இலங்கை அணிக்கெதிரான தொடரில் இடம்பெற்றிக்கும் 6 புதுமுக இந்திய வீரர்கள் – லிஸ்ட் இதோ

young
- Advertisement -

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியானது நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டிருக்கிகது. ஷிகர் தவானை கேப்டனாக கொண்ட இந்த அணியில் 5 பேக்கப் வீரர்களுடன் மொத்தம் 25 வீரர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதால், இலங்கை தொடருக்கான இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். அவர்கள் எதிர்பாரத்த்தை போலவே ஐபிஎல் தொடர்களில் தங்களது திறமையை வெளிக்காட்டிய பல இளம் வீரர்கள் இந்த அணியில் இடம் பிடித்து அசத்தியிருக்கின்றனர்.

indvssl

- Advertisement -

தழிழக வீரரான நடராஜன் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவரின் உடல் நிலை ஃபிட்டாக இல்லாத காரணத்தினால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. எனவே இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கான இடத்தில், இந்த ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறப்பாக பந்து வீசிய சேத்தன் சக்காரியா இடம் பெற்றிருக்கிறார். கடந்த பல ஐபிஎல் தொடர்களாக மட்டுமல்லாமல் விஜய் ஹசாரே ட்ராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி தொடர் என எல்லாவற்றிலும் சீரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரரான நிதிஷ் ராணவுக்கும் இந்திய அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னாராகவே இலங்கை அணிக்கு எதிரான தொடரில் தனக்கு வய்ப்பு கிடைக்குமென்று நம்பிக்கை இருக்கிறது என்று கூறியிருந்த ராணா, இந்த தொடரில் சிறப்பாக விளையாடி அசத்துவார் என்று எதிர்பார்க்கலாம். சென்ற ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் அறிமுகமாகி தனது அபார பேட்டிங் திறமையால் அந்த ஆண்டிற்கான எமர்ஜிங் ப்ளேயர் அவார்டை தட்டிச் சென்ற இளம் வீரரான தேவ்தத் படிக்கல்லை, ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தேர்வு செய்திருக்கிறது இந்திய தேர்வுக் குழு. சென்னை அணிக்காக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போதும், இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடி இருக்கும் ருத்துராஜ் கெய்க்வாட்டும் அணியில் இடம் பெற்றிருக்கிறார்.

gaikwad

ஆனால் அவருக்கு எந்த இடத்தில் களமிறங்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் ஏற்கனவே ஓப்பனிங் பேட்ஸ்மேன் வரிசையில் ஷிகர் தவானும், ப்ரித்வி ஷாவும் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இருப்பதால், அந்த இணையே தான் இலங்கை தொடரிலும் ஓப்பனிங் ஜோடியாக களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு முறை இந்திய டி20 அணியில் இடம் கிடைத்தும், காயத்தால் அணியிலிருந்து வலிகிய தமிழக வீரரான வருண் சக்கரவர்த்திக்கு மூன்றாவது முறையாக இந்திய அணியில் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. ஐபிஎல் தொடர்களில் சிறந்த எகானமி ரேட்டில் பந்து வீசி இருக்கும் இவருக்கு நிச்சயமாக இந்திய டி20 அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Gowtham

கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது ரிசர்வ் வீரராக இந்திய அணியில் இடம் பிடித்திருந்த கிருஷ்ணப்பா கௌதம், இந்த முறை லிமிடெட் ஓவர்கள் கொண்ட இந்திய அணியிலும் இடம்பிடித்து அசத்தியிருக்கிறார். ஆல்ரவுண்டர் வரிசையில் அவர் இடம் பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா, கோஹ்லி, பும்ரா, ஜடேஜா ஆகியோர் இல்லாத இந்த இந்திய அணியிலும், அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் மற்றும் திறமையான இளம் வீரர்கள் இருப்பதால், இந்த அணியும் மிரட்டலான அணியாகவே இருக்கிறது.

Advertisement