ஐபிஎல் தொடரில் கழற்றி விட்டாலும் பிஎஸ்எல் தொடரில் பெரிய தொகைக்கு விலை போன 5 வெளிநாட்டு வீரர்கள்

Tahir-2
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலம் இந்தியாவிலேயே நடைபெறுகிறது. அதற்காக வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் நடைபெறும் வீரர்கள் இடத்தில் தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் சாம் கரண், பென் ஸ்டோக்ஸ் போன்றவர்கள் பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரலாற்றில் எத்தனையோ உலகத்தரம் வாய்ந்த தரமான நட்சத்திர வீரர்கள் கூட ஐபிஎல் தொடரில் விலை போகாமல் இருந்த கதைகள் ஏராளமாக உள்ளது. அந்த வகையில் 2022 ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத சில நட்சத்திர வீரர்கள் கடந்த வாரம் நடைபெற்ற பிஎஸ்எல் தொடரின் டிராப்ட் முறையில் பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரால் ஐபிஎல் உச்சத்தை எட்ட முடியவில்லை என்றாலும் தனக்கென்று தனித்துவமான தரத்தை கொண்டுள்ளது. குறிப்பாக ஐபிஎல் ஏலத்தைப் போல பிஎஸ்எல் தொடரில் டிராப்ட் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் டைமண்ட் மற்றும் பிளாட்டினம் ஆகிய அதிக சம்பளத்தை கொடுக்கும் பிரிவுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஐபிஎல் தொடரில் விலை போகாத சில நட்சத்திரங்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. இம்ரான் தாஹிர்: தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சுழல் பந்து வீச்சாளரான இவர் 40 வயதை கடந்தும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் பராசக்தி எக்ஸ்பிரஸ் என்று ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். இருப்பினும் தற்போது 43 வயதை கடந்து விட்ட அவரை 2022 சீசனில் சென்னை நிர்வாகம் கழற்றி விட்ட நிலையில் வேறு அணிகளும் வாங்கவில்லை.

ஆனால் லெஜெண்ட்ஸ் லீக் உட்பட சமீப காலங்களில் நடைபெற்ற டி20 தொடர்களில் வயதை மிஞ்சிய செயல்பாடுகளை வெளிப்படுத்தும் அவரை 2023 பிஎஸ்எல் தொடரில் கராச்சி கிங்ஸ் அணி நிர்வாகம் பிளாட்டினம் பிரிவில் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் மிகவும் வயதான வீரராக மீண்டும் அவர் சாதனை படைக்க காத்திருக்கிறார்.

- Advertisement -

2. ஜோஷ் லிட்டில்: அயர்லாந்தைச் சேர்ந்த இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர் சமீப காலங்களில் சர்வதேச அளவில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் சென்னை அணியில் நெட் பந்து வீச்சாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இருப்பினும் முதன்மை ஏலத்தில் அவரை சென்னை உட்பட எந்த அணியும் வாங்காத நிலையில் 2023 பிஎஸ்எல் தொடரில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக பிளாட்டினம் பிரிவின் கீழ் வாங்கப்பட்டுள்ளார். அந்த வகையில் இந்தியாவில் வாய்ப்பு கிடைக்காத அவர் பாகிஸ்தானில் வாய்ப்பைப் பெற்று ஜொலிக்க காத்திருக்கிறார்.

- Advertisement -

3. ஜேம்ஸ் வின்ஸ்: இங்கிலாந்தைச் சேர்ந்த அதிரடி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான இவர் டி20 கிரிக்கெட்டில் ப்ளாஸ்ட், பிக்பேஷ் போன்ற தொடர்களில் அதிரடியான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் விண்ணப்பித்திருந்த அவரை எந்த அணி நிர்வாகமும் வாங்கவில்லை.

ஆனால் பிஎஸ்எல் தொடரில் சிவப்பு கம்பளம் விரித்த கராச்சி கிங்ஸ் அணி அவரை உச்சகட்ட விளையாட டைமண்ட் பிரிவில் வாங்கியுள்ளது. அதன் வாயிலாக இவரும் பாகிஸ்தான் மண்ணில் விளையாடி தனது கேரியரை விரிவுபடுத்த உள்ளார்.

- Advertisement -

4. முஜீப் உர் ரஹ்மான்: ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவரான இவர் சமீப காலங்களில் பஞ்சாப் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற ஐபிஎல் அணிகளில் விளையாடினார். ஆனாலும் 2020, 2021 சீசன்களில் சற்று சுமாராக செயல்பட்ட அவரை 2022 சீசனில் எந்த அணியும் வாங்கவில்லை.

இருப்பினும் இளம் வீரராக இருக்கும் அவரை பிஎல்எஸ் தொடரில் பெஷாவர் ஜால்மி அணி அதிகபட்ச விலையான டைமண்ட் பிரிவில் வாங்கியுள்ளது. அதனால் பாபர் அசாம், வஹாப் ரியாஸ் போன்ற தரமான வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பையும் அவர் பெற்றுள்ளார்.

5. ரஹ்மத்துல்லா குர்பாஸ்: ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் பவர் பிளே ஓவர்களில் சரவெடியாக செயல்படும் அதிரடி வீரராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். ஆனாலும் 2022 ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் வாங்காத இவரை கடைசி நேரத்தில் ஜேசன் ராய்க்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் வாங்கியது.

இதையும் படிங்க: IND vs BAN : குல்தீப் யாதவை நீக்கிவிட்டு ஜெய்தேவ் உனட்கட்டை அணியில் சேர்க்க – காரணம் இதுதானாம்

ஆனால் கடைசி வரை பெஞ்சில் அமர வைத்து எந்த வாய்ப்பையும் கொடுக்காமலேயே அவரை குஜராத் நிர்வாகம் அடுத்த ஏலத்திற்கு முன்பாக கழற்றி விட்டுள்ளது. இருப்பினும் இஸ்லாமாபாத் யூனிடட் அணிக்காக பிஎஸ்எல் தொடரில் அவர் பிளாட்டினம் பிரிவின் கீழ் வாங்கப்பட்டுள்ளார்.

Advertisement