27 போட்டி.. 1377 ரன்கள்.. கடந்த ஆண்டு அசத்திய நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு – ஐ.சி.சி வழங்கிய கவுரவம்

Kohli
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்களுக்கான விருதினை தற்போது ஐ.சி.சி வழங்கி கௌரவித்துள்ளது. இதுகுறித்த விவரம் தற்போது செய்தியாக வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்த 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் வீரருக்கான விருது இந்திய அணியின் நட்சத்திர விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விராட் கோலி அந்த விருந்துக்கான கோப்பை மற்றும் தொப்பையை பெற்றுக்கொண்டார்.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாகவே தனது கரியரின் இறங்கு முகத்தில் இருந்து வந்த விராட் கோலிக்கு 2023-ஆம் ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்தது என்றே கூறலாம். ஏனெனில் கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும் விராட் கோலி 27 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார்.

அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் 27 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய அவர் 6 அரைசதம் மற்றும் 8 சதம் என 1377 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். அதோடு கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 11 போட்டியில் விளையாடிய விராட் கோலி 765 ரன்கள் குவித்திருந்ததுகுறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை முதல் போட்டியிலேயே கிறிஸ் கெயிலின் மாபெரும் சாதனையை சமன் செய்த – அமெரிக்க வீரர்

இதன் காரணமாக அவருக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் வீரர் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதினை நான்காவது முறையாக அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தீவிரமாக தயாராகி வருகிறார்.

Advertisement