விராட் கோலியால் நெருங்க கூட முடியாத ரோஹித் சர்மாவின் 5 அசத்தலான சாதனைகள் – லிஸ்ட் இதோ

Rohith-1
- Advertisement -

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஒருநாள் கிரிக்கெட் உலகில் முடிசூடா மன்னர்களாக விளங்கி வருகின்றனர். விராட் கோலி ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதல் இடத்திலும் ரோகித் சர்மா இரண்டாம் இடத்திலும் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகின்றனர். பெரும்பாலும் விராட் கோலி ரோஹித் சர்மாவை விட சிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்படுகிறார். இருவரும் பத்தாண்டுகளுக்கு மேலாக இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர். அப்படி இருந்தாலும் விராட் கோலி செய்ய முடியாத சாதனைகளில் சிலவற்றை ரோகித் சர்மா செய்து அசத்தியிருக்கிறார் அப்படிப்பட்ட 5 சாதனைகளை தற்போது பார்ப்போம்.

Rohith

- Advertisement -

ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சதம் :

ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் தற்போது வரை மூன்று இரட்டை சதங்கள் அடித்து இருக்கிறார். எந்த ஒரு வீரரும் 3 முறை இரட்டை சதங்கள் அடித்ததில்லை. விராட்கோலி எடுத்துக் கொண்டால் அவரது அதிகபட்ச ரன் 183. அவர் தற்போது வரை ஒரு இரட்டை சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒருவேளை இரட்டைசதம் அடித்தாலும் 3 முறை அடிப்பாரா ? என்பது சந்தேகம் தான்.

Rohith

5 ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் :

- Advertisement -

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மாவும், பெங்களூரு அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருக்கின்றனர். இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அவரது தலைமையில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று இருக்கிறது. விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை. அப்படியே வென்றாலும் இனி 5 முறை கோலியால் வெல்ல வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

rohith

ஒரே உலக கோப்பை தொடரில் 5 சதங்கள் :

- Advertisement -

2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா 5 சதங்கள் அடித்து இருந்தார். இதுவரை எந்த ஒரு வீரரும் 5 சதங்கள் அடித்ததில்லை விராட் கோலிக்கு இந்த சாதனையை முறியடிக்க பல வருடங்கள் ஆகும். ஏனெனில் குறைந்த போட்டிகள் கொண்டு நடத்தப்படும் உலகக்கோப்பை தொடரில் 5 சதங்கள் என்பதெல்லாம் முடியாத ஒன்று.

rohith

முதல் டெஸ்ட் போட்டியில் சதம் :

- Advertisement -

ரோகித் சர்மா 2013ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடினார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 177 ரன் அடித்து தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்தார். ஆனால் விராட் கோலி 2011ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வெறும் 19 (15+4) ரன்கள் மட்டும் தான் எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rohith

இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர் :

227 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா இந்திய அணிக்காக 244 சிக்சர்கள் அடித்து இருக்கிறார் . ஆனால் 254 ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 125 சிக்ஸர்தான் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement