விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட நட்சத்திர இந்திய வீரர்களும் அவர்களுக்கு மிகவும் பிடித்த தெருவோர உணவுகளும் – ஒரு ருசிகர பதிவு

Kohli
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது நாட்டுக்காக தொடர்ச்சியாக உழைத்து விளையாடும் வீரர்களுக்கு இடையிடையே நல்ல ஓய்வும் புத்துணர்ச்சியும் அவசியமான ஒன்றாகும். அதுபோக அவர்களும் மனிதர்கள் தானே என்பதன் அடிப்படையில் எந்த ஒரு அம்சத்திலும் அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு அவர்கள் உண்ணும் உணவு தான் தேவையான சக்தியை கொடுத்து திறமையாக செயல்படுவதற்கு காரணமாகிறது. அந்தவகையில் சிறுவயதிலிருந்தே தங்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளை உண்டு வளரும் கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகும்போது அவர்கள் உண்ணும் உணவில் நிறைய கட்டுப்பாடுகளையும் வரம்புகளையும் சந்திக்க நேரிடும்.

ஏனென்றால் கண்ட உணவை சாப்பிட்டால் திடீரென்று உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு போட்டியிலிருந்து விலகும் நிலை ஏற்படலாம். அத்துடன் இந்த நவீன கிரிக்கெட்டில் விளையாடும் அத்தனை வீரர்களும் நல்ல உடல் தகுதியுடன் ஃபிட்டாக இருந்தால் தான் அணியிலேயே இடம் கிடைக்கும் என்ற நிலைமையும் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தங்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளை உண்பதற்கு அவர்களே கட்டுப்பாடு விதிக்கும் பரிதாப நிலையும் ஏற்படுகிறது. இருப்பினும் மனிதனின் 5 புலன்களில் முக்கிய புலனான நாவை குறிப்பாக சாப்பாட்டு விசயத்தில் அடக்கி ஆள்வது கிரிக்கெட் வீரர்களுக்கும் கடினமான ஒன்றாகும்.

- Advertisement -

பிடித்த உணவுகள்:
அதன் காரணமாக உடல் தகுதியை நிர்வகிக்கக் கூடிய உணவுகளையும் இந்தியாவுக்காக விளையாடும்போது அணி நிர்வாகம் அனுமதித்துள்ள உணவுகளையும் தாண்டி தங்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளை நட்சத்திர வீரர்கள் இடைவெளி கிடைக்கும் போது ருசித்து விடுவார்கள். குறிப்பாக இந்தியாவுக்காக விளையாடாத நாட்களில் எவ்வளவு கிலோ மீட்டராக இருந்தாலும் அதற்காக பயணித்து தேடி சென்று தெருவோர கடையாக இருந்தாலும் தங்களுக்கு பிடித்த உணவுகளை ருசிக்காமல் விடமாட்டார்கள். அந்த வகையில் இந்தப் பட்டியலில் சில நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர்களையும் அவர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளை பற்றி பார்ப்போம்:

6. யுஸ்வேந்திர சஹால்: தற்போதைய இந்திய அணியின் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக வலம் வரும் இவர் களத்திலும் களத்திற்கு வெளியேயும் எப்போதுமே ஜாலியான மனிதராக ரசிகர்களை மகிழ்விப்பவராக இருக்கக் கூடியவர்.

- Advertisement -

அதேப்போல் தாம் ஒரு சாப்பாட்டு பிரியர் என்று அவரே பலமுறை சஹால் டிவி எனும் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். அந்த வகையில் நிறைய வடநாட்டு உணவுகளை விரும்பி உண்ணும் இவர் அனைத்தையும் விட “பானிபூரி” தனக்கு மிகவும் பிடிக்கும் என்று நிறைய தருணங்களில் கூறியுள்ளார்.

5. முஹம்மது ஷமி: அதிரடியான வேகத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் திறமை பெற்ற இவர் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை விரும்பி உண்ணக் கூடியவராக உள்ளார். அந்த வகையில் பெரும்பாலான இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த “பிரியாணி உணவு” இவரின் விருப்பமாக இருந்து வருகிறது.

- Advertisement -

அதிலும் உள்ளூர் கிரிக்கெட்டில் இத்தனை விக்கெட்டுகளை எடுத்தால் பிரியாணி வாங்கித் தர வேண்டும் என்பது போன்ற பந்தயங்களில் இவர் ஈடுபட்டதாக அவரது நண்பர்கள் கூறுகிறார்கள். அத்துடன் கடந்த வருடம் பக்ரீத் திருநாளன்று முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு பிரியாணி பார்சல் செய்து பரிசாக விருந்து அனுப்பியது சமூக வலைதளங்களில் வைரலானது.

3. ரோஹித் சர்மா: இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் மற்றும் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா அசால்ட்டாக சிக்சர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டு வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் திறமையானவர்.

- Advertisement -

அதேபோல் சைவ மற்றும் அசைவ உணவுகளை ஒரு கை பார்க்க கூடியவராக இருக்கும் இவர் மும்பையைச் சேர்ந்தவர் என்பதால் அங்கு புகழ்பெற்ற “வட பாவ், பாவ் பாஜி, சமோசா பாவ்” போன்ற உணவுகள் இவரின் மானசீக தெருவோர உணவுகளாக இருக்கிறது. மேலும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வருடமும் சீசன் முடிந்த பின் அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் மேற்குறிப்பிட்ட உணவுகளுடன் கூடிய பார்ட்டியை அவர் அளித்து வருவதை தீவிரமான மும்பை ரசிகர்கள் அறிவார்கள்.

2. விராட் கோலி: ஜாம்பவான் சச்சினுக்கு பின் 20000க்கும் மேற்பட்ட ரன்களையும் 70 சதங்களையும் அடித்து இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக உருவெடுத்துள்ள இவர் ஆரம்ப காலங்களில் அதிகப்படியான உணவுகளை உண்டு சற்று குண்டாக இருந்ததால் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால் அடுத்த சில வருடங்களில் கடினமாக உழைத்த அவர் தாம் ஃபிட்டாக மாறியது மட்டுமல்லாமல் கேப்டனாக பொறுப்பேற்றதும் இந்திய அணியில் விளையாடும் அத்தனை பேரும் பிட்டாக இருக்க வேண்டுமென்ற கலாச்சாரத்தை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர்.

அந்த வகையில் உணவுகளை சாப்பிடுவதில் கடுமையான வரம்புகளை தனக்கென்றே வைத்துள்ள இவர் அவ்வப்போது தனக்கு மிகவும் பிடித்த “ச்சோலே பட்சர்” உணவை வயிறு முழுக்க சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்த பின் அதை சரிசெய்ய ஒருசில மணி நேரங்கள் உடற்பயிற்சி கூடத்தில் நேரத்தை செயல்படுவேன் என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதிலும் இந்தியாவுக்காக விளையாடாத தருணங்களில் டெல்லியில் உள்ள ராஜோரி கார்டன் பகுதியில் இருக்கும் உணவகத்தில் ரெகுலராக தனது மனைவியுடன் அந்த உணவை சாப்பிடுபவராகவும் விராட் கோலி உள்ளார்.

2. எம்எஸ் தோனி: இந்தியாவுக்கு 3 விதமான உலக கோப்பைகளை வென்ற மிகச்சிறந்த கேப்டனாக போற்றப்படும் இவர் தான் இந்திய கிரிக்கெட்டில் கடந்த 2008இல் முதல் முறையாக உடல் தகுதியை ஒரு அங்கமாக கொண்டு வந்தார்.

அதன் காரணமாக போட்டியின்போது தமக்குப் பிடித்த உணவுகளை அறவே தவிர்க்கும் இவர் எஞ்சிய நாட்களில் தமக்கு மிகவும் பிடித்த “பட்டர் சிக்கன்” உணவை ஒரு கை பார்ப்பவராக உள்ளார்.

1. சச்சின் டெண்டுல்கர்: வரலாற்றின் மிகச்சிறந்த கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் முதன்மையானவராக போற்றப்படும் இவர் சாப்பாட்டு பிரியர் என்பதை எப்போதுமே கூச்சம் இல்லாமல் கூறியுள்ளார்.

நிறைய தருணங்களில் தமது வீட்டில் உள்ள சமைலறைக்கு நேரடியாக தாமே சென்று உணவு சமைத்து சாப்பிடும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள அவருக்கு மும்பையில் மிகவும் பிரபலமான “வட பாவ்” உணவு பிடித்ததாக இருக்கிறது. குறிப்பாக சிறுவயதில் பயிற்சிகளை துவங்கிய சிவாஜி பார்க் நகரில் அதை சாப்பிட துவங்கியதாக அவரே கூறியுள்ளார்.

Advertisement