ஐபிஎல் 2023 சீசனில் கோப்பைய வெல்ல சிஎஸ்கே தக்க வைக்க வேண்டிய 6 வீரர்கள் இதோ

CSK-1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது கோப்பையை வென்று பரம எதிரியான மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்து சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று அந்த அணி ரசிகர்கள் உறுதியாக நம்பினர். ஆனால் ஆரம்பத்திலேயே 14 கோடிக்கு வாங்கப்பட்ட தீபக் சாராயத்தில் விலகியது, தொடர் துவங்க ஒருசில நாட்கள் முன்பாக தேவையின்றி அனுபவமில்லாத ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன்ஷிப் பொறுப்பை ஒப்படைத்து எம்எஸ் தோனி திரும்ப வாங்கியது, மோசமான பேட்டிங் – பவுலிங் என எதிர்பாராத அம்சங்கள் அந்த அணிக்கு வரலாற்று தோல்வியை பரிசளித்தது.

CSK MS Dhoni Ravindra Jadeja

- Advertisement -

ஆம் ஜடேஜா தலைமையில் வரலாற்றில் முதல் முறையாக முதல் 4 போட்டிகளில் தோல்வியடைந்த சென்னை ஒட்டுமொத்தமாக பங்கேற்ற 14 போட்டிகளில் உச்சபட்சமாக 10 தோல்விகளை பதிவு செய்து 9-வது இடத்தை பிடித்தது. அதனால் 2020க்கு பின் மீண்டும் பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல முடியாத அவமானத்தை சந்தித்த அந்த அணி கோப்பையை வெல்ல முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.

இருப்பினும் தோல்வி என்பது விளையாட்டில் ஒரு அங்கம், யானைக்கும் அடி சறுக்கும் என்றவகையில் இந்த வருடம் கற்ற பாடங்களை மனதில் வைத்துக்கொண்டு அடுத்த வருடம் கோப்பையை வெல்ல அந்த அணி நிர்வாகம் இப்போதே தயாராகியுள்ளது. இந்த நிலைமையில் அடுத்த 2023 சீசனில் வெற்றி கோப்பையை முத்தமிட சென்னை தக்கவைக்க வேண்டிய 6 வீரர்களை பற்றி பார்ப்போம்.

1. எம்எஸ் தோனி: சென்னை இல்லாமல் தோனி இருக்கலாம். ஆனால் தோனி இல்லாமல் சென்னை இருக்க முடியாது என்பதே நிதர்சனம். கடந்த 2008 முதல் தனது அற்புதமான கேப்டன்ஷிப், அதிரடியான பினிஷிங், மின்னல் வேக விக்கெட் கீப்பிங், சிறந்த வீரர்களை தேர்வு செய்து அவர்களை சிறப்பாக வழி நடத்துவது என ஒரு ஆல்ரவுண்டரை காட்டிலும் ஏராளமான பணிகளை செய்யும் கேப்டன் எம்எஸ் தோனி அடுத்த வருடம் தமிழக ரசிகர்களுக்காக சென்னையில் விளையாடுவேன் என்று உறுதி அளித்துள்ளார்.

- Advertisement -

MS Dhoni vs MI

சென்னைக்கு 4 கோப்பைகளை வென்று கொடுத்து 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக ஜொலிக்க வைத்துள்ள அவர் தற்போது 40 வயதை கடந்து விட்டாலும் 2020, 2021 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் சதமடிக்க முடியாமல் தவித்த நிலையில் இந்த வருடம் முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து பார்முக்கு திரும்பியுள்ளார். ஒருவேளை பேட்டிங், விக்கெட் கீப்பிங்கில் சோடை போனாலும் அவரை போன்ற கேப்டன் யாருமில்லை என்பதால் இதயமாக கருதப்படும் அவரை நிச்சயம் சென்னை தக்கவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2. ரவீந்தர ஜடேஜா: இந்த வருடம் தோனியை விட 16 கோடி என்ற பெரிய தொகைக்கு தக்க வைக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா அனுபவமில்லாத கேப்டன்ஷிப் அழுத்தத்தால் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மொத்தமாக சொதப்பியது அவரின் தவறே கிடையாது. ஏனெனில் சமீபத்திய இலங்கை தொடரில் கூட ஆல்-ரவுண்டராக மிரட்டிய அவர் கடந்த 2021இல் ஒரு ஆல்ரவுண்டராகவும் தோனி தடுமாறிய சமயத்தில் பினிஷராகவும் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டார் என்று அனைவரும் அறிவோம்.

- Advertisement -

Dhoni

அதைவிட யார் என்ன சொல்வார் என்பதைப் பற்றி கவலைப்படாமல் கேப்டன்ஷிப் பொறுப்பை மீண்டும் அவர் தோனியிடம் வழங்கியது மிகப்பெரிய பாராட்டுக்குரிய அம்சமாகும். இறுதியில் காயத்தால் விலகிய அவர் அடுத்த வருடம் சாதாரண வீரராக கேப்டன்ஷிப் அழுத்தமின்றி விளையாடுவார் என்பதால் சென்னை அவரை நிச்சயம் தக்க வைக்க வேண்டும். ஏனெனில் ஆரம்ப காலங்களில் ஆல்-ரவுண்டராக தடுமாறிய அவர் கடந்த 2019 உலகக்கோப்பைக்குப் பின் உச்சகட்ட பார்மில் இருக்கிறார்.

3. ருதுராஜ் கைக்வாட்: கடந்த 2021 சீசனில் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று சென்னை 4-வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய இவர் இந்த வருடம் 6 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட நிலையில் ஆரம்பத்தில் தடுமாறி இறுதிவரை 13 இன்னிங்சில் 366 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவரின் சுமாரான பேட்டிங் சென்னைக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தினாலும் ஹைதெராபாத்க்கு எதிராக 99 ரன்கள் எடுத்த இவர் இளம் வீரராகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் உள்ளார்.

- Advertisement -

Ruturaj

மேலும் உள்ளூர் போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்த அனுபவம் நிறைந்த இவர் தோனிக்கு பின் அடுத்த கேப்டனாகும் தகுதி பெற்றுள்ளார் என்று முன்னாள் வீரர் சேவாக் பாராட்டியுள்ளதை மனதில் வைத்து சென்னை இவரை நிச்சயம் தக்க வைத்தால் நல்லதே நடக்கும்.

4. டேவோன் கான்வே: சென்னைக்கு எப்போதுமே ஆஸ்திரேலிய, நியூசிலாந்து தொடக்க வீரர்கள் ராசியானவர்கள். அந்த வகையில் இந்த வருடம் முதல் போட்டியில் சொதப்பினார் என்பதற்காக பெஞ்சில் அமர வைக்கப்பட்ட இவர் அதன்பின் கிடைத்த வாய்ப்பில் தொடர்ச்சியாக 3 அரை சதங்கள் அடித்து எனக்கு ஏன் முழு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று சென்னை நிர்வாகத்தை வருந்த வைத்தார்.

Devon Conway

அதுவும் ருதுராஜ் உடன் 182 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இவரை மேத்தியூ ஹெய்டன், மைக் ஹசி, ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகிய சென்னை வெளிநாட்டு தொடக்க வீரர்கள் வரிசையில் இணைத்துள்ளார் என்று முன்னாள் வீரர்கள் பாராட்டினர். அந்த வகையில் 6 இன்னிங்சில் 236 ரன்கள் அடித்த இவரை கண்டிப்பாக சென்னை தக்க வைத்து அடுத்த வருடம் வாய்ப்பளிக்க வேண்டும்.

5. தீபக் சஹர்: சென்னைக்காக விளையாடி பவர்ப்ளே ஸ்பெஷலிஸ்ட் என பெயரெடுத்து சர்வதேச டி20 போட்டிகளில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பந்து வீச்சாளராக சாதனை படைத்த இவருக்கு அதிர்ஷ்டம் 14 கோடிகளால் தேடி வந்தாலும் காயம் என்ற பெயரில் துரதிஷ்டவசமாக போனது.

chahar

சமீப காலங்களில் சென்னையின் முதன்மை பவுலராக உருவெடுத்துள்ள இவர் இல்லாமல் இந்த வருடம் அந்த அணி எவ்வளவு பின்னடைவை சந்தித்தது என்பதை பார்த்தோம். தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வரும் இவரையும் சென்னை தக்க வைத்தால்தான் பந்துவீச்சு பலமாகும்.

6. மொய்ன் அலி: கடந்த வருடம் அசத்தலாக செயல்பட்ட இவர் இந்த வருடம் 8 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட நிலையில் அணியுடன் தாமதமாக இணைந்தது, இடையில் காயமடைந்தது போன்ற அம்சங்களால் 10 போட்டிகளில் 244 ரன்களுடம் 8 விக்கெட்டுகளும் எடுத்து சுமாராக செயல்பட்டார்.

Moin Ali

இருப்பினும் 6.63 என்ற சூப்பரான எக்கனாமியில் பந்துவீசிய இவர் குஜராத்துக்கு எதிரான கடைசி போட்டியில் தனி ஒருவனாக சொல்லி அடித்து 96 ரன்கள் விளாசியதே தாம் இன்னும் சோடை போகவில்லை என்று காட்டியது. எனவே இவரையும் தாராளமாகச் சென்னை மீண்டும் நம்பி தக்க வைக்கலாம்.

Advertisement