இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்படுவார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஏனெனில் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் 2024 டி20 உலகக் கோப்பையுடன் நிறைவு பெறுகிறது. அதனால் புதிய பயிற்சியாளரை நியமிப்பதற்கான விண்ணப்பத்தை பிசிசிஐ வரவேற்றது. அதில் கௌதம் கம்பீரை அடுத்த பயிற்சியாளராக பிசிசிஐ நியமிக்க விரும்புவதாக தெரிகிறது.
ஏனெனில் 2007 மற்றும் 2011 உலகக் கோப்பை ஃபைனல்களில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அவர் தோனி தலைமையில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அந்த வகையில் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஏராளமான அனுபவத்தை கொண்ட அவர் ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக 2012, 2014 சீசனில் 2 கோப்பைகளை வென்றுள்ளார்.
கம்பீரின் நிபந்த்தனை:
அது போக இந்த வருடம் ஆலோசகராக செயல்பட்ட அவர் கொல்கத்தா 10 வருடங்கள் கழித்து 3வது ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் அவரை பிசிசிஐ அடுத்த பயிற்சியாளராக நியமிக்க முடிவெடுத்துள்ளது. சொல்லப்போனால் 140 கோடி இந்தியர்களை பிரதிபலிக்கும் அணிக்கு பயிற்சியாளராக இருப்பதை விட வேறு கௌரவம் இருக்க முடியாது என்று கௌதம் கம்பீரும் அதை சமீபத்தில் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் கம்பீரை பயிற்சியாளராக நியமிப்பதற்காக விதிமுறைப்படி பிசிசிஐ நிர்வாகிகள் அவரிடம் ஜுன் 17ஆம் தேதி நேர்காணல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த நேர்காணலில் பயிற்சியாளராக வந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒரு இந்திய அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட் ஒரு இந்திய அணி என்ற புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று கௌதம் கம்பீர் நிபந்தனை விதித்ததாக தெரிய வருகிறது.
ஏற்கனவே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் அது போன்ற தனித்தனி அணிகள் உள்ளன. அதை இந்தியாவிலும் கம்பீர் கொண்டு வர நினைப்பது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி கூறியது பின்வருமாறு. “கௌதம் கம்பீரிடம் இன்று மதியம் 12 மணி அளவில் பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் இன்டர்வியூ நடத்தப்படுகிறது”
இதையும் படிங்க: நாக் அவுட்டுக்கு முன்னாடியே ஆபத்தை கடந்துட்டாங்க.. இந்தியா கண்டிப்பா ஃபைனலில் விளையாடும்.. பிளமிங் கருத்து
“அவர் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளது ஏற்கனவே கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் முன்வைத்த சில நிபந்தனைகளை பிசிசிஐ ஏற்றுக்கொள்வதாக ஒப்புக் கொண்டுள்ளது. எனவே இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று கூறினார். அந்த வகையில் வெவ்வேறு ஃபார்மட்டுக்கு வெவ்வேறு இந்திய அணி என்ற கம்பீரின் திட்டம் வேலையாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



