வரலாற்றில் மகத்தான சகாப்தத்தை உருவாக்கி கேப்டனாகவே ஓய்வு பெற்ற 5 நட்சத்திர கேப்டன்களின் பட்டியல்

dhoni
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுக்கும் ஒரு வீரர் நாளடைவில் அந்த அணியின் நிரந்தரமான இடத்தைப் பிடிப்பார். அதுபோல குறிப்பிட்ட சில வீரர்கள் அணியின் தூண்களாக உருவெடுத்து விளையாடும் போது ஏதோ ஒரு கட்டத்தில் அதில் ஒருவரிடம் இருக்கும் தலைமை பண்பு வெளிப்பட்டாலோ அல்லது அதற்கு முந்தைய கேப்டன்கள், ஜாம்பவான் வீரர்களின் பரிந்துரையிலோ கேப்டன்களாக நியமிக்கப்படுவார்கள்.

அப்போது முதல் கூடுதலாக ஒரு பொறுப்புடன் விளையாடும் அந்த வீரர்கள் தங்களுக்குள் இருக்கும் இயற்கையான தலைமை பண்பை வெளிப்படுத்தி அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைத்து தேவையான இளம் வீரர்களை கண்டறிந்து வாய்ப்பளித்து நாட்டுக்கு வெற்றிகளைத் தேடி கொடுக்கும் தலைவனாக உருவெடுப்பார்கள்.

- Advertisement -

கேப்டனாக ஓய்வு:
அப்படி சாம்பியன் வீரர்களை உருவாக்கி தொடர்ச்சியாக தங்களது நாட்டை வெற்றி நடை போட வைக்கும் கேப்டன் ஏதோ ஒரு கட்டத்தில் தோல்விகளை சந்தித்து விமர்சனத்திற்கு உள்ளாகும் நிலைமை ஏற்படும் என்பதால் கடைசி வரை கேப்டனாக செயல்படுவது சவாலான காரியமாகும். ஆனால் சில ஜாம்பவான் கேப்டன்கள் மட்டுமே ஏராளமான சாம்பியன் வீரர்களை உருவாக்கி உலக கோப்பைகளை வென்று கொடுத்து தாங்கள் உருவாக்கிய சகாப்தத்தில் கடைசிவரை கேப்டனாகவே ஓய்வு பெறுவார்கள். அந்த வகையில் வரலாற்றில் கேப்டன்களாக ஓய்வுபெற்ற நட்சத்திர வீரர்களை பற்றி பார்ப்போம்:

5. கைரன் பொல்லார்ட்: வெஸ்ட் இண்டீஸ் அதிரடிப்படையின் முக்கிய வீரராக வலம் வந்த இவர் 2019 உலகக் கோப்பைக்கு பின்பு வெள்ளை பந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

ஏற்கனவே தடுமாறி வந்த வெஸ்ட் இண்டீஸ் அவரது தலைமையில் பெரிய அளவில் வெற்றிகளை குவிக்க தவறிய நிலையில் பிரீமியர் லீக் டி20 தொடர்களில் கவனம் செலுத்துவதற்காக சமீபத்தில் திடீரென்று இவர் கேப்டனாக ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

4. இயன் மோர்கன்: அயர்லாந்தில் பிறந்த விடிவெள்ளியாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த இவர் 2014இல் கேப்டனாக பொறுப்பேற்றார். அப்போது சாதாரண இருதரப்பு தொடர்களிலும் தோல்வியடையும் அணியாக இருந்த இங்கிலாந்துக்கு தரமான வீரர்களை கண்டறிந்து அதிரடியாக விளையாடும் யுக்தியை கற்றுக் கொடுத்த இவர் 2019இல் சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பையை வென்று கொடுத்த மகத்தான கேப்டனாக சாதனை படைத்தார்.

- Advertisement -

அதிரடியாக பேட்டிங் செய்யும் திறமையும் பெற்றிருந்த இவர் உலக கோப்பைக்கு பின்பாக சந்தித்த காயங்களால் பார்மை இழந்து சுமாராக செயல்பட்டதால் தாம் உருவாக்கிய இங்கிலாந்து அதிரடிப் படைக்கு தாமே பாரமாக மாற விரும்பாமல் 35 வயதிலேயே சமீபத்தில் கேப்டனாக ஓய்வு பெற்றார்.

3. மிதாலி ராஜ்: குடும்பத்தலைவிகளாக மட்டும் வாழ வேண்டும் என்ற எழுதப்படாத இலக்கணத்தை கொண்ட இந்திய மண்ணில் பிறந்து 1999இல் 17 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் பேட்டிங்கில் தொடர்ச்சியாக பெரிய அளவில் ரன்களைக் குவித்து இந்திய மகளிர் அணியின் முதுகெலும்பாக உருவெடுத்தார். அதனால் ஒரு கட்டத்தில் கேப்டனாகவும் பொறுப்பேற்ற இவர் நீண்ட காலமாக இந்திய அணியை வழிநடத்தி மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனாகவும் பேட்டிங் வீராங்கனையாகவும் உலக சாதனைகளை படைத்து நிறைய இளம் வீராங்கனைகளுக்கும் பெண்களுக்கும் ரோல் மாடலாக திகழ்ந்தார்.

- Advertisement -

கடைசியாக கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்தில் நடைபெற்ற 2022 ஐசிசி உலகக் கோப்பையில் இந்தியாவை வழி நடத்திய அவர் தனது கடைசி போட்டி வரை கேப்டனாகவே விளையாடி வயது காரணமாக அடுத்த தலைமுறைக்கு வழிவிடும் வகையில் சமீபத்தில் ஓய்வு பெற்றார்.

2. எம்எஸ் தோனி: வரலாற்றில் இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டன்களில் முதன்மையானவராக போற்றப்படும் எம்எஸ் தோனி 2007இல் அனுபவமில்லாத போதிலும் சச்சின், ராகுல் டிராவிட் போன்றவர்களின் பரிந்துரையால் கொடுக்கப்பட்ட கேப்டன்ஷிப் பொறுப்பில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த முதல் டி20 உலக கோப்பையில் அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழிநடத்தி பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்து முதல் தொடரிலேயே கோப்பையை வென்று கொடுத்தார். அதனால் அடுத்த வருடமே டெஸ்ட் போட்டிகளிலும் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை நம்பர் ஒன் அணியாக வெற்றி நடை போட வைத்தார்.

அத்துடன் 2011 உலக கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என 3 விதமான உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்த அவரது தலைமையில் 2014இல் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்களின் அடுத்தடுத்த ஓய்வால் மாற்றத்தை சந்தித்த இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியான படுதோல்வியை சந்தித்தது.

அதற்கு பொறுப்பேற்கும் வகையில் அடுத்த தலைமுறை கேப்டனாக விராட் கோலி தகுதியானவர் என்பதை உணர்ந்து 2014இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் 2-வது போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். அப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக ஓய்வு 2017இல் வெள்ளை பந்து கேப்டன்ஷிப் பொறுப்புகளையும் விராட் கோலியிடம் கொடுத்து அவரது தலைமையில் 2019 வரை விளையாடி மொத்தமாக ஓய்வு பெற்றார்.

1. ஸ்டீவ் வாக்: வரலாற்றில் இவரது தலைமையில் உலகை மிரட்டிய ஆஸ்திரேலியாவை போன்ற ஒரு வலுவான அணி இருந்திருக்க முடியாது என்று கூறலாம். அந்த அளவுக்கு 90களின் இறுதியில் ஷேன் வார்னே, ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற சாம்பியன் வீரர்களை உருவாக்கி அவர்களை வைத்து உலக கிரிக்கெட்டை தனது அபார கேப்டன்சிப் வாயிலாக ஆட்சி செய்யும் அளவுக்கு நிறைய வெற்றிகளையும் 1999 உலகக்கோப்பையை வென்று கொடுத்த இந்த ஜாம்பவான் கேப்டன் 2002இல் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார்.

இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்த அவர் கடந்த 2004இல் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் கேப்டனாக செயல்பட்டு சிட்னியில் நடந்த கடைசி போட்டியில் ஓய்வு பெற்றார். இந்த மகத்தான கேப்டனை ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது தோள் மீது சுமந்து பிரியாத விடை கொடுத்தார்கள்.

Advertisement