ஐபிஎல் 2019 இல் RCB மூலம் கைவிடப்பட்ட 5 வீரர்கள்..!

RCB2019
- Advertisement -

நடந்து வரும் ஐ.பி.எல் போட்டிகளில் மிகவும் மோசமாக விளையாடிய அணிகளில் பெங்களூரு அணியும் ஒன்று. விராட் கோலி தலைமையில் விளையாடிய இந்த அணியில் சிறப்பான ஆட்டக்காரர்கள் இருந்து இந்த அணி மோசமான தோல்விகளை தழுவியது. இதற்கு முக்கிய காரணம் இந்த அணையில் விளையாடிய வீரர்கள் மட்டும் தான். அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் எந்தந்த வீரர்கள் பெங்களூரு அணியில் இடம் பெற வாய்ப்பில்லை என்று ஒரு சிறிய பட்டியலை அலசுவோம்.

- Advertisement -

சர்ஃபரஸ் கான்: பெங்களூரு அணியால் பெரிதும் நம்பப்பட்ட ஒரு இளம் பேட்ஸ்மேன். 20 வயது நிரம்பிய இந்த இளம் வீரர் 7 போட்டிகளில் விளையாடி 51 ரன்களை மட்டுமே பெற்றார். பேட்டிங்கில் தான் இப்படி என்றால் இவரது பீல்டிக்கும் இந்த தொடரில் அமோசமாக இருந்தது.

பவன் நெகி : டெல்லியை சேர்ந்த இந்த இளம் வீரர், ஆல் ரௌண்டரான இவர் கடந்த 2017 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினார். ஆனால் இந்த ஆண்டு தான் ஆடிய 2 போட்டிகளில் 12.25 என்ற பந்துவீச்சு ரன் விகிதத்தை பெற்று, இரண்டு போட்டிகளில் 3 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

பிரண்டன் மெக்கல்லம் : ஐ.பி.எல் வரலாற்றில் முதல் சத்தத்தை அடித்த வீரர், தற்போது நடந்து வரும் ஐ.பி.எல் தொடரில் 6 போட்டிகளில் 127 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். வரும் 2018 செப்டம்பருடன் தனது 37 வயதை பூர்த்தி செய்யும் இவர், அடுத்த ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் தான்.

- Advertisement -

வாசிங்டன் சுந்தர்: தமிழக வீரரான இவர், கடந்த ஆண்டு புனே அணியில் விளையாடி வந்தார். இந்த ஆண்டு பெங்களூரு அணியில் ஆடி வருகிறார் . இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் இவரது வேகம் குறைந்துவிட்டது. 7 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை மட்டுமே பெற்றுள்ள இவர் ஓவருக்கு 9 ரன்கள் என்ற வீதம் வாரி வழங்கியுள்ளார்.

woaks

கிரிஸ் வோகஸ்: கடந்த 2017 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்த இங்கிலாந்து வீரர், இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை எடுத்தாலும் இவர் ஓவருக்கு கொடுத்துள்ள ரன் விகிதம் 10.36 இருந்ததால் இவருக்கு பதிலாக டிம் சௌதியை மாற்றம் செய்தது பெங்களூரு அணி. மேலும் இவர் பேட்டிங்கில் குவித்த ரன்களை எடுத்துக்கொண்டால் வெறும் 17 மட்டும் தான்.

Advertisement