பிஎஸ்எல் தொடரிலும் ஐபிஎல் தொடரிலும் ஏணி வெச்சாலும் எட்டாத 5 வெளிநாட்டு வீரர்களின் சம்பளம்

Rillew Rossow David Miller Suryakumar Yadav
- Advertisement -

உலகப் புகழ் பெற்ற ஐபிஎல் தொடரின் 16வது வரும் மார்ச் முதல் மே வரை இந்தியாவிலேயே கோடைகாலத்தில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு 8 அணிகளுடன் சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் பல பரிணாமங்களை கண்டு தரத்தில் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளை மிஞ்சி உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் தொடராக உருவெடுத்துள்ளது. மேலும் ஐபிஎல் தொடரால் இந்திய வீரர்களுக்கு நிகராக நிறைய வெளிநாட்டு வீரர்கள் தங்களது திறமையால் பல கோடி ரூபாய்களை ஒவ்வொரு வருடமும் சம்பாதிக்கிறார்கள்.

IPL 2022 (2)

- Advertisement -

அப்படி பல வகைகளில் உயர்ந்து நிற்கும் ஐபிஎல் தொடருக்கு போட்டியாக பரம எதிரியான பாகிஸ்தானில் பிஎஸ்எல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஐபிஎல் தொடரை மிஞ்சுவதற்காக அந்நாட்டு வாரியம் என்னவெல்லாமோ செய்தும் இதுவரை பாதியளவு வெற்றியை கூட பிஎஸ்எல் தொடரால் எட்ட முடியவில்லை. ஆனாலும் ஐபிஎல் தொடரை விட தரத்தில் மிஞ்சிய தங்களது பிஎஸ்எல் தொடர் தான் உலகின் நம்பர் ஒன் டி20 தொடர் என அந்நாட்டவர்கள் வாய் வார்த்தையாக பேசி வருவது சகஜமாகும்.

ஏணி வெச்சாலும்:
இருப்பினும் பிஎஸ்எல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கொடுக்கப்படும் பரிசுத்தொகை ஐபிஎல் தொடரில் உச்சகட்டமாக 17 கோடிகளை வாங்கும் கேஎல் ராகுலின் மொத்த சம்பளத்தை பூர்த்தி செய்ய முடியாது என்றளவுக்கு இருப்பதே அந்த தொடரின் தரமும் வளர்ச்சிக்கு சான்றாகும். அதற்கு மற்றொரு சான்றாக பிஎஸ்எல் மற்றும் ஐபிஎல் தொடரில் சில வெளிநாட்டு வீரர்கள் வாங்கும் சம்பளத்தின் ஏணி வச்சாலும் எட்டாத வித்யாசத்தை பற்றி பார்ப்போம்:

1. ஹரி ப்ரூக்: இங்கிலாந்தின் இளம் அதிரடி வீரரான இவர் 2022 அண்டர்-19 உலக கோப்பையில் அசத்தலாக செயல்பட்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி கடந்த மாதம் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதனால் கவனம் ஈர்க்கப்பட்ட அவர் பிஎஸ்எல் தொடரில் ட்ராப்ட் முறையில் லாகூர் அணிக்கு 82.30 லட்சத்துக்கு வாங்கப்பட்டார்.

- Advertisement -

ஆனால் அவரது திறமையை உணர்ந்து 2023 ஐபிஎல் ஏலத்தில் வாங்குவதற்கு போட்டி போட்ட பல அணிகளுக்கு மத்தியில் ஹைதராபாத் அணி 13.25 கோடிகள் என்ற பிரம்மாண்ட தொகைக்கு வாங்கியது. இந்த 2 தொகைக்கும் எவ்வளவு வித்தியாசம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

Rilee-Rossow

2. ரிலீ ரோசவ்: தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அதிரடி வீரரான இவர் கடந்த வருடம் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் கடைசி போட்டியில் சதமடித்து வெற்றிக்கு பங்காற்றிய நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் சதமடித்து அசத்தினார். அதனால் அனைவராலும் கவனம் ஈர்க்கப்பட்ட அவரை பிஎஸ்எல் தொடரில் 1.4 கோடிக்கு முல்தான் அணி வாங்கியது.

- Advertisement -

ஆனால் இந்திய மண்ணில் இந்திய அணியை அடித்து நொறுக்கிய அவரது திறமையை அறிந்து 2023 ஐபிஎல் ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல் அணி 4.60 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.

Phil Salt

3. பில் சால்ட்: இங்கிலாந்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவரும் சமீப காலங்களில் டி20 கிரிக்கெட்டில் அதிரடியான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதால் பிஎஸ்எல் தொடரில் இஸ்லாமாபாத் அணிக்காக 41.33 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

- Advertisement -

மறுபுறம் இந்திய ஆடுகளங்களில் பெரிய செயல்பாடுகளை வெளிப்படுத்தாத நிலையிலும் 2023 சீசனில் 2 கோடி என்ற அடிப்படை விலைக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை வாங்கியது. இதிலிருந்து அவருடைய அவருடைய அடிப்படை விலை கூட பிஎஸ்எல் தொடரின் உச்சகட்ட விலைக்கு ஈடாகாது என்பதை புரிந்து கொள்ளலாம்.

Will Jacks RCb

4. வில் ஜேக்ஸ்: இங்கிலாந்தை சேர்ந்த சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டரான இவரும் சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதால் 2023 ஐபிஎல் தொடருக்கு பெங்களூரு அணி நிர்வாகம் 3.2 கோடி என்ற பெரிய தொகை கொடுத்து வாங்கியது. ஆனால் அவர் பிஎஸ்எல் தொடரில் இஸ்லாமாபாத் அணிக்காக 41.15 என்ற தொகைக்கு மட்டுமே வாங்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: தோனியின் குடும்பம் மற்றும் நிஜ வாழ்க்கை பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்.

5. டேவிட் வீஸ்: நமீபியா அணிக்காக 37 வயதிலும் அசராமல் விளையாடி வரும் இவர் பிஎஸ்எல் தொடரில் 70.21 லட்சம் என்ற சற்று அதிகப்படியான விலைக்கு லாகூர் அணிக்காக வாங்கப்பட்டுள்ளார். இருப்பினும் இந்திய ஆடுகளத்தில் இதற்கு முன் அசத்தாத காரணத்தால் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் 1 கோடி அடிப்படை விலையில் கொல்கத்தா அணிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

Advertisement