INDIA : பயிற்சி போட்டியில் தோல்வி அடைந்ததும் நீங்களே ஒரு முடிவை எடுக்காதீங்க – சச்சின் பேட்டி

இந்திய அணி நேற்று முன்தினம் நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டு

sachin
- Advertisement -

இந்திய அணி நேற்று முன்தினம் நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே குவித்தது. அதுவும் குறிப்பாக துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

rohith

- Advertisement -

அதனைத் தொடர்ந்து வந்த கோலி 18 ரன்களும் ராகுல் 6 ரன்களும் தோனி 17 ரன்கள் எடுத்து ஏமாற்றினர். பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோர் ஆறுதல் அளிக்கும் வகையில் ஆடினர். பிறகு 37 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் அடித்து நியூசிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்றது. இந்த பயிற்சி போட்டி தொடங்குவதற்கு முன் இந்திய அணி பல தொடர்களாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சி போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் பேட்டி ஒன்றை அளித்தார். அதில் சச்சின் கூறியதாவது : இந்திய அணி நியூசிலாந்திற்கு எதிரான பயிற்சி போட்டியில் தோல்வி அடைந்ததை யாரும் பெரிய அளவில் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் போட்டியில் வெற்றி தோல்வி என்பது சகஜம்.

Kohli

மேலும், இந்த உலகக் கோப்பைத் தொடர் ஒரு பெரிய தொடராகும். ஏனெனில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோத வேண்டும். எனவே இந்த தொடரில் வெற்றி தோல்வி என்பது இருக்கும். ஆனால் இந்திய அணி வெற்றி பெறுவதை நாம் அதிகம் எதிர்பார்க்கிறோம் என்பதனாலேயே இந்த ஏமாற்றம். இன்னும் தொடர் ஆரம்பமாகததால் இந்த தோல்வி பற்றி நாம் பெரிதாக யோசிக்க வேண்டியதில்லை. என்று சச்சின் கூறினார்.

Advertisement