Yuvraj Singh :யுவராஜ் இப்படி செல்லவேண்டியவரே இல்லை – ரோஹித் சர்மா

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் நேற்று தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன்படி யுவராஜ் சிங் நேற்று பத்திரிக்கை

rohith
- Advertisement -

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் நேற்று தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன்படி யுவராஜ் சிங் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது : நான் இதுவரை 400க்கும் மேற்பட்ட போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்று விளையாடி அது எனது அதிர்ஷ்டம்.

yuvraj 3

பல போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடி உள்ளேன். அதில் நிறைய போட்டிகள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாகவும் மறக்க முடியாத போட்டிகள் யாவும் இருக்கின்றன. அந்த வகையில் 2002ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் கோப்பை மற்றும் 2011ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான உலக கோப்பையின் இறுதி போட்டி என்னால் மறக்க முடியாத போட்டிகளாகும் என்றும் கூறினார்.

- Advertisement -

இந்நிலையில் யுவராஜ் சிங்கின் ஓய்வு குறித்து இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் பதிவிட்டதாவது : அதாவது ஒரு விடயத்தை இழக்கும் வரை அதன் அருமை யாருக்கும் தெரியாது அதே போல தான் உங்களது ஓய்வும் இருக்கப்போகிறது. மேலும் உங்களை மிகவும் நேசிக்கிறேன் சகோதரா.

Yuvraj

இருப்பினும் உங்களை மிகச் சிறந்த முறையில் வழி அனுப்பி இருக்க வேண்டும் ஆனால் அது நடைபெறாமல் போனது எனக்கு வருத்தம் என்று ரோகித் சர்மா அந்த டிவீட்டில் தெரிவித்துள்ளார். இந்த ட்விட் யுவராஜ் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. யுவராஜின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பினால் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலகளவில் உள்ள யுவராஜின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement