டனாக மட்டுமே அவர் தனது உண்மையான திறனை நிறைவேற்றினார் என்பது வருத்தமளிக்கிறது. லார்ட்ஸ் போட்டியில் கார்ல் கூப்பரின் க்ளாஸை நான் பார்த்துள்ளேன். அவர் என்ன ஒரு அற்புதமான பிளேயர்”

- Advertisement -

“அப்போட்டியில் அவர் சீனியர்களை விட அற்புதமாக பேட்டிங் செய்தார். கார்ல் பேட்டிங் செய்யும் போது அதை தேஷ்மண்ட், விவ் ரிச்சர்ட்ஸ், கோர்டான் க்ரீனிட்ஜ் ஆகியோர் தங்களின் வேலையை விட்டுவிட்டு பார்ப்பார்கள். அந்த வகையில் மிகவும் திறமையான அவர் நாம் எந்தளவுக்கு சிறந்தவர் என்பதை புரிந்து கொள்ளவில்லை. அவருடைய புத்திசாலித்தனத்திற்கு ஏன் முழு நியாயமாக செயல்படவில்லை என்பதற்கான தெளிவான காரணம் தெரியவில்லை”

இதையும் படிங்க: நானா இருந்தா சுப்மன் கில்லை கேப்டனா போட்ருக்க மாட்டேன்.. காரணம் இது தான்.. அமித் மிஸ்ரா விளாசல்

“ஆனால் ரிச்சர்ட்ஸ் 3 வாரத்திற்கு ஒரு முறை என்னை அழ வைப்பார். ஆனால் கார்ல் ஒவ்வொரு வாரமும் என்னை அழ வைப்பார். ரிச்சர்ட்ஸ் குரல் பயமுறுத்தும் அளவுக்கு வலிமையாக இருக்கும் என்பதால் நீங்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படலாம். இருப்பினும் நான் அதனால் பாதிக்கப்படவில்லை. ஏனெனில் நான் அவரது ஆதரவை பெற்றிருந்தேன். ஆனால் அவரிடமிருந்து கார்ல் விலகிவிட்டார்” என்று கூறினார். 1987 – 2003 வரை விளையாடிய கார்ல் கூப்பர் 102 டெஸ்ட், 227 ஒருநாள் போட்டிகளில் 5762, 5761 ரன்களையும் 114, 193 விக்கெட்டுகளையும் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement