ஐபிஎல் 2023 ஏலம் : 1 கோடி அடிப்படை விலைக்கு கூட ஏலம் போகமாட்டார்கள் என்று சொல்லக்கூடிய 5 வீரர்களின் பட்டியல்

Martin-Guptill-1
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக போற்றப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023 கோடைகாலத்தில் நடைபெறும் நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் நடைபெறுகிறது. அந்த ஏலத்தில் 2 கோடி, 1.5 கோடி, 1 கோடி, 75 லட்சம், 50 லட்சம், 20 லட்சம் என 6 அடிப்படை விலை பிரிவின் கீழ் உலகம் முழுவதிலும் இருந்து 991 கிரிக்கெட் வீரர்கள் களமிறங்குகிறார்கள். ஆனால் 10 அணிகளுக்கு தேவைப்படும் வீரர்கள் வெறும் 87 பேர் மட்டுமே என்பதால் மிகுந்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த இடத்தில் தரமான தற்சமத்தில் அற்புதமான ஃபார்மில் இருக்கும் வீரர்கள் மட்டுமே ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சில வீரர்கள் தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருந்தும் தங்களது விலையை அதிகமாக நிர்ணயித்துள்ளதால் ஏலம் போக மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 1 கோடி அடிப்படை விலையில் இடம் பிடித்துள்ள வீரர்களில் ஏலம் போக மாட்டார்கள் என்று சொல்லக்கூடிய சில வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. லுக் வுட்: இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் 82 போட்டிகளில் 74 விக்கெட்டுகளை 8.36 என்ற எக்கனாமியில் எடுத்ததால் சர்வதேச அரங்கில் அறிமுகமாகி 2 போட்டிகளில் 3 விக்கெட்களை 9.12 என்ற எக்கனாமியில் எடுத்து சுமாராகவே செயல்பட்டார்.

அதனாலேயே மேற்கொண்டு இங்கிலாந்து அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்த அவர் 27 வயது இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும் போதிய அனுபவமின்மை மற்றும் இந்திய ஆடுகளங்களில் இதுவரை விளையாடி அனுபவமில்லாத காரணத்தால் 1 கோடி அடிப்படை விலைக்கு கூட ஏலம் போவது கடினமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

4. அண்ட்ரூ டை: ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் ஒரு கட்டத்தில் ஸ்லோ பந்துகள் போன்ற வேரியசன்களை பயன்படுத்தி ஐபிஎல் தொடர் உட்பட டி20 கிரிக்கெட்டில் 195 போட்டிகளில் 274 விக்கெட்டுகளை 8.11 என்ற எக்கனாமியில் எடுத்தார். ஆனால் சமீப காலங்களில் தடுமாறி வரும் அவர் இந்த வருடம் லக்னோ அணிக்காக 2 போட்டியில் விளையாடி 9.73 என்ற எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கினார்.

அதனால் 35 வயதை கடந்து விட்ட இவருக்கு பதிலாக 1 கோடிக்கும் குறைவான வேறு இளம் வேகப்பந்து வீச்சாளர்களை வாங்குவதற்கு அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

3. முகமத் நபி: ஆப்கானிஸ்தானை சேர்ந்த நட்சத்திர சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டரான இவர் 355 போட்டிகளில் 5203 ரன்களையும் 322 விக்கெட்களை 6.99 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்த ஜாம்பவானாக போற்றப்படுகிறார். இருப்பினும் 37 வயதை தாண்டி விட்ட இவர் சமீப காலங்களில் தடுமாறும் நிலையில் இந்த வருடம் கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டாலும் 1 போட்டியில் கூட விளையாடு வாய்ப்பை பெறவில்லை.

அதனால் கழற்றி விடப்பட்ட அவர் சமீபத்திய ஆசிய கோப்பை உட்பட சமீபத்திய தொடர்களில் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதாலும் வயது காரணமாகவும் எந்த அணியும் குறைந்தபட்ச விலைக்கு கூட வாங்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

2. மார்ட்டின் கப்டில்: நியூசிலாந்தை சேர்ந்த நட்சத்திர அதிரடி தொடக்க வீரரான இவர் சர்வதேச அரங்கில் 3531 ரன்களையும் ஒட்டு மொத்த டி20 கிரிக்கெட்டில் 8569 ரன்களை 130.80 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்துள்ளார். ஆனால் வயது காரணமாக சமீப காலங்களில் திண்டாடு வரும் அவரை 2022 டி20 உலக கோப்பையில் பெஞ்சில் அமர வைத்த நியூசிலாந்து ஃபின் ஆலன் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது.

அதன் காரணமாக ஏற்கனவே இந்திய மண்ணில் எப்போதுமே சிறப்பாக செயல்படாத அவரை நிச்சயமாக இந்த ஏலத்தில் 1 கோடி கொடுத்து எந்த அணியும் வாங்காது என்று நம்பப்படுகிறது.

1. ஷாய் ஹோப்: வெஸ்ட் இண்டீஸ் சேர்ந்த 29 வயது பேட்ஸ்மேனோன இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 104 போட்டிகளில் 4308 ரன்களை எடுத்து சிறப்பாக செயல்பட்டாலும் உள்ளூர் டி20 கிரிக்கெட்டில் 63 போட்டிகளில் 1231 ரன்களை 118.93 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே எடுத்துள்ளார்.

இதையும் படிங்க:ரோஹித் சர்மாவிற்கு பதிலாக செலக்ட்டாகியுள்ள அபிமன்யு ஈஸ்வரன் யார்? – அவர் தேர்வாக என்ன காரணம்?

மேலும் சர்வதேச அளவில் 19 டி20 போட்டிகளில் 304 ரன்களை 121.11 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே எடுத்துள்ளார். அதனாலேயே 2022 ஏலத்தில் 50 லட்சம் அடிப்படை விலைக்கே இவரை எந்த அணியும் வாங்காத நிலையில் தற்போது 1 கோடிக்கு நிச்சயம் எந்த அணியும் வாங்காது என்று சொல்லலாம்.

Advertisement