இலங்கையை வீழ்த்த ரோஹித் படை எதற்கு.. ஸ்ரேயாஸை இறக்கும் பிசிசிஐ.. ஜிம்பாப்வே தொடர் பற்றியும் தகவல்

Shreyas Iyer 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 8 சுற்றுக்கு விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளது. அதில் சிறப்பாக விளையாடி 2007க்குப்பின் கோப்பையை வென்று சாதனை படைக்கும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது. அந்த வகையில் இந்த டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இது தொடரை முடித்துக் கொண்டு ஜிம்பாப்வே நாட்டிற்கு செல்லும் இந்தியா அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. பொதுவாகவே ஜிம்பாப்வே கொஞ்சம் கத்துக் குட்டி அணியாக கருதப்படுகிறது. எனவே அந்த அணிக்கு எதிராக காலம் காலமாக இந்தியா தங்களுடைய இளம் வீரர்களை விளையாட வைத்து வருகிறது.

- Advertisement -

பிசிசிஐ திட்டம்:
சொல்லப்போனால் ஜிம்பாப்வே மண்ணில் தான் ரவிச்சந்திரன் அஸ்வின், கேஎல் ராகுல் போன்ற பல நட்சத்திர வீரர்கள் அறிமுகமானார்கள். அந்த வரிசையில் இம்முறை ஜிம்பாப்வே தொடரில் 2024 ஐபிஎல் தொடரில் அசத்திய ரியான் பராக், அபிஷேக் ஷர்மா, மயங் யாதவ், நித்திஷ் ரெட்டி, ஹர்ஷித் ராணா போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல ஜிம்பாப்வே தொடர் முடிந்ததும் ஜூலை – ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதில் 2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியாவின் கேப்டனாக விளையாட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்சமயத்தில் இலங்கை அணி மிகவும் தடுமாற்றமாக விளையாடி வருகிறது. எனவே அந்தத் தொடரில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் தலைமையில் இந்திய அணியை களமிறக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி பிடிஐ இணையத்தில் பேசியது பின்வருமாறு. “ஸ்ரேயாஸ் தற்போது என்சிஏவில் இல்லை. இம்முறை ஐபிஎல் தொடரில் அசத்திய பெரும்பாலான வீரர்கள் ஜிம்பாப்வே தொடருக்கான தேர்வில் போட்டியிடுகின்றனர். ரியான் பராக், அபிஷேக் ஷர்மா, மயங் யாதவ், நித்திஷ் ரெட்டி, ஹர்ஷித் ராணா, யாஷ் தயாள், விஜய்குமார் ஆகியோர் என்சிஏ முகாமில் உள்ளனர்”

இதையும் படிங்க: பயிற்சியாளராக வருவதற்கு முன் கம்பீர் வைக்கும் கண்டிஷன்.. விரைவில் வரும் அதிரடி மாற்றம் .. வேலை செய்யுமா?

“அதில் சிலர் ஜிம்பாப்வே தொடரில் விளையாடுவார்கள். அதே சமயம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது. ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் 500 ரன்கள் அடித்த அவர் தென்னாபிரிக்காவுக்கு எதிரான கடைசி போட்டியில் 52 ரன்கள் அடித்தார். எனவே அவரை எப்படி நீக்க முடியும்?” என்று கூறினார்.

Advertisement