தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய மகளிரணி தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அந்த நிலையில் இத்தொடரின் 2வது போட்டி ஜனவரி 19ஆம் தேதி பெங்களூரு நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் தடுமாற்றமாக விளையாடிய சபாலி வர்மா 20 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்ததாக வந்த ஹேமலதாவும் 2வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மகத்தான 3 சாதனைகள்:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய மந்தனா அரை சதமடித்து இந்தியாவுக்கு ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் அடுத்ததாக வந்து இணைந்த கேப்டன் ஹெர்மன்பிரித் கௌர் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடினார். அந்த வகையில் மிடில் ஓவர்களில் தென்னாபிரிக்காவை வெளுத்து வாங்கிய இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 171 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தியது.
அப்போது ஸ்மிரிதி மந்தனா சதமடித்து 18 பவுண்டரி 2 சிக்ஸருடன் 136 (120) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதே தொடரின் முதல் போட்டியிலும் சதமடித்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகி விருதை வென்றிருந்தார். இதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
இதற்கு முன் மிதாலி ராஜ், ஹர்மன்பிரித் போன்ற வேறு எந்த இந்திய வீராங்கனைகளும் அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்ததில்லை. அத்துடன் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் (136) பதிவு செய்த வீராங்கனை என்ற தனது சொந்த சாதனைய உடைத்த மந்தனா மற்றுமொரு புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் இதே தொடரின் முதல் போட்டியில் அவர் 117 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.
இது போக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீராங்கனை என்ற மிதாலி ராஜின் (இருவரும் தலா 7 சதங்கள்) வாழ்நாள் சாதனையையும் மந்தனா சமன் செய்தார். சொல்லப்போனால் மித்தாலி 211 இன்னிங்ஸில் அடித்த 7 சதங்களை மந்தனா வெறும் 84 இன்னிங்ஸில் அடித்தள்ளார். அந்த வகையில் இப்போட்டியில் 3 ஆல் டைம் சாதனைகளை படைத்த மந்தனா இந்திய கிரிக்கெட்டின் இளவரசி என்பதை மீண்டும் நிரூபித்தார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் கேப்டன் ஹெர்மன்பிரித் கௌரும் 9 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 103* (88) ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க: இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுக்க தயாரான ஷ்ரேயாஸ் ஐயர்.. எந்த தொடரில் தெரியுமா? சப்போர்ட் பலமா இருக்கும்
அவருடன் ரிக்சா கோஸ் 25* (13) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் இந்தியா 325/3 ரன்கள் குவித்தது. அதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தங்களுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் 2018இல் 302/3 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.



