அடிச்சு கேட்டாலும் சொல்லிடாதீங்க.. 2023 உ.கோ பற்றி இந்திய ரசிகர்களுக்கு.. தோனி கலகலப்பான வேண்டுகோள்

MS Dhoni
- Advertisement -

ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. வரும் நவம்பர் 19 வரை உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் மட்டுமே நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் உள்யிட்ட உலகின் டாப் 10 அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.

அந்த அணிகளுக்கு சவாலை கொடுத்து நல்ல ஃபார்மிலும் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாகவும் இருக்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உச்சக்கட்டமாக காணப்படுகிறது. மேலும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்த முறை விளையாடுவது கடினம் என்று பார்க்கப்படுவதால் இம்முறை கோப்பையுடன் விடைபெறுவார்களா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

- Advertisement -

தோனியின் விளம்பரம்:
இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் இந்தியா வெல்லும் என்று யார் கேட்டாலும் சொல்லி விடாதீர்கள் என முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதாவது கடந்த 2011ஆம் ஆண்டு பிரபல பிஸ்கட் நிறுவனம் முதல் முறையாக தங்களுடைய பிஸ்கட்டை இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில் தோனி தலைமையிலான இந்திய அணியும் சிறப்பாக செயல்பட்டு 28 வருடங்கள் கழித்து கோப்பையை வென்றது.

அந்த நிலைமையில் 2019 உலக கோப்பையுடன் ஓய்வு பெற்ற தோனி பல்வேறு விளம்பரங்களில் நடித்து வருவதை அறிவோம். அந்த வரிசையில் கடந்த வருடம் மீண்டும் அந்த பிரபல பிஸ்கட் நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய புதிய பிஸ்கட்டை அறிமுகப்படுத்தியது. அதன் விளம்பர தூதராக நடித்த தோனி 2011இல் இதே பிஸ்கட் அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்தியா வென்றது போல் இப்போது 2022 டி20 உலக கோப்பையில் என்ன நடக்கும் என்பதை இருந்து கொள்ளுங்கள் என சொன்னது ரசிகர்களிடம் பிரபலமானது.

- Advertisement -

ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் வழக்கம் போல வேலையை காட்டிய இந்திய அணியினர் செமி ஃபைனலில் படுதோல்வியை சந்தித்து வெளியேறினார். அதனால் கிண்டல்களுக்குள்ளான தோனி இம்முறை மீண்டும் அதே விளம்பரத்தில் அடித்து கூட கேட்டாலும் வெற்றி பெறும் வரை எதையும் சொல்லாதீர்கள் என்ற வகையில் ரசிகர்களிடம் ஜாலியாக பேசியது பின்வருமாறு. “நான் சொல்வதை கவனமாக கேளுங்கள். இந்தியாவின் வெற்றி வாய்ப்பை பற்றி பேசாதீர்கள்”

இதையும் படிங்க: பிரியாணி வேற லெவல்.. ஆனா இந்தியாவின் மைதாங்களில் தான் அந்த பிரச்சனை இருக்கு.. பாபர் கருத்து

“விஷயத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தினால் என்ன நடக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? அதனால் இப்போது எந்த வாய்ப்பையும் எடுக்காதீர்கள். எதையும்சொல்லாதீர்கள். குறிப்பாக முதல் போட்டியில் வென்றாலும், அவர்களை (பாகிஸ்தானை) தோற்கடித்தாலும், ஃபைனலுக்கு சென்றாலும் எதையும் சொல்லாதீர்கள். அதிலும் குறிப்பாக நாம் அனைவரும் விரும்புவது கிடைக்கும் வரை எதையும் சொல்லாதீர்கள்” என்று செய்தியாளர்களிடம் பேசுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement