நான் 15 விக்கெட்ஸ் எடுத்ததுக்கு முழு காரணமும் அவர் தான்.. எல்லாரும் அவரை பாராட்டுங்க.. அர்ஷ்தீப் சிங் பேட்டி

Arshdeep Singh 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 27ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. இந்தத் தொடரில் லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் வெற்றி கண்ட இந்தியா சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா வீழ்த்தியது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

செயின்ட் வின்சென்ட் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 206 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா அடித்து நொறுக்கி 92 (41) ரன்கள் குவித்தார். அதை துரத்திய ஆஸ்திரேலிய முடிந்தளவுக்கு போராடி 181/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்து. வெளியேறியது.

- Advertisement -

பும்ராவை சேரும்:
அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னதாக இந்தத் தொடரில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு நிகராக இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சொல்லப்போனால் 11* விக்கெட்டுகள் எடுத்த பும்ராவை முந்தி 15* விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார்.

மேலும் இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ள அவர் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் தாம் இப்படி நன்றாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுப்பதற்கான பாராட்டுக்கள் ஜஸ்ப்ரித் பும்ராவை சேரும் என்று அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் பற்றி அவர் ஆஸ்திரேலிய போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அதிகப்படியான பாராட்டுகள் ஜஸி பாய்க்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் பேட்ஸ்மேன்கள் மீது அதிகப்படியான அழுத்தத்தை போடுகிறார். அவர் தன்னுடைய ஓவரில் 3 அல்லது 4 ரன்கள் மட்டுமே கொடுக்கிறார். எனவே எதிரணி பேட்ஸ்மேன்கள் என்னுடைய ஓவரில் என்னை அடிக்க வருகிறார்கள். அப்போது நான் என்னுடைய சிறந்த பந்தை வீச முயற்சிக்கிறேன். அதனால் எனக்கு விக்கெட்டுகள் விழுவதற்கான வாய்ப்பு நிறைய கிடைக்கிறது”

இதையும் படிங்க: எங்களை ஏமாத்திட்டாங்க.. ஆடம் ஜாம்பா அதிருப்தி.. பட் கமின்ஸை ஓப்பனாக சைலண்ட் செய்த ஆப்கானிஸ்தான் வீரர்

“ஏனெனில் எதிர்ப்புறம் ரன்கள் வருவதில்லை. அதனால் ரன் ரேட் அதிகமாக உயர்கிறது. எனவே எதிரணியினர் எனக்கு எதிராக அதிக ரிஸ்க் எடுத்து விளையாட முயற்சிக்கின்றனர். அதனால் எனக்கு அங்கே விக்கெட்டுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு எப்போதும் இருக்கிறது. எனவே நான் எடுத்துள்ள விக்கெட்டுகளுக்கான நிறைய பாராட்டுக்கள் பும்ராவை சேரும்” என்று கூறினார்.

Advertisement