மறக்க முடியாத 120 ரன்ஸ்.. தோனியை காப்பி அடித்து தல ரசிகனாக ஓய்வை அறிவித்த கேதர் ஜாதவ்

Kedar Jadhav
- Advertisement -

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் கேதார் ஜாதவ் அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த அவர் கடந்த 2007 முதல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். அந்த வாய்ப்பில் 2013ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையில் அபாரமாக விளையாடிய அவர் 1233 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்தார்.

அதன் காரணமாக 2014ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் சதமடித்தார். அந்த வகையில் கிடைத்த வாய்ப்புகளில் அவ்வப்போது அசத்தி வந்த அவர் 2018ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக புனே நகரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்றதை மறக்க முடியாது.

- Advertisement -

தோனி வழியில்:
அந்தப் போட்டியில் 351 ரன்களை சேசிங் செய்த இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கிய போது விராட் கோலியுடன் சேர்ந்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் சதமடித்து 120 (76) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார். அதுவே அவருடைய கேரியர் சிறந்த செயல்பாடாகவும் அமைந்தது. அதே காரணத்தால் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக 2018இல் தேர்வான அவர் மும்பைக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து பெற்றுக் கொடுத்த வெற்றியை மறக்க முடியாது.

மேலும் அந்தக் காலகட்டங்களில் பகுதிநேர பவுலராகவும் அசத்தியதால் இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக்கோப்பை இந்திய அணியிலும் கேதர் ஜாதவ் தேர்வானார். இருப்பினும் அந்த வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்த தவறிய அவர் அப்படியே ஐபிஎல் தொடரிலும் அதிரடியாக விளையாடத் தடுமாறி 2020 சீசனில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அந்த வருடம் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் அவர் ஃபீல்டர்களை எண்ணியது சிஎஸ்கே ரசிகர்களால் மறக்கவே முடியாது.

- Advertisement -

அந்த வகையில் கொஞ்சம் கொஞ்சமாக தடுமாறிய அவரை இந்தியா மற்றும் சிஎஸ்கே அணி நிர்வாகிகள் கழற்றி விட்டது. அதனால் 39 வயதாகும் அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் 2020இல் தோனி ஓய்வு அறிவித்த போது சொன்ன வார்த்தைகளை அப்படியே நகலெடுத்து தன்னுடைய ஓய்வையும் அறிவித்துள்ளார். இது பற்றி அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: டி20 உ.கோ அயர்லாந்து போட்டிக்கான.. தனது இந்திய பிளேயிங் லெவனை வெளியிட்ட இர்பான் பதான்

“என்னுடைய கேரியர் முழுவதிலும் அன்பையும் ஆதரவையும் கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. 1500 மணியிலிருந்து (3 மணி) அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் என்னை ஓய்வு பெற்றுவதாக கருத்தில் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டு தன்னை தோனி ரசிகன் என்பதை நிரூபித்துள்ளார். மொத்தத்தில் இந்தியாவுக்காக 82 சர்வதேச போட்டிகளிலும் 93 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி விடைபெறும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

Advertisement