ஐபிஎல் சம்பளமாக 10+ கோடிகளை பெற்றும் டி20 உ.கோ இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாத 6 இந்திய வீரர்கள்

Samson-1
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட அணியுடன் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட தயாராகி வருகிறது. இந்த தொடரில் இடம் பிடித்துள்ள 15 வீரர்களும் ஏதோ ஒரு வகையில் தங்களது திறமையை வெளிப்படுத்தி தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்த்ததால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். முன்னதாக ஒரு காலத்தில் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் இந்தியாவுக்கு தேர்வான காலம் கடந்த 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் தொடரால் தலைகீழாக மாறியுள்ளது. அதாவது இப்போதெல்லாம் ரஞ்சி கோப்பை புறக்கணிக்கப்பட்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற லட்சியத்துடன் அதற்கு முந்தைய சீசனில் சிறப்பாக செயல்பட்டதால் ஐபிஎல் 2022 தொடரில் திறமைக்கு பரிசாக கோடிகளை சம்பளமாக அள்ளிய சில வீரர்கள் முதன்மை லட்சியமான உலக கோப்பையில் விளையாடும் எண்ணத்தில் வெற்றி பெற முடியவில்லை. குறிப்பாக 10+ கோடி என்ற பெரிய தொகையை சம்பாதித்த 6 வீரர்கள் உலகக்கோப்பை அணியில் ஸ்டேண்ட் பை லிஸ்டில் கூட தங்களுக்கென்று ஒரு இடத்தை சம்பாதிக்க முடியாமல் போனதை பற்றி பார்ப்போம் (இதில் ஜடேஜா காயத்தால் வெளியேறியவர்):

6. இஷான் கிஷன்: சமீப காலங்களில் அதிரடியான தொடக்க வீரராக தன்னை அடையாளப்படுத்தி இந்தியாவுக்காக அறிமுகமான இவர் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் 15.25 கோடிக்கு மும்பை அணியால் மீண்டும் வாங்க பட்டார்.

MI vs RR Ishan Kishan

ஆனால் அதிகப்படியான தொகைக்கு வாங்கப்பட்டதால் எப்படியாவது சிறப்பாக செயல்பட்டாக வேண்டுமென்ற தேவையற்ற அழுத்தத்தில் சிக்கி திண்டாடிய அவர் பார்மை இழந்து விமர்சனங்களை சந்தித்தார். அதன் பின் நடந்த தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் விளையாடிய போதிலும் அவர் உலகக்கோப்பை அணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு அசத்தவில்லை.

- Advertisement -

5. மயங் அகர்வால்: வளர்ந்து வரும் இளம் வீரராக தன்னை நிரூபித்து இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்று அதை தக்கவைக்க முடியாமல் கோட்டைவிட்ட இவர் ஐபிஎல் 2022 தொடரில் பஞ்சாப் அணி நிர்வாகம் கொடுத்த அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியால் பார்மை இழந்து ரன்கள் குவிக்க திண்டாடினார்.

agarwal 1

அதனால் 12 கோடிகளை சம்பாதித்த இவர் இதுவரை இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டிலும் விளையாடாததை போல உலக கோப்பையிலும் இடம் பெறவில்லை.

- Advertisement -

4. ஷார்துல் தாகூர்: ரசிகர்களால் லார்ட் என கொண்டாடப்படும் இவர் கடந்த சீசன்களில் சென்னை அணியில் அற்புதமாக செயல்பட்டு இந்தியாவுக்காக அறிமுகமாகி அசத்தினாலும் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்குவதை வழக்கமாக வைத்திருப்பதால் நிலையான இடம் பிடிக்க தடுமாறுகிறார்.

Thakur

அதன் காரணமாகவே நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 10.75 கோடிக்கு டெல்லி அணி போட்டி போட்டு வாங்கிய இவர் சுமாராக செயல்பட்டதால் உத்தேச இந்திய உலகக்கோப்பை அணியில் கூட இடம் பிடிக்க முடியவில்லை.

- Advertisement -

3. பிரஸித் கிருஷ்ணா: நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 10 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட இவர் ராஜஸ்தான் அணிக்காக கலவையான செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஃபைனல் வரை செல்ல ஒரு காரணமாக அமைந்தார்.

அதனால் ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவருக்கு தேர்வுக்குழு டி20 கிரிக்கெட்டில் இன்னும் வாய்ப்பு கொடுக்க யோசிக்கிறது. ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டிலேயே சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரன்களை வாரி வழங்கிய இவர் இன்னும் டி20க்கு தயாராகவில்லை என்பதால் உலக கோப்பை அணியிலும் இடம் பிடிக்க முடியவில்லை.

2. ஆவேஷ் கான்: லக்னோ அணிக்காக ரசிகர்கள் ஆச்சரியப்படும் வகையில் 10 கோடி வாங்கப்பட்ட இவரும் கலவையான செயல்பாடுகளை வெளிப்படுத்திய நிலையில் இந்தியாவுக்காக கிடைத்த வாய்ப்புகளில் கொஞ்சம் கூட மெனக்கெட்டு பந்து வீசாமல் ரன்களை வாரி வழங்கினார்.

Avesh Khan

குறிப்பாக சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரன்களை வாரி வழங்கிய இவர் ஆசிய கோப்பையில் மோசமாக செயல்பட்டது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதனால் ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளான அவரை டி20 உலகக் கோப்பை அணியில் இடம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் தேர்வுக்குழு அதிரடியாக நீக்கியுள்ளது.

1. சஞ்சு சாம்சன்: கடந்த பல வருடங்களாக ஐபிஎல் தொடரில் கடினமாக உழைத்து இந்தியாவுக்காக விளையாட போராடி வரும் இவர் இந்த வருடம் ராஜஸ்தான் அணிக்காக 14 கோடிக்கு 400+ ரன்களைக் குவித்து 2008க்குப்பின் முதல் முறையாக பைனலுக்கு அழைத்துச் சென்று வாங்கிய சம்பளத்துக்கு அற்புதமாக செயல்பட்டார்.

Samson-1

அதனால் இந்தியாவுக்காக இருதரப்பு தொடர்களில் கிடைத்த வாய்ப்புகளில் அசத்திய இவரை சிறப்பாக செயல்பட்டும் வழக்கம் போல ரிஷப் பண்ட் என்ற சொதப்பல் வீரருக்காக கழற்றி விட்டது ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. அந்த வகையில் இந்தப் பட்டியலில் 10+ கோடிகளை வாங்கியும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடும் தகுதியுடைய ஒரே வீரராக இவர் திகழ்கிறார்.

Advertisement