ஐபிஎல் 2024 தொடரில் முதல் கோப்பையை வெல்லும் என்று பார்க்கப்பட்ட பெங்களூரு கிரிக்கெட் அணி தொடர்ந்து 17வது வருடமாக வெறும் கையுடன் வெளியேறியது. இந்த வருடம் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவித்த பெங்களூரு கடைசி 6 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றது. குறிப்பாக நடப்பு சாம்பியன் சென்னையை நாக் அவுட் செய்த பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஆனால் அந்த வெற்றியை கோப்பையை வென்றதற்கு நிகராக கொண்டாடிய பெங்களூரு அணி எலிமினேட்டரில் ராஜஸ்தானிடம் தோல்வியை சந்தித்து வெளியேறியது. அப்போது சிஎஸ்கே அணியை தோற்கடித்து வெறித்தனமாக கொண்டாட்டினால் மட்டும் கோபையை வெல்ல முடியாது என்று அம்பாத்தி ராயுடு விமர்சித்தார். அத்துடன் சொந்த சாதனைக்காக விளையாடாமல் அணிக்காக விளையாடிருந்தால் இந்நேரம் ஆர்சிபி பல கோப்பைகளை வென்றிருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
புதிய கருத்து:
அது போக ஆரஞ்சு தொப்பியை வென்றால் மட்டும் ஐபிஎல் கோப்பையை வென்று விட முடியாது என்று அவர் விராட் கோலி மறைமுகமாக விமர்சித்திருந்தார். அவருடைய இந்த கருத்துக்கள் ஆர்சிபி ரசிகர்களிடம் ஏற்கனவே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விராட் கோலி உச்சகட்ட தரமான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதால் அது மற்ற ஆர்சிபி வீரர்கள் மீது பாரத்தை ஏற்படுத்துவதாக ராயுடு தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நேரலையில் கெவின் பீட்டர்சன், மயந்தி லாங்கர் ஆகியோருடன் அவர் பேசியது பின்ருமாறு. “விராட் கோலி போன்ற உச்சகட்ட தரத்தை கொண்ட ஜாம்பவான் நட்சத்திர வீரர் இருக்கும் அணியில் இளம் வீரர்கள் அதே தரத்திற்கு நிகராக செயல்படுவது மிகவும் கடினமாகும். ஏனெனில் அவர் தன்னுடைய அணியையும் தனது தரத்திற்கு நிகராக செயல்பட விரும்புவார்”
பீட்டர்சன்: “இல்லை. இது இளம் வீரர்களுக்கான எடுத்துக்காட்டு”
ராயுடு: “ஆனால் சில நேரங்களில் விராட் கோலியாக இருக்க முயற்சிப்பது பாரத்தை ஏற்படுத்தும்”
லாங்கர்: “ஆனால் ரஜத் படிடார் இம்முறை சிறப்பாக செயல்படவில்லையா?”
ராயுடு: “படிடார் அவராக மட்டுமே இருக்க முடியும். விராட் கோலியாக முடியாது. ஆர்சிபி நிர்வாகம் தங்கள் அணியில் 11 பேரும் விராட் கோலியாக இருக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு ஒரு விராட் கோலியுடன் தங்களது சொந்த பலம் பலவீனத்தை தெரிந்து வைத்துள்ள மற்ற 10 வீரர்கள் வேண்டும்”
இதையும் படிங்க: உங்களை மாதிரி ஜோக்கரை பாத்ததில்ல.. நேரலையில் நேருக்கு நேராக ராயுடுவை கலாய்த்த பீட்டர்சன்.. காரணம் என்ன?
“அவருடைய திறமைகளை நீங்கள் நன்றாக பயன்படுத்த வேண்டும். நீங்கள் முதல் சீசனிலேயே ஒருவர் போட்டியை வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்து மேட்ச் வின்னராக வளர்க்க வேண்டும். எனவே அது அணி நிர்வாகத்தின் வேலையாகும். அதே சமயம் விராட் கோலியும் தன்னுடைய தரத்தை கொஞ்சம் எளிதாக்கி கொள்ள வேண்டும். குறிப்பாக அவர் இளம் வீரர்களுக்கு ஊக்கமளித்து வளர உதவ வேண்டும்” என்று கூறினார்.



