ஐபிஎல் 2018 க்குப் பிறகு இந்திய ODI போட்டியில் தங்கள் இடத்தை இழந்த 5 வீரர்கள்..! – காரணம் இதுதான் ?

pandey
- Advertisement -

ஐபில் போட்டிகள் பிலே ஆப் சுற்று கட்டத்தை நெருங்கி விட்டது. ஒவ்வொரு அணியில் இருக்கும் இந்திய இளம் வீரர்கள் அனைவரும் எப்படியாவது இந்தியா அணியில் இடம்பிடித்துவிட வேண்டும் என்று படு மும்மரமாக போராடி வருகின்றனர். மேலும் உலக கோப்பைகள் தொடங்க இன்னும் ஓராண்டு தான் இருக்கின்றனர் அதற்குள்ளாக வரும் போட்டிகளில் புதிய வீரர்களை தேர்வு செய்தால் தான் அவர்களை வைத்து ஓராண்டிற்குள் சிறப்பான இந்திய அணியை உருவாக்க முடியும்.

stanlake

- Advertisement -

இந்நிலையில் தற்போது நடந்து வரும் ஐபில் போட்டிகளில் எந்தெந்த அணியில் உள்ள வீரர்கள் இந்த ஆண்டு இந்திய அணி விளையாட உள்ள சர்வேதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழக்கலாம் என்ற பட்டியல் இதோ.

ஜெயதேவ் உனட்கத் :-

தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில இருக்கும் ராஜஸ்தான் அணியால் இந்த ஆண்டு 11.5 கோடி ரூபாய் என்ற பெரும் தொகையை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டவர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபில் தொடரில் 12 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியவர். ஆனால் இந்த தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். மேலும் இவரது பந்துவீச்சின் சராசரி ரன் விகிதம் 9.86 ஆகா இருந்து வருகிறது.

- Advertisement -

வாஷிங்டன் சுந்தர்:-

sundar

விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியில் விளையாடி வரும் இவர் கடந்த ஆண்டு புனே அணியில் விளையாடி வந்தார். இந்த ஆண்டு பெங்களூரு அணியில் ஆடி வரும் 18 வயது இளம் வீரர் அந்த அணியால் 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். வேக பந்து வீச்சாளரான இவர் இந்த ஆண்டு நடந்து வரும் ஐபில் போட்டிகளில் இவரது வேகம் குறைந்துவிட்டது. 7 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை மட்டுமே பெற்றுள்ள இவர் ஓவருக்கு 9 ரன்கள் என்ற வீதம் வாரி வழங்கியுள்ளார்.

- Advertisement -

மொஹமத் சமி:-

sami
கடந்த ஆண்டு வரை ஐபில் போட்டிகளில் விளையாடி வந்த சமி சில பல குடும்ப பிரச்சனைகளால் இந்த ஐபில் தொடரில் பங்கேற்கவில்லை. மேலும் சில மாதங்களுக்கு முன்னாள் ஏற்பட்ட விபத்தால் தனது உடலை தேட்றிக்கு கொண்டு வரும் சமி இந்திய தேர்வாளர்களா அடையாளம் கண்டுகொள்ள படுவார்களா என்பது சந்தேகம் தான். ஏற்கனவே வேகபந்து வீச்சாளர்களான புனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் இந்த தொடரில் தங்களது திறமைகளை நிரூபிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

அக்ஸர் படேல்:-

patel
தற்போது பஞ்சாப் அணியில் ஆடிவரும் இவர் ஏற்கனவே சர்வேதேச இந்திய அணியில் ஒரு சில போட்டிகளில் விளையாடியுள்ளார். பஞ்சாப் விளையாடிய 9 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே அஸ்வின் இவருக்கு வாய்பளித்துள்ளார். மேலும் இவர் அந்த 4 போட்டிகளில் 72 பந்துகளில் 90 ரன்களை கொடுத்து 3 விக்கட்டை வீழ்த்தியுள்ளார். இந்த அணியில் கேப்டனாக இருக்கும் அஸ்வினும் இந்திய அணியில் இடம் பெற மும்மரமாக செயல்பட்டு வருவதால் இவருக்கு அணியில் போதுமான வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை.

மனிஷ் பாண்டே:-

pandey
தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில இருக்கும் ஹைதராபாத் அணியில் ஆடிவருகிறார். அந்த அணியால் 11 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட இவர் 9 போட்டிகளில் 179 ரன்களை எடுத்துள்ளார் அதில் ஒரு அரை சதமும் அடக்கம். தற்போது மிடில் ஆர்டரில் இறங்கும் இவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைவில்லை. அதனால் இந்த ஐபில் தொடரில் இவரது திறமையை முழுமையாக காட்ட முடியாமல் இருந்து வருகிறது

Advertisement