இன்னும் இந்தியாவுக்காக விளையாடவே இல்லை – அதற்குள் கோடீஸ்வரர்களான 5 இந்திய வீரர்கள் – லிஸ்ட் இதோ

Million
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. கடந்த 2018க்கு பின் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு முதல் முறையாக மெகா அளவில் நடைபெற உள்ள இந்த ஏலம் பெங்களூரு மாநகரில் பிப்ரவரி 12ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது. இந்த மெகா ஏலத்தில் அனைத்து அணிகளும் பங்கேற்று தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுக்க காத்திருக்கின்றன.

IPL

- Advertisement -

உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள், வல்லுநர்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 590 வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள். பொதுவாக ஐபிஎல் ஏலம் என்பது நவீன கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்து வருகிறது. ஏனெனில் வெறும் 2 மாதங்கள் நடைபெறும் இந்தத் தொடருக்காக கோடிக்கணக்கில் சம்பளம் கொட்டிக் கொடுக்கப்படுகிறது.

கோடீஸ்வரர்கள்:
இந்த ஐபிஎல் ஏலம் எத்தனையோ வறுமையில் தவித்து வந்த கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்வளித்து ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாற்றிய கதைகளை பலமுறை பார்த்துள்ளோம். இதன் காரணமாக சமீப காலங்களாக தங்கள் நாட்டுக்கு விளையாட விரும்புவதை விட ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் வீரர்கள் விரும்ப தொடங்கிவிட்டார்கள். சரி இந்த வேளையில் இதுவரை இந்தியாவிற்காக விளையாடாத ஒரு சில வீரர்கள் ஐபிஎல் காரணமாக கோடீஸ்வரர்களாக மாறியுள்ளதை பற்றி பார்ப்போம்.

Ravi Bisnoi

1. ரவி பிஸ்னோய் (4 கோடிகள்): கடந்த 2020ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகள் (17 விக்கெட்கள) வீழ்த்திய பந்துவீச்சாளராக மிரட்டிய ரவி பிஷ்னோய் அந்த வருடமே 2 கோடி ரூபாய்களுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த 2 சீசன்களாக பஞ்சாப் அணியில் விளையாடி வரும் இவர் முழுமையான வாய்ப்பை பெறாவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளில் அபாரமாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

- Advertisement -

இதுவரை பங்கேற்ற 23 ஐபிஎல் போட்டிகளில் 24 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ள இவரை பஞ்சாப் அணி நிர்வாகம் தக்க வைக்காத காரணத்தால் ஐபிஎல் 2022 தொடரில் தங்கள் அணிக்காக விளையாட லக்னோ அணி நிர்வாகம் 4 கோடி ரூபாய்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இத்தனைக்கும் இவர் இந்தியாவிற்காக இதுவரை விளையாடியது கிடையாது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் முதல் முறையாக இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Arshdeep

2. அர்ஷிதீப் சிங்: 23 வயதாகும் அர்ஷிதீப் சிங் கடந்த 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். கடந்த 2 வருடங்களாக கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் பட்டையை கிளப்பிய இவர் கடைசியாக கடந்த 2021 சீசனில் 12 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குறிப்பாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த இவர் சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே கோப்பையில் 5 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

- Advertisement -

இதுவரை 23 ஐபிஎல் போட்டிகளில் 30 விக்கெட்டுக்களை எடுத்துள்ள இவரின் திறமையைப் பார்த்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் ஐபிஎல் 2022 தொடருக்காக முகமது சமி போன்ற மூத்த பவுலர்களை கூட தக்கவைக்காமல் இவரை 4 கோடிகளுக்கு தக்கவைத்துள்ளது. இத்தனைக்கும் இதுவரை இவர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை.

Jaiswal-4

3. யாஷஸ்வி ஜெய்ஸ்வால் : ரவி பிஸ்னோய் போல 2020 அண்டர்-19 உலக கோப்பையில் அசத்திய இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வல் கடந்த 2020 ஐபிஎல் தொடரில் 2.4 கோடிகளுக்கு ராஜஸ்தான் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடிய அவர் 289 ரன்களை குவித்தார். கடந்த வருடமும் 10 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற இவர் 249 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

மேலும் கடந்த வருடம் நடந்த ஒரு உள்ளூர் போட்டியில் இரட்டை சதமடித்த அவர் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். எனவே இவ்வளவு திறமையுள்ள இவரை ஐபிஎல் 2022 தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் மீண்டும் 4 கோடிகளுக்கு தக்கவைத்துள்ளது. ஆரம்ப காலத்தில் பானிபூரி விற்ற இவர் இதுவரை இந்தியாவிற்காக விளையாடாத போதிலும் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.

Umran-1

4. உம்ரான் மாலிக் (4 கோடிகள்): கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்த தமிழகத்தின் நடராஜன் பாதியில் வெளியேறிய காரணத்தால் அவரின் இடத்தில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக் விளையாட வாய்ப்பு பெற்றார். கிடைத்த வாய்ப்பை உறுதியாக பிடித்த அவர் தொடர்ச்சியாக 145 கீ.மீ மேல் பந்து வீசி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். குறிப்பாக கடந்த வருடம் பெங்களூருக்கு எதிரான ஒரு போட்டியில் 153 கிலோமீட்டர் வேகப் பந்தை வீசிய அவர் ஐபிஎல் 2021 தொடரின் அதிவேக பந்தை வீசிய பவுலராக சாதனை படைத்தார்.

இதன் காரணமாக குறுகிய காலகட்டத்திலேயே பெரிய பெயரை எடுத்த இவரை ஐபிஎல் 2022 தொடருக்காக ஹைதெராபாத் அணி நிர்வாகம் 4 கோடிகளுக்கு தக்கவைத்துள்ளது. இவரும் இதுவரை இந்தியாவிற்காக விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Abdul Samad

5. அப்துல் சமட் (4 கோடிகள்) : ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளம் அதிரடி வீரர் அப்துல் சமத் கடந்த 2020ஆம் ஆண்டு வெறும் 20 லட்சத்துக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாட ஒப்பந்தம் ஆனார். கடந்த 2 சீசன்களாக இவருக்கு முழுமையாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த வாய்ப்புகளில் தனது அதிரடியாக பேட்டிங் செய்யும் திறமையை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக கடைசி நேரத்தில் களமிறங்கி சிறப்பாக பினிஷிங் செய்யும் இவரின் திறமையை பார்த்த ஹைதராபாத் நிர்வாகம் இவரையும் 4 கோடி ரூபாய்களுக்கு தக்கவைத்துள்ளது. அத்துடன் அவ்வப்போது பந்து வீசும் வல்லமை படைத்த இவர் இதுவரை 23 ஐபிஎல் போட்டிகளில் 222 ரன்களை எடுத்துள்ளார். இவரும் இதுவரை இந்தியாவிற்காக விளையாடாத போதிலும் கோடீஸ்வரராக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement