ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நிறைவு பெற்றது. ரசிகர்களை 2 மாதமாக மகிழ்வித்த இந்த தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்று 3வது கோப்பையை முத்தமிட்டது. முன்னதாக இந்த தொடரின் ஆரம்பத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரு மாதமாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவித்ததால் முதல் அணியாக வீட்டுக்கு கிளம்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசி 6 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்ற அந்த அணி நடப்பு சாம்பியன் சென்னையை நாக் அவுட் செய்து வீட்டுக்கு அனுப்பியது. அந்த வெற்றியை கோப்பையை வென்றதற்கு நிகராக வெறித்தனமாக கொண்டாடிய பெங்களூரு 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குச் சென்றது. அதனால் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு எலிமினேட்டரில் ராஜஸ்தானிடம் தோற்று தொடர்ந்து 17வது வருடமாக சாம்பியன் பட்டத்தை தொட முடியாமல் வெளியேறியது.
கலாய்த்த பீட்டர்சன்:
அப்போது சிஎஸ்கே அணியை தோற்கடித்து வெறித்தனமாக கொண்டாடினால் மட்டும் கோப்பையை வென்று விட முடியாது என்று ஆர்சிபி அணிக்கு முன்னாள் வீரர் அம்பாத்தி ராயுடு பதிலடி கொடுத்தார். அத்துடன் ஆர்சிபி வீரர்கள் சொந்த சாதனைகளை தாண்டி அணிக்காக விளையாடினால் இந்நேரம் பல கோப்பைகளை வென்றிருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அது போக விராட் கோலியை போல ஆரஞ்சு தொப்பியை வென்றால் மட்டும் கோப்பையை வென்று விட முடியாது என்றும் ராயுடு விமர்சித்திருந்தார்.
அவருடைய இந்த அடுத்தடுத்த அதிரடியான விமர்சனங்கள் ஆர்சிபி ரசிகர்களிடம் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் சென்னையில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. அதில் தனது சொந்த ஊரான ஹைதராபாத் வெல்லும் என்ற நம்பிக்கையுடன் ஆரஞ்சு வண்ண உடையை அணிந்து ராயுடு வர்ணனை செய்தார்.
கடைசியில் கொல்கத்தா வெற்றி பெற்றதால் அங்கிருந்து சென்ற அவர் நீல வண்ண ஆடையை அணிந்து வந்து வர்ணனையை தொடர்ந்தார். அப்போது தொகுப்பாளினி மயந்தி லாங்கர் தெரிவித்தது பின்வருமாறு. “அவர் ஆரஞ்சு நிறத்திலிருந்து நீல நிறத்திற்கு மாறினார் என்ற உண்மையை கொண்டு வந்ததற்கு நன்றி” என்று மேத்தியூ ஹைடனிடம் கூறினார். அப்போது அருகில் ஆரம்பம் முதலே ஊதா வண்ண உடைய அணிந்திருந்த கெவின் பீட்டர்சன் பேசியது பின்வருமாறு. “குறைந்தபட்சம் நான் உறுதியாக ஒரே வண்ண உடையை அணிந்ததால் அது எனக்கே சொந்தமானது”
இதையும் படிங்க: நாக் அவுட்டில் முரட்டுத்தனமான ஓடும் வெங்கடேஷ் ஐயர்.. ரெய்னா போன்ற யாருமே செய்யாத மாஸ் சாதனை
“ஆனால் நீங்கள் (ராயுடு) ஒரு ஜோக்கர். எப்போதும் ஒரு ஜோக்கர்” என்று கூறினார். அதாவது ஹைதராபாத் தோல்வியை சந்தித்ததும் உடனடியாக உடையை மாற்றிய ராயுடு ஜோக்கரைப் போல் நடந்து கொண்டதாக பீட்டர்சன் நேருக்கு நேராக கலாய்த்தார். அதற்கு ராயுடு பதிலளித்த பின்வருமாறு. “நான் 2 அணிகளுக்கும் ஆதரவு தருகிறேன். நான் எப்போதும் நல்ல கிரிக்கெட்டுக்கு ஆதரவு கொடுப்பவன்” என்று சொல்லி சமாளித்தார்.



