அதுக்காக சாரி மன்னிச்சுடுங்க.. ஆர்சிபி ரசிகர்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட ஷேன் வாட்சன்

Shane Watson rcb
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மிகப்பெரிய எழுச்சி கண்டு வெற்றிக்காக போராடி வருகிறது. இந்த வருடம் முதல் 7 போட்டிகளில் 6 தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்த அந்த அணி புள்ளிப்பட்டியலில் ஒரு மாதம் 10வது இடத்தில் திண்டாடியது. அதனால் முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு கடைசி 6 போட்டிகளில் தொடர்ந்து 6 வெற்றிகளை பதிவு செய்தது.

குறிப்பாக கடைசி போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பிய பெங்களூரு 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. அதனால் மகளிரணியைப் போல இந்த வருடம் ஆடவர் அணியும் ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆர்சிபி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

வாட்சன் மன்னிப்பு:
இந்த சூழ்நிலையில் ஆர்சிபி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதாக ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். பெங்களூரு நகரில் நடைபெற்ற சமீபத்திய விழா ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் மேடை ஏறியதும் அங்கிருந்த பலரும் ஆர்சிபி, ஆர்சிபி என்று முழங்கி வரவேற்பு தெரிவித்தனர். அதனால் நெகிழ்ச்சியடைந்த வாட்சன் 2016 ஃபைனலில் பெங்களூரு தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்ததற்காக மன்னிப்பு கேட்பதாக ஆர்சிபி ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இன்றிரவு இங்குள்ள ஆர்சிபி ரசிகர்களிடம் நான் மிகுதியாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதற்கான காரணம் என்னவெனில் 2016ஆம் ஆண்டு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியாகும். அதில் வெற்றி பெறுவதற்கு நான் முடிந்தளவுக்கு சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துவதற்கு தயாராக இருந்தேன்”

- Advertisement -

“ஆனால் அன்று நான் ஒரு மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தினேன். அது இறுதிப் போட்டியில் பந்து வீச்சில் வந்தது. அது 2016 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி இழப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது” என்று கூறினார். அதாவது 2016 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஷேன் வாட்சன் ஹைதராபாத்துக்கு எதிராக 4 ஓவரில் 61 ரன்கள் வாரி வழங்கினார்.

இதையும் படிங்க: டாலர் நோட்டுக்களால் பாகிஸ்தான் மக்களை இழிவுப்படுத்திய அசாம் கான், பாபர் அசாம்? ரசிகர்கள் கொதிப்பு

அதைத் தொடர்ந்து 209 ரன்களை துரத்திய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 54, கெயில் 76 ரன்கள் அடித்து அற்புதமான துவக்கத்தை கொடுத்ததால் ஆர்சிபி கண்டிப்பாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்ததாக வந்த ஏபி டீ வில்லியர்ஸ் 5, கேஎல் ராகுல் 11 ரன்களில் அவுட்டான நிலையில் வாட்சனும் 11 (9) ரன்களில் அவுட்டாகி 8 ரன்கள் வித்யாசத்தில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமானார். அதற்கு தற்போது 8 வருடங்கள் கழித்து அவர் மன்னிப்பு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement