ஐபிஎல் 2023 சீசனில் கோப்பையை வெல்வதற்காக லக்னோ விடுவிக்க வேண்டிய வீரர்களின் பட்டியல்

KL Rahul LSG Quinton De Kock vs KKR
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கி நாக்-அவுட் சுற்று வரை சென்று தோல்வியடைந்து வெளியேறியது. கௌதம் கம்பீர் ஆலோசனையில் பேட்டிங்கில் கேஎல் ராகுல், குயின்டன் டி காக், தீபக் ஹூடா போன்றவர்களும் பந்துவீச்சில் அவேஷ் கான், மோசின் கான், க்ருனால் பாண்டியா போன்றவர்களும் லீக் சுற்றில் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் நாக்-அவுட் சுற்று சென்றதும் முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் பந்து வீச்சிலும் பீல்டிங்கிலும் மொத்தமாக சொதப்பிய அந்த அணி பேட்டிங்கில் போராடிய போதிலும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.

ஆனாலும் இந்த முதல் வருடத்திலேயே மும்பை, சென்னை போன்ற அணிகள் தடுமாறிய நிலைமையில் பிளே-ஆப் சுற்றுக்கு சென்றது அந்த அணியை பொறுத்தவரை நல்ல தொடக்கமாகும். இந்த ஐபிஎல் பயணத்தில் அடுத்த வருடம் களமிறங்கும் அந்த அணி இந்த வருடம் செய்த தவறுகளை சரி செய்து கோப்பையை முத்தமிட போராட உள்ளது. இருப்பினும் அதற்கு முன்பாக இந்த வருடம் சுமாராக செயல்பட்டு அந்த அணிக்கு பின்னடைவு ஏற்படுத்திய வீரர்களை நீக்க வேண்டிய நிலைமை உள்ளதால் அவர்களைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. மனிஷ் பாண்டே: 2008 முதல் விளையாடி வரும் இவரை இந்த வருடம் 4.60 கோடி என்ற நல்ல தொகைக்கு லக்னோ நிர்வாகம் வாங்கியது. அதில் 6 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற இவர் வெறும் 88 ரன்களை 14.67 என்ற மோசமான சராசரியில் 110.67 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து கிடைத்த வாய்ப்புகளை பொன்னாக மாற்ற தவறினார்.

மேலும் ஆரம்ப காலங்களில் அதிரடியாக விளையாடிய இவர் சமீப காலங்களில் இதே போல் சொதப்பி வருவதால் அடுத்த வருடம் தாராளமாக இவர்களை விடுவித்து வேறு வீரர்களை வாங்கலாம்.

- Advertisement -

2. எவின் லெவிஸ்: 2 கோடிக்கு வாங்கப்பட்ட இவர் இந்த வருடம் 6 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டதில் 5 இன்னிங்சில் 73 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிலும் 1 போட்டியில் 55* ரன்கள் எடுத்தது தவிர பெரும்பாலும் சுமாராக செயல்பட்டார்.

கடந்த 2018இல் தனது அறிமுக ஐபிஎல் தொடரில் 382 ரன்கள் எடுத்தது தவிர அடுத்த 3 ஐபிஎல் தொடர்களில் சுமாராக செயல்பட்டு வரும் இவர் இந்த வருடம் மிடில் ஆர்டரில் லக்னோவுக்கு கைகொடுக்க தவறினார். எனவே இவரை விடுவித்து அடுத்த சீசனில் வேறு வீரர்களை வாங்கி மிடில் ஆர்டரை வலுப்படுத்தலாம்.

- Advertisement -

3. ஆண்ட்ரூ டை: இந்த வருடம் 3 போட்டிகளில் விளையாடிய இவர் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து எதிர்பார்ப்புக்கு ஏற்றாற் போல் செயல்படத் தவறினார். மேலும் அவேஷ் கான், மோசின் கான், சமீரா போன்ற பவுலர்கள் இருப்பதால் இவரை விடுவித்து அடுத்த வருடம் வேறு ஏதேனும் வீரர்களை வாங்க லக்னோ முடிவு எடுத்தால் அது சரியாக அமையும்.

4. கிருஷ்ணப்பா கெளதம்: கடந்த வருடம் 9.25 கோடிக்கு சென்னையில் பெஞ்சில் மட்டும் அமர்ந்து கோப்பையை வென்று லக்னோவுக்கு வந்த இவர் இந்த வருடம் 4 போட்டிகளில் 5 விக்கெட்களை 8.25 என்ற எக்கனாமியில் எடுத்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு எந்த போட்டியிலும் செயல்படவில்லை. எனவே இவரை விடுவித்து அடுத்த வருடம் வேறு ஏதேனும் ஆல்-ரவுண்டர்களை வாங்க லக்னோ முயற்சிக்கலாம்.

- Advertisement -

5. மன்னன் வோஹ்ரா: கடந்த 2014இல் 8 போட்டிகளில் 324 ரன்களை எடுத்தது தவிர சமீப காலங்களில் கிடைக்கும் ஒரு சில வாய்ப்புகளிலும் சிறப்பாக செயல்பட தவறி வரும் இவருக்கு இந்த வருடம் லக்னோ 2 போட்டிகளில் வாய்ப்பளித்தது.

அதில் 19 ரன்களை மட்டுமே எடுத்த அவர் மீண்டும் கிடைத்த வாய்ப்பை பொன்னாக மாற்ற தவறினார். எனவே இவரையும் விடுவித்து அந்தத் தொகையில் வேறு நல்ல வீரர்களை வாங்க லக்னோ முயற்சிக்கலாம்.

சந்தேக பட்டியல்:
1. மார்கஸ் ஸ்டோய்னிஸ்: கடந்த வருடங்களில் டெல்லிக்காக அசத்திய இவரை ராகுலுக்கு பின் 9.20 கோடிக்கு 2-வது வீரராக லக்னோ வாங்கியது. அதில் 10 இன்னிங்சில் 156 ரன்களை 19.50 என்ற சுமாரான சராசரியில் மட்டுமே எடுத்த இவர் பந்து வீச்சிலும் 5 இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை 11.90 என்ற மோசமான எக்கனாமியில் எடுத்தார்.

எனவே தனது தரத்திற்கும் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கும் செயல்பட தவறிய இவரை வேறு நல்ல வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் இல்லாத காரணத்தால் விடுவிக்க லக்னோ நிர்வாகம் யோசிக்க வேண்டியுள்ளது. எனவே அடுத்த வருடம் இவருக்கு மீண்டும் ஒருமுறை தக்கவைத்து வாய்ப்பளித்த பார்த்தாலும் நல்லது நடக்கலாம்.

2. ஜேசன் ஹோல்டர்: வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டரான இவரும் ஸ்டோனிஸ் போலவே 8.75 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட நிலையில் பேட்டிங்கில் 8 இன்னிங்சில் 58 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அதேபோல் பந்து வீச்சில் 12 இன்னிங்சில் 14 விக்கெட்டுகளை 9.42 என்ற சுமாரான எக்கனாமியில் எடுத்தார். இவரின் தரத்திற்கு இது குறைவானது என்ற நிலையில் மீண்டும் நல்ல வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் இல்லையே என்று யோசிக்க வேண்டியுள்ளது.

Advertisement