3 விக்கெட்ஸ்.. உத்தப்பா அதிரடி.. யுவராஜ் தலைமையில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய சாம்பியன்ஸ் அணி

India Champions
- Advertisement -

இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜெண்ட்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடர் ஜூலை மூன்றாம் தேதி துவங்கியது. அதில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நட்சத்திர முன்னாள் வீரர்கள் தங்கள் அணிக்காக விளையாடுகின்றனர். அத்தொடரில் யுவராஜ் சிங் இந்திய சாம்பியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.

அந்த நிலையில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணி இந்தியா சாம்பியன்ஸ் அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்கம் நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய சாம்பியன்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கெவின் பீட்டர்சன் 4, மஸ்டர்ட் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

சாம்பியன்ஸ் தொடர்:
இருப்பினும் மிடில் ஆடரில் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் இயன் பெல் 9 பவுண்டரியுடன் 59* (44) ரன்கள் எடுத்தார். அவருடன் முக்கிய நேரத்தில் அதிரடி காட்டிய சமித் பட்டேல் 5 பவுண்டரி 3 சிக்ஸ்ருடன் 51 (25) ரன்கள் விளாசினார். இறுதியில் ஒவைஸ் ஷா தம்முடைய பங்கிற்கு அதிரடியாக 23* (9) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணி 165/4 ரன்கள் குவித்தது.

இந்தியா சாம்பியன்ஸ் அணி சார்பில் ஹர்பஜன் சிங் 2, வினய் குமார் மற்றும் தவால் குல்கர்ணி தலா 1 விக்கெட் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 166 ரன்களை துரத்திய இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடிய 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நமன் ஓஜா 25 (20) ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய ராபின் உத்தப்பா அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 50 (32) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

ஆனால் அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் சுரேஷ் ரெய்னா 16 (17), கேப்டன் யுவராஜ் சிங் 2 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் அவர்களைத் தொடர்ந்து குர்கீரத் சிங் அதிரடியாக 33 (17) ரன்களும் இர்பான் பதான் 22 (15) ரன்களும் அடித்து திருப்புமுனையை உண்டாக்கினர். அதை வீணடிக்காமல் கடைசியில் யூசுப் பதான் 5* (5), ஹர்பஜன் சிங் 6* (1) ரன்கள் அடித்தனர்.

இதையும் படிங்க: தற்போதைய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் இவர்தான். ஜஸ்ப்ரீத் பும்ரா கிடையாது – பிரைன் லாரா கருத்து

அதனால் 19 ஓவரிலேயே 166/7 ரன்கள் எடுத்த இந்தியா சாம்பியன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இத்தொடரை வெற்றியுடன் துவக்கியது. மறுபுறம் இங்கிலாந்து சாம்பியன்ஸ் சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஸ்கோபீல்ட் 4, ரவி போபரா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement