தோனியின் குடும்பம் மற்றும் நிஜ வாழ்க்கை பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்.

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை தன்வய படுத்திய ஒரு மிக சிறந்த வீரர் தோனி என்றால் அது மிகையாகாது. மிக சிறந்த விக்கெட் கீப்பிங், அற்புதமான பேட்டிங், கூலான கேப்டன் இப்படி இவருக்கு பல பரிணாமங்கள் உண்டு. இவை அனைத்தையும் தாண்டி அனைத்து வகையான ஐ.சி.சி கோப்பைகளையும் வென்ற ஒரே விக்கெட் கீப்பர் என்ற புகழ் தல தொனியையே சாரும். அவர் குறித்த சில முக்கிய தகவல்கள் இதோ.

Dhoni young

பிறப்பு மற்றும் பூர்வீகம்:

ராஞ்சியில் பான் சிங் மற்றும் தேவகி தேவி ஆகியோருக்கு 1981 ஆம் ஆண்டு மகனாக பிறந்தார் தோனி. இவருடைய தாய் தந்தையருக்கு 3 குழந்தைகள் அதில் இவர் தான் இளையவர். இவருடைய பூர்வீகம் என்பது உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள லவாலி என்னும் சிறிய கிராமம் தான். ஆனால் தோனி பிறப்பதற்கு முன்பே அவருடைய தந்தை வேலை காரணமாக அந்த கிராமத்தில் இருந்து 1970 ஆம் ஆண்டு வாக்கில் வந்துவிட்டார்.

- Advertisement -

குடும்ப விவரங்கள்:

தோனிக்கு ஒரு அண்ணனும் ஒரு அக்காவும் உண்டு. தோனியின் அண்ணன் பெயர் நரேந்திர சிங் தோனி. இவருடைய மூத்த சகோதரியின் பெயர் ஜெயந்தி குப்தா. தோனி தன் அக்காவோடு நல்ல உறவில் இருந்தாலும் தன் அண்ணனுடன் பேச்சுவாத்தையில் இல்லை. அவருடைய பயோ பிக்கில் (M.S. தோனி : The Untold Story) கூட அவருடைய அண்ணன் குறித்த விவரங்கள் இடம் பெறாதது குறிப்பிட தக்கது.

தோனியின் திருமண வாழ்க்கை:

தோனி மற்றும் சாக்ஷி 2008 ஆண்டு முதல் காதலிக்க துவங்கி 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவருக்கும் ஷிவா என்ற மகள் உண்டு.

விளையாட்டை தவிர்த்து மற்ற விருதுகள்:

2007 – ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது
2009 – பத்மஸ்ரீ விருது
2018 – பத்ம பூசண்
Advertisement