வரலாற்றில் 10 போட்டிகளுக்கு குறைவாக விளையாடிய போதிலும் அதிர்ஷ்டத்தால் உலகக்கோப்பையை வென்ற 5 வீரர்களின் பட்டியல்

Sunil Valson
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் நாட்டுக்காக விளையாடும் வீரர்கள் தங்களது மிகச் சிறப்பான செயல்பாடுகளால் நிறைய போட்டிகளில் விளையாடி பெரிய அளவிலான வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதையே லட்சியமாக வைத்திருப்பார்கள். அதற்காக களமிறங்கும் அத்தனை போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுப்பது சாத்தியமற்றது என்ற சூழ்நிலையில் பெரும்பாலான போட்டிகளில் முடிந்தளவுக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் நம்பிக்கை நட்சத்திர வீரர்களுக்கு சாதாரண வெற்றிகளை விட உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்காக அந்த மாபெரும் வெற்றிக்கனியை பரிசாக்க வேண்டும் என்பதையே தொலைநோக்கு லட்சியமாக வைத்திருப்பார்கள்.

சொல்லப்போனால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் ஒவ்வொரு வீரரும் ஐசிசி நடத்தும் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதையே கனவாகவும் இலட்சியமாகவும் ஆசையாகவும் வைத்திருப்பார்கள். அதற்காக கடினமாக உழைக்கும் பல உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் அந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட போதிலும் முக்கிய தருணங்களில் எஞ்சிய வீரர்கள் சொதப்புவதால் அந்த கனவை அடைய முடியாத நிலைமை ஏற்படும்.

- Advertisement -

எடுத்துக்காட்டாக ராகுல் டிராவிட், ஏபி டிவில்லியர்ஸ் போன்ற தரத்திலும் தரமான வீரர்கள் எவ்வளவோ முயற்சித்தும் கடைசிவரை தங்களது வாழ்நாளில் உலககோப்பையை தொட முடியாமலே ஓய்வு பெற்றார்கள். இருப்பினும் சச்சின் டெண்டுல்கரை போன்ற சில வீரர்கள் கடினமாக உழைத்து கடைசி வரை மனம் தளராமல் போராடி உலககோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்து காட்டுவதும் உண்டு.

அதிர்ஷ்டக்கார வீரர்கள்:
ஆனால் அரிதினும் அரிதாக சில வீரர்கள் மட்டுமே சர்வதேச அரங்கில் பெரிய அளவிலான போட்டிகளில் விளையாடாத போதிலும் அதிர்ஷ்ட தேவதையின் உதவியுடன் பல ஜாம்பவான்கள் தொடமுடியாத உலக கோப்பையை அசால்டாக எளிதாக தொட்ட கதைகளும் உள்ளது. அந்த வகையில் வரலாற்றில் 10 போட்டிகளுக்கும் குறைவாக விளையாடிய போதிலும் உலக கோப்பையை முத்தமிட்ட 5 வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. ஆண்ட்ரூ ஜீசர்ஸ் 1987: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் வீரரான இவர் தன்னுடைய காலத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி 100 விக்கெட்களுக்கு மேல் எடுத்ததால் கடந்த 1987இல் இந்திய மண்ணில் நடந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை துவங்கினார்.

அந்த உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடும் 11 பேர் அணியிலும் இடம் பிடித்திருந்த அவர் ஆலன் பார்டர் தலைமையில் ஆஸ்திரேலியா தனது முதல் உலக கோப்பையை வென்ற அணியில் சாம்பியனாக சாதனை படைத்து தனது கேரியரை தொடங்கினார். ஆனால் துரதிருஷ்டவசமாக 21 வயதிலேயே தோள்பட்டையில் ஏற்பட்ட பிரச்சனையால் அவதிப்பட்ட அவர் அந்த 2 போட்டிகளுக்கு பின் விளையாடாமல் இளம் வயதிலேயே ஓய்வுபெற்றார்.

- Advertisement -

4. வாசிம் ஹைதர் 1992: கடந்த 1992இல் சவாலான ஆஸ்ட்ரேலிய மண்ணில் நடந்த உலக கோப்பையை இம்ரான் கான் தலைமையில் மேஜிக் நிகழ்த்திய பாகிஸ்தான் தன் வசமாக்கி சரித்திரம் படைத்தது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அணியில் இளம் மித வேகப்பந்து வீச்சாளராக இடம் பிடித்த வாசிம் ஹைதர் அந்த உலகக் கோப்பையில் அறிமுகமாகி 3 போட்டிகளில் மட்டுமே விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

அந்த 3 போட்டிகளில் வெறும் 26 ரன்களையும் 1 விக்கெட் மட்டுமே எடுத்த அவர் அதன்பின் பாகிஸ்தானுக்காக விளையாடும் வாய்ப்பை பெறவில்லை என்றாலும் அதிர்ஷ்டத்தின் உதவியுடன் உலக கோப்பை சாம்பியன் என்ற அந்தஸ்தை வாழ்நாள் முழுக்க பெற்றுள்ளார்.

- Advertisement -

3. இக்பால் சிகந்தர் 1992: அதே உலக கோப்பையில் தனது அணிய்ல் விளையாட தகுதியானவர் என்று இம்ரான் கான் கண்டறிநது தேர்வு செய்த மற்றொரு இளம் வீரரான இவர் சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக 4 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

அந்த 4 போட்டிகளில் வெறும் 3 விக்கெட்டுகளையும் 1 ரன் மட்டுமே எடுத்த அவர் அதிர்ஷ்டவசமாக இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் சாம்பியன் அணியில் ஒருவராக காலம் கடந்தும் பேசப்படுகிறார். இத்தனைக்கும் அந்த 2 போட்டிகளை தவிர வேறு எந்த போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பை பெறாத அவர் ஓய்வுக்குப் பின் சில போட்டிகளில் நடுவராக செயல்பட்டார்.

2. லியாம் டாவ்சன் 2019: சுழல் பந்து வீச்சாளரான இவர் கடந்த 2016இல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி 3 போட்டிகளில் மட்டும் விளையாடி அப்படியே காணாமல் போனார். ஆனால் 2019இல் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பையில் சுழற்பந்துவீச்சாளர் தேவைப்பட்டதால் அந்த சமயத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் ஓரளவு அசத்தலாக செயல்பட்ட இவருக்கு வாய்ப்பு அதிர்ஷ்டமாக தாமாக தேடி வந்தது.

அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் இயன் மோர்கன் தலைமையில் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இருந்ததால் கோப்பையை முத்தமிட்டு சாம்பியனாக தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

1. சுனில் வல்சன் 1983: 80களில் உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழகத்துக்காக அசத்திய இவர் இங்கிலாந்தில் நடந்த 1983 ஐசிசி உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவருக்கு கேப்டன் கபில்தேவ் உட்பட மேலும் சில வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்த காரணத்தால் ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அந்த தொடர் முழுவதும் பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் வலுவான வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக உலககோப்பையை முத்தமிட்ட அணியில் இடம் பிடித்திருந்ததால் சாம்பியனாக சாதனை படைத்தார். ஆனால் ஆச்சரியம் என்னவெனில் அதன் பின்பும் இந்தியாவுக்காக ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பை பெறாத அவர் சர்வதேச கிரிக்கெட்டில் எந்த ஒரு போட்டியிலும் விளையாடமலேயே உலக கோப்பையை வென்ற ஒரே வீரர் என்ற அரிதான சாதனையையும் படைத்துள்ளார்.

Advertisement