உலகக்கோப்பை தொடரில் விளையாடி காணாமல் போன 5 இந்திய வீரர்கள் – லிஸ்ட் இதோ

Mongia
- Advertisement -

இந்திய அணிக்காக உலக கோப்பை தொடரில் ஆடுவது அவ்வளவு எளிதல்ல. அப்படியே உலக கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டாலும் அந்த தொடரில் நன்றாக இருந்தால் மட்டுமே தொடர்ந்து அணியில் நீடிக்க முடியும். அப்படி ஒரு சில உலக கோப்பை தொடரில் தேர்வாகி ஆடிவிட்டு அதன் பின்னர் இந்திய அணியில் இருந்து காணாமல் போன வீரர்களின் பட்டியலை காண்போம்.

Mongia 1

- Advertisement -

தினேஷ் மங்கியா :

2003ஆம் ஆண்டு உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார் இவர். அந்த தொடரில் பெரிதாக ஆடவில்லை. அதன் பின்னர் இந்திய அணிக்காக 15 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். கடைசியாக 2007-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவின் முதல் டி20 தொடரில் ஆடினார். இந்த உலக கோப்பை தொடருக்குப் பின்னர் இவர் காணாமல் போய்விட்டார்.

Munaf

முனாஃப் படேல் :

- Advertisement -

2011ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை தொடரை வென்ற போது இந்தியாவின் மிக முக்கிய பந்துவீச்சாளராக இருந்தார். அதன் பின்னர் இவரது பந்துவீச்சின் வேகமும், விக்கெட் எடுக்கும் திறன் குறைந்து போனது. இந்திய அணிக்காக தோனியின் தலைமையில் 13 டெஸ்ட், 71 ஒரு நாள், 39 டி20 போட்டிகளில் ஆடி 126 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Mohith 1

மோகித் ஷர்மா

- Advertisement -

இவர் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தோனியின் அணியில் இடம் பிடித்திருந்தார் . அந்த தொடரில் 8 ஒருநாள் போட்டிகளில் ஆடி 13 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அதன் பின்னர் இவருக்கு இந்திய அணியில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணிக்காக 26 ஒரு நா,ள் 8 டி20 போட்டிகளில் ஆடியுள்ள இவர் 36 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

sadgopan-ramesh

சடகோபன் ரமேஷ் :

- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேன் 1999 உலக கோப்பை தொடரில் ஆடினார். அந்த போட்டியில் 144 ரன்கள் விளாசி இருந்தார். அதன் பின்னர் இவருக்கு இந்திய அணியில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. மொத்தம் 24 ஒருநாள் போட்டிகளில் ஆடி 646 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

Salil

சலில் அங்கோலா :

இவர் 1996 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக ஆடினார். ஆல்-ரவுண்டரான இவர் ஒரே ஒரு போட்டியில் மட்டும் 5 ஓவர்கள் பந்து வீசினார். இதுதான் இவர் ஆடிய முதல் மற்றும் கடைசி போட்டி ஆகும். ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக 20 போட்டிகளில் இவர் விளையாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement