ஐபிஎல் 2022 : தாய்நாட்டுக்காக பாதி ஐபிஎல் தொடரை மிஸ் செய்யப்போகும் 5 வெளிநாட்டு நட்சத்திரங்கள்

IPL
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. குறிப்பாக வரும் மார்ச் 26 ஆம் தேதியன்று துவங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. பொதுவாக ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்களுக்கு மவுசு அதிகமாக காணப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டிற்கான ஐ.பி.எல் தொடருக்குமான எதிர்பார்ப்பும் அதிகளவில் உள்ளது.

eng ipl

- Advertisement -

அது ஏலமாக இருந்தாலும் சரி விளையாடு 11 பேர் கொண்ட அணியாக இருந்தாலும் சரி வெளிநாட்டு வீரர்கள் மீது எப்போதுமே ரசிகர்களுக்கு தனி கவனம் உண்டு என்றே கூறலாம். அதற்கேற்றார்போல் பல வெளிநாட்டு வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு தங்கள் அணிக்கு வெற்றிகளையும் தேடிக் கொடுத்து வருகிறார்கள்.

தாய்நாட்டு பாணியில் வெளிநாட்டு நட்சத்திரங்கள்:
இருப்பினும் ஒவ்வொரு வருடம் ஐபிஎல் நடைபெறும் போது அதே சமயத்தில் தங்கள் தாய் நாட்டுக்காக ஒரு சில முக்கிய வெளிநாட்டு வீரர்கள் விளையாட செல்வது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் இம்முறை தாய்நாட்டுக்கு விளையாட உள்ளதால் ஐபிஎல் தொடரின் முதல் பகுதியை தவிர்க்க போகும் முக்கிய வெளிநாட்டு வீரர்கள் பற்றி பார்ப்போம்.

David warner SRH
David warner SRH

1. டேவிட் வார்னர்: கடந்த காலங்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகௌம் அதிரடியாக செயல்பட்டு சாம்பியன் பட்டம் வாங்கி கொடுத்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரை அந்த அணி நிர்வாகம் நன்றி இல்லாமல் கழட்டிவிட்டுள்ளது. இதனால் இந்த வருடம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 6.25 கோடிகளுக்கு ஒப்பந்தமாகி உள்ள அவர் தற்போது பாகிஸ்தானில் நடைபெற்ற வரும் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறார்.

- Advertisement -

அந்த டெஸ்ட் தொடருக்கு பின் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் அவரின் பெயர் இடம்பெறவில்லை என்பதால் முழு ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய விதிமுறைப்படி வெளிநாட்டு கிரிக்கெட் தொடரின் போது அந்த சுற்றுப்பயணம் முழுமையாக முடிந்த பின்னரே மற்ற தொடரில் பங்கேற்க வேண்டும் என்ற முக்கிய விதிமுறை உள்ளது. எனவே அதன் அடிப்படையில் வரும் ஏப்ரல் 5ஆம் தேதிக்கு பின்பு தான் அவர் ஐபிஎல் தொடரில் இணைவார் என என தெரியவருகிறது.

Cummins

2. பட் கமின்ஸ்: டேவிட் வார்னரை போலவே தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்று வரும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக அதன்பின் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறவில்லை. இருப்பினும் 7.25 கோடிகளுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட இவரும் ஏப்ரல் 5ஆம் தேதிக்கு பின்பு தான் அந்த அணியுடன் இணைவார் என தெரியவருகிறது.

- Advertisement -

3. ஜானி பேர்ஸ்டோ: இங்கிலாந்தைச் சேர்ந்த அதிரடி தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 6.75 கோடிகளுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஓபனிங் பேட்ஸ்மேனாக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் தற்போது வெஸ்ட்இண்டீஸ் மண்ணில் அந்த அணிக்கு எதிராக இங்கிலாந்து பங்கேற்று வரும் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இவர் முதல் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்த டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 29ஆம் தேதி அன்றுதான் நிறைவுக்கு வருகிறது. எனவே இந்த வருடம் ஐபிஎல் தொடரின் முதல் ஒரு சில போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

bairstow

4. ககிஸோ ரபாடா: கடந்த சீசன்களில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக மிரட்டல் பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்த தென் ஆபிரிக்காவின் நட்சத்திரம் ககிசோ ரபாடா இந்த முறை 9.25 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் ஐபிஎல் தொடங்கும் சமயத்தில் சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணியில் அவரின் பெயர் இடம் பெற்றுள்ளது.Rabada

அதன் பின் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை டெஸ்ட் தொடரிலும் அவரின் பெயர் இடம் பெற்றால் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை அவரால் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட முடியாத நிலை ஏற்படும். இல்லையென்றாலும் கூட ஐபிஎல் தொடரின் முதல் ஒரு சில போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாது.

5. அன்றிச் நோர்ட்ஜெ: தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மின்னல் வேகப்பந்து வீச்சாளர் அன்றிச் நோர்ட்ஜெ கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டதால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் அவரை தக்க வைத்தது. இருப்பினும் கடந்த நவம்பர் மாதம் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் காயமடைந்த அவர் அதன்பின் சொந்த மண்ணில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணியில் விளையாடவில்லை.nortje 2

அவரின் காயம் பற்றி முழுமையான அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில் ஐபிஎல் துவங்கும் நேரத்தில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணியில் அவரின் பெயர் இடம்பெறவில்லை. கடந்த 6 மாதங்களாக எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பதற்காத அவருக்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் பச்சைக் கொடி காட்டவே என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. ஒருவேளை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அனுமதித்தால் கூட ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் இவரால் பங்கேற்க முடியாது எனத் தெரிய வருகிறது.

Advertisement