ஐபிஎல் 2023 : வருங்காலத்தை வளப்படுத்த சிஎஸ்கே தக்கவைக்க வேண்டிய 5 இளம் வீரர்களின் பட்டியல்

Mukesh
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் கடந்த 2 மாதங்களாக திருவிழாவை போல பல எதிர்பாராத திரில்லர் திருப்பங்கள் நிறைந்த 74 போட்டிகளுடன் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமாக செயல்பட்டு ப்ளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் கோப்பையை தக்க வைக்க முடியாமல் பரிதாபமாக வெளியேறியது. அந்த அணி 14 கோடிக்கு நம்பி வாங்கிய தீபக் சஹர் காயத்தால் விலகியது, கேப்டன் பதவியை ரவிந்திர ஜடேஜாவின் ஒப்படைத்து அதில் அவர் சொதப்பியதால் எம்எஸ் தோனி திரும்பி வாங்கியது, ருதுராஜ் கைக்வாட் உட்பட முக்கிய வீரர்களின் சுமாரான பேட்டிங் அதைவிட மோசமான பவுலிங் என பல அம்சங்கள் இந்த வருடம் அந்த அணிக்கு சாதகமாக அமையவில்லை.

CSK vs SRH

- Advertisement -

அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக பங்கேற்ற 14 போட்டிகளில் 10 தோல்விகளை பதிவு செய்து அந்த அணி 9-வது இடத்தைப் மட்டுமே பிடித்தது. கடந்த 2018க்கு பின் பெரும்பாலும் வயதான மூத்த வீரர்களை வாங்கும் சென்னை அதில் 2018, 2021 ஆகிய வருடங்களில் 2 கோப்பைகளை வென்றதால் அதே பார்முலாவை தொடர்கிறது. ஆனால் இந்த வருடம் பிளே ஆப் சுற்றில் வாய்ப்பு பறிபோன பின்பு கடைசி நேரத்தில் வாய்ப்பு பெற்ற இளம் வீரர்கள் அட்டகாசமாக செயல்பட்டு சீனியர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துக் காட்டினார்கள்.

குறிப்பாக இந்த வருடம் தீபக் சஹர் காயத்தால் விலகியதால் மோசமடைந்த பந்துவீச்சுக்கு நிறைய இளம் வீரர்கள் பரிசாக கிடைத்துள்ளனர். எனவே வயதான வீரர்களை வைத்து வென்றது போதும், இனிமேல் வளமான எதிர்காலத்துக்கு இளம் வீரர்கள் தேவை என்பதால் அடுத்த வருடம் சென்னை நிர்வாகம் நிச்சயம் தக்கவைக்க வேண்டிய 5 இளம் வீரர்களை பற்றி பார்ப்போம்.

Mukesh Chowdry

1. முகேஷ் சவுத்ரி: தீபக் சஹருக்கு பதில் முழுமையாக வாய்ப்பு பெற்ற இவர் ஆரம்பத்தில் தடுமாறினாலும் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றத்தை கண்டார் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் மொத்தம் 13 போட்டிகளில் 16 விக்கெட்டுகள் எடுத்த அவர் ஒரு இடதுகை பந்து வீச்சாளராக பவர்பிளே ஓவர்களில் பந்தை ஸ்விங் செய்து பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறார்.

- Advertisement -

குறிப்பாக மும்பைக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா, இஷான் கிசான் ஆகிய இருவரையும் டக் அவுட் செய்த இவர் அடுத்த வருடம் தீபக் சஹருடன் ஜோடி சேர்ந்து பந்துவீசும் அளவுக்கு தன்னை மெருகேற்றியுள்ளார். மேலும் 25 மட்டுமே நிறைந்துள்ள இவரை தக்க வைப்பது வருங்காலத்தை வளமாக்கும்.

CSK Matheesa Pathirana

2. மதீஸா பதிரனா: ஆடம் மில்னே காயமடைந்ததால் கடைசி நேரத்தில் வாங்கப்பட்ட இவர் கடந்த சில வருடங்களாகவே சென்னையின் நெட் பந்துவீச்சாளராக இருந்து வந்த நிலையில் வாய்ப்பு பெற்ற 2 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை எடுத்தார். குறிப்பாக முன்னாள் இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்காவை போலவே சிலிங்கா பந்துகளை வீசும் இவரை அடிப்பதற்கு எதிரணி பேட்ஸ்மேன்கள் திணறுவதாக தோனியே பாராட்டியிருந்தார்.

- Advertisement -

சொல்லப்போனால் 2009 – 2019 வரை மும்பை 4 கோப்பைகள் வெல்ல முக்கிய பங்காற்றிய மலிங்காவும் இவரை பாராட்டினார். எனவே கடந்த காலங்களில் மலிங்காவை வைத்து பயத்தை காட்டிய மும்பைக்கு இவரை தக்கவைத்து பதிலுக்கு பயத்தை காட்ட வேண்டிய பொன்னான வாய்ப்பு சென்னைக்கு கிடைத்துள்ளது.

Makesh Theeksana

3. மஹீஸ் தீக்சனா: இந்த வருடம் ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயின் அலி ஆகியோர் சுழல் பந்து வீச்சில் தடுமாறியதை இவர்தான் 9 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை எடுத்து ஓரளவு சரி செய்தார்.

- Advertisement -

குறிப்பாக பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க துடிக்கும் கடைசி கட்ட ஓவர்களில் கூட சிறப்பாக பந்து வீசும் திறமை பெற்றுள்ள இவரையும் சென்னை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hangargekar

4. ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்: ஐசிசி அண்டர்-19 உலககோப்பை 2022 தொடரை வென்ற இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக சிறப்பாக செயல்பட்ட இவரை 1.5 கோடி என்ற நல்ல தொகைக்கு வாங்கிய போதிலும் கடைசி வரை சென்னை நிர்வாகம் வாய்ப்பளிக்கவில்லை.

இவரிடம் நல்ல திறமை இருப்பதால் இந்த இளம் வயதில் ஐபிஎல் போன்ற உலகத்தரம் வாய்ந்த தொடரில் உடனடியாக தள்ளிவிட்டு வீணடிக்க விரும்பவில்லை என்று எம்எஸ் தோனி மற்றும் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தனர். எனவே இவரை நிச்சயம் அடுத்த வருடம் சென்னை தக்கவைக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. வேகப்பந்து வீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கில் கணிசமாக ரன்கள் குவிக்கும் திறமை பெற்றுள்ள இவர் லோயர் மிடில் ஆர்டரில் வரும் காலங்களில் சென்னைக்கு துருப்புச் சீட்டாக செயல்படலாம்.

இதையும் படிங்க : வேகத்தால் ஒரு பயனும் இல்லை – உம்ரான் மாலிக்க்கை மட்டம் தட்டும் வகையில் பாக் இளம் வீரர் கருத்து

5. பிரசாந்த் சோலங்கி: மும்பையைச் சேர்ந்த சேர்ந்த 22 வயது மட்டுமே நிரம்பிய இவர் இந்த வருடம் கடைசியில் கிடைத்த 2 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை 6.33 என்ற நல்ல எக்கனாமியில் கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் செயல்பட்டார். இவரையும் தக்க வைத்து அடுத்த வருடம் ஒருசில போட்டிகள் வாய்ப்பளித்தால் கூட வரும் காலத்தில் சுழல் பந்துவீச்சு துறைக்கு வலுவாக இருப்பார்.

Advertisement