- Advertisement -
ஐ.பி.எல்

பரிதாபம் – மும்பையின் கடைசி வெற்றிக்கு பின் கிரிக்கெட்டில் நிகழ்ந்த 6 மாற்றங்கள் – லிஸ்ட் இதோ

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து மும்பை நகரில் வெற்றிகரமான 4-வது வாரத்தை கடந்து பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த தொடரில் 5 வாரங்களாகியும் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யவில்லை. கடந்த வருடம் வரை எதிரணிகளை மிரட்டக் கூடிய ஒரு அணியாக கருதப்பட்ட மும்பை இந்த வருடம் ஹர்திக் பாண்டியா போன்ற ஒருசில முக்கிய வீரர்களை இழந்த காரணத்தால் முதல் வெற்றியையே பதிவு செய்ய முடியாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடுகிறது.

அதிலும் இதுவரை பங்கேற்ற முதல் 8 போட்டிகளிலும் தோல்வி அடைந்த அந்த அணி வரலாற்றிலேயே முதல் முறையாக வருடத்தின் முதல் 8 போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியை பதிவு செய்த முதல் அணி என்ற பரிதாப சாதனை படைத்துள்ளது. அதன் காரணமாகவே ஐபிஎல் 2022 தொடரில் லீக் சுற்றுடன் முதல் அணியாக மும்பை வெளியேறுவது உறுதியாகியுள்ளது. இதனால் அந்த அணி பல விமர்சனங்களுக்கும் கேலி கிண்டல்களுக்கும் உள்ளாகி நிற்கும் இந்த நிலையில் அந்த அணியின் கடைசி வெற்றிக்குப்பின் கிரிக்கெட்டில் நிகழ்ந்த முக்கிய மாற்றங்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. எம்எஸ் தோனி விலகல்: கடந்த 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் இதர அணிகளை காட்டிலும் சென்னையின் ஒரே நிரந்தர கேப்டனாக இருந்த எம்எஸ் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகி சாதாரண வீரராக விளையாடுகிறார். இந்தியாவைப் போலவே சென்னைக்கும் தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக 4 கோப்பைகளை வென்று கொடுத்து 2-வது வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என சாதனை படைத்த அவர் போட்டிகள் அடிப்படையில் அதிக வெற்றிகளை பதிவு செய்து ரோஹித்தை விட வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ள அவர் 40 வயதை கடந்த காரணத்தால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு காலம் காலமாக வகித்த கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைத்து அவருக்கு உதவியாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் நடப்பு சாம்பியனாக விளையாடும் சென்னையும் தொடர் தோல்விகளால் தவித்தாலும் மும்பை அளவுக்கு இல்லாமல் 2 வெற்றிகளை பதிவு செய்து மானத்தை காற்றில் பறக்க விடாமல் இருந்து வருகிறது.

- Advertisement -

2. ஏபிடி ஓய்வு: உலகின் எப்பேர்பட்ட தரமான பந்துவீச்சாளர் எப்படிப் வீசினாலும் அதை மைதானத்தின் நாலா புறமும் அடிக்கும் திறமை பெற்ற தென்ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் வயது காரணத்தால் ஓய்வு பெற்றுள்ளார். கிரிக்கெட்டுக்கு பல புதிய ஷாட்களை அறிமுகப்படுத்தி கிரிக்கெட்டை வேற லெவலுக்கு எடுத்து சென்ற அவரை ரசிகர்கள் 360 டிகிரி பேட்ஸ்மேன் என கொண்டாடும் நிலையில் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக அவர் பங்கேற்கவில்லை.

3. விராட் விலகல்: 2014 முதல் டெஸ்ட் கேப்டனாகவும் 2017 முதல் 3 வகையான இந்தியாவின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்த விராட் கோலி கடந்த ஜனவரியில் படிப்படியாக அனைத்து கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகி சாதாரண வீரராக விளையாட துவங்கியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 40 வெற்றிகளுடன் வெற்றிகரமான ஆசிய கேப்டன் என பெயரெடுத்த அவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலும் முறையே 68.4% மற்றும் 64.58% வெற்றி விகிதங்களுடன் இந்திய கிரிக்கெட்டின் ஒரு வெற்றிகரமான கேப்டனாக விடை பெற்றுள்ளார்.

- Advertisement -

உலகக்கோப்பையை வாங்கித் தரவில்லை என்ற விமர்சனத்திற்கு உள்ளாகி வந்த அவர் கடந்த அக்டோபர் மாதம் டி20 கேப்டன் பதவியில் இருந்து மட்டும் விலகிய நிலையில் அதைப் பயன்படுத்திய பிசிசிஐ ஒருநாள் கேப்டன் பதவியை பறித்து ரோஹித் சர்மாவிடம் வழங்கியதால் மனமுடைந்த அவர் இறுதியில் டெஸ்ட் கேப்டன் பதவியிலும் விலகியதால் தற்போது 3 வகையான இந்திய அணிக்கும் ரோகித் சர்மா முழுநேர கேப்டனாக செயல்படத் துவங்கியுள்ளார்.

4. மண்ணை கவ்விய இந்தியா: பரம எதிரியான பாகிஸ்தானிடம் உலக கோப்பையில் ஒருமுறைகூட தோற்றதே கிடையாது என்ற நிலைமையில் கடந்த அக்டோபரில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா உலக கோப்பையில் அந்த அணிக்கு எதிராக போட்டு வந்த வெற்றிநடை முடிவுக்கு வந்தது.

- Advertisement -

5. ஆஸ்திரேலியா டி20 சாம்பியன்: 1987, 1999, 2003, 2007, 2015 என 5 உலகக்கோப்பைகள் 2007, 2009இல் சாம்பியன்ஸ் ட்ராபி, டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சரித்திர வெற்றிகள், நம்பர் ஒன் டீம் என ஏறக்குறைய அனைத்தையும் அடைந்து கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக வலம் அந்த ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பையை மட்டும் வெல்ல முடியாமல் தவித்து வந்தது. அந்த நிலைமையில் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அபாரமாக செயல்பட்ட ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா வரலாற்றில் முதல் டி20 உலகக் கோப்பையை வென்று அந்த ஒரே குறையையும் நிவர்த்தி செய்து கொண்டது.

இதையும் படிங்க : DCvsKKR : எவ்ளோ ஸ்ட்ராங் டீம் கொல்கத்தா! ஆனா இப்படி மோசமா தோக்க என்ன காரணம்? – விவரம் இதோ

6. வங்கதேச கொடி: கடந்த பிப்ரவரியில் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்ற வங்கதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்ற நிலையில் அதில் அபாரமாக செயல்பட்டு 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்று சாதனை படைத்தது. அதன் காரணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதுவும் அதன் சொந்த மண்ணில் ஒரு கிரிக்கெட் தொடரை வென்று வங்கதேசம் புதிய வரலாறு படைத்தது.

- Advertisement -
Published by