ஐசிசி டி20 உ.கோ 2022 தொடருக்கு பின் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலக செய்ய வாய்ப்புள்ள 5 வீரர்கள்

Rohith
Advertisement

உலகின் அனைத்து கிரிக்கெட் அணிகளும் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக முழுவீச்சில் தயாராகி வருகின்றன. பொதுவாக இது போன்ற ஐசிசி உலக கோப்பைகள் வெற்றியாளரை தீர்மானிப்பது மட்டுமல்லாமல் நிறைய வீரர்களின் கேரியரை தீர்மானிப்பதில் காலம் காலமாக முக்கிய பங்காற்றி வருகிறது. அதாவது நிறைய வீரர்கள் தங்களது ஓய்வு போன்ற முடிவுகளை இந்த உலகக் கோப்பையை மையப்படுத்தி அந்த தொடரில் அல்லது முடிந்தபின் எடுப்பார்கள்.

aus 1

அதிலும் தாமும் சிறப்பாக செயல்பட்டு அணியையும் சிறப்பாக வழிநடத்த வேண்டிய அழுத்தமான கேப்டன்ஷிப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒன்று உலகக்கோப்பையில் தோல்வியை சந்திக்க நேரிட்டால் பதவி விலக நேரிடும் அல்லது அந்த பதவியால் ஏற்படும் விமர்சனங்கள் மற்றும் அழுத்தங்களை சமாளிக்க அதை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும். அந்த வகையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்குப் பின் தற்போது வகித்து வரும் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலக வாய்ப்புள்ள 5 வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. முகமத் நபி: ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திர சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டரான இவர் அந்த அணியை சமீபத்திய ஆசிய கோப்பை உட்பட கேப்டனாக வழி நடத்தி வருகிறார். இருப்பினும் தற்போது 37 வயதை கடந்துவிட்ட அவர் அடுத்த டி20 உலக கோப்பையில் விளையாடுவது சந்தேகமாக பார்க்கப்படுவதால் இந்த உலகக் கோப்பையுடன் கேப்டனாகவே ஓய்வு பெற வாய்ப்புள்ளது.

Mohammad-Nabi

மேலும் 2023இல் இந்திய மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக அடுத்த தலைமுறை கேப்டன் தலைமையில் புதிய அணியை உருவாகி தனது அணியை வெற்றிப் பாதையில் நடப்பதற்கு வழிவிட அவருக்கு இதுவே சரியான தருணமாகும்.

- Advertisement -

4. சாகிப் அல் ஹசன்: அடிக்கடி கேப்டன்ஷிப் மாறி வரும் வங்கதேச கிரிக்கெட்டில் சமீபத்திய ஆசிய கோப்பைக்கு முன் திடீரென கேப்டனாக அறிவிக்கப்பட்ட இவரது தலைமையில் அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. ஆனாலும் உலக கோப்பைக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் கேப்டனை மாற்றுவது சரியாக இருக்காது என்பதால் அந்த அணிக்கு மீண்டும் இவர் கேப்டனாக செயல்பட உள்ளார்.

shakib 1

ஒருவேளை உலக கோப்பையில் வங்கதேசம் லீக் சுற்றுடன் வெளியேறும் பட்சத்தில் இவர் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளது. ஏனெனில் அடுத்த வருடம் நடைபெறும் 2023 உலகக் கோப்பையில் வங்கதேசம் மிகச் சிறப்பாக செயல்பட இவர் கேப்டனாக இருப்பதை விட கேப்டன்ஷிப் அழுத்தமின்றி சுதந்திரமாக செயல்படும் ஆல்-ரவுண்டராக இருப்பதையே அந்நாட்டு வாரியம் விரும்பும்.

- Advertisement -

3. கேன் வில்லியம்சன்: நியூசிலாந்தின் கேப்டனாக 2019 உலக கோப்பையில் பைனல் வரை அழைத்து சென்று 2021 டெஸ்ட் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற இவர் சமீப காலங்களில் சந்தித்த காயத்தால் பேட்டிங்கில் பார்மை இழந்து திண்டாடி வருகிறார். விராட் கோலி போன்ற வீரர்களுடன் ஒப்பிடப்படும் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான் பேட்ஸ்மேனாக கருதப்படும் இவர் 2021 டி20 உலக கோப்பையில் நியூசிலாந்தை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார்.

Williamson-3

ஆனாலும் தற்போது 32 வயதாககும் அவர் விராட் கோலியை போல் பணிச்சுமை நிர்வாகித்து பார்மை மீட்டெடுக்க ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையுடன் குறைந்தபட்சம் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

2. ஆரோன் பின்ச்: ஆஸ்திரேலியா தொட முடியாமல் தவித்து வந்த டி20 உலகக் கோப்பையை கடந்த வருடம் துபாயில் அற்புதமாக வழிநடத்தி கேப்டனாக பெற்றுக்கொடுத்த இவர் இந்த வருடம் சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக கோப்பையை தக்க வைக்க களமிறங்குகிறார். ஆனால் ஒரு காலத்தில் அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்ட இவர் சமீப காலங்களில் பார்மை இழந்து ரன்கள் குவிக்க திணறுவதால் சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து மொத்தமாக ஓய்வு பெற்றார்.

மேலும் ஐபிஎல், பிக்பேஷ் போன்ற டி20 தொடர்களிலும் தடுமாறும் அவர் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையில் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறார். எனவே 35 வயதானாலும் நல்ல பெயருடன் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் சொந்த மண்ணில் குறைந்தபட்சம் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கலாம்.

1. ரோஹித் சர்மா: 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றதால் உலகக்கோப்பையை வெல்லாமல் விமர்சனங்களை சந்தித்த விராட்யை கோலியை நீக்கிவிட்டு இவருக்கு பிசிசிஐ கேப்டன்ஷிப் பதவி கொடுத்தது. அவருக்கு உறுதுணையாக ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில் அந்த இருவரும் சேர்ந்து கடந்த ஒரு வருடமாக அளவு கடந்த மாற்றங்களை செய்து இருதரப்பு தொடர்களை வென்றாலும் சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

Rohit Sharma IND

மேலும் ஒரு காலத்தில் ஹிட்மேன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவர் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் பேட்டிங்கில் பெரிய அளவில் ரன்களை குவிக்க திணறுகிறார். அத்துடன் கேப்டன்ஷிப் அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியாமல் கோபத்தை இதர வீரர்களிடம் காட்டும் அவர் தற்போது 35 வயதை கடந்துவிட்டதால் தன்னுடைய எஞ்சிய கேரியரில் நல்ல பார்முடன் சிறப்பாக செயல்பட வரும் உலகக் கோப்பையுடன் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வாய்ப்புள்ளது. ஏனெனில் தன்னுடைய பணிச்சுமையை நிர்வகித்து 2023 உலகக்கோப்பையை சொந்த மண்ணில் வெல்ல குறைந்தபட்சம் டி20 கேப்டன்ஷிப் பதவியை ஐபிஎல் 2022 கோப்பையை வென்ற பாண்டியாவிடம் வழங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

Advertisement