இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுக்க தயாரான ஷ்ரேயாஸ் ஐயர்.. எந்த தொடரில் தெரியுமா? சப்போர்ட் பலமா இருக்கும்

Shreyas
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற முடிந்த 50 உலககோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் அதைத் தொடர்ந்து நடைபெற்ற சில தொடர்களில் அவர் இடம் பிடிக்கவில்லை. பின்னர் தனது உடல் திறனை நிரூபிக்கும் படி ரஞ்சி போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ கேட்டுக் கொண்டது.

ஆனால் முதுகு வலி காரணமாக ஷ்ரேயாஸ் ஐயரால் ரஞ்சி போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. இருப்பினும் ரஞ்சி தொடரின் இறுதிகட்ட போட்டிகளில் அவர் மும்பை மாநில அணிக்காக விளையாடி வெற்றியில் பங்காற்றியிருந்தார்.

- Advertisement -

இருப்பினும் தங்களது வேண்டுகோளை உடனடியாக ஏற்கவில்லை என்று கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அவர்மீது அதிருப்தியை வெளிப்படுத்தியது. அதோடு அவருக்கும் பி.சி.சி.ஐ-க்கும் இடையே சரியான புரிதல் இல்லாமல் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் நடப்பு ஆண்டுக்கான இந்திய அணியின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டார்.

அதோடு அவருக்கு டி20 உலக கோப்பை தொடரிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இப்படி அடுத்தடுத்து சரிவினை சந்தித்த ஷ்ரேயாஸ் ஐயர் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரினை கேப்டனாக வென்று அசத்தியுள்ளார். மேலும் இந்திய அணியில் இழந்த தனது இடத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று தற்போது கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

இந்திய அணி தற்போது டி20 உலக கோப்பையில் விளையாடி வரும் வேளையில் அதன் பின்னர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடுகிறது. அதன் பின்னர் ஜூலை இரண்டாவது வாரத்தில் இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த இலங்கை தொடருக்கான இந்திய அணியில் தான் ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் திரும்புவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : இந்தியர்ன்னு சொல்ல என்ன தேவையிருக்கு? ஹரிஷ் ரவூப் பற்றிய ரிஸ்வானின் கருத்தை விளாசும் இந்திய ரசிகர்கள்

ஏனெனில் முன்னணி வீரர்கள் பலருக்கும் அந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட இருக்கும் வேளையில் புது பயிற்சியாளராக கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளர் பொறுப்பினை ஏற்றால் நிச்சயம் கொல்கத்தா அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement