ஐபிஎல் போட்டில்யில் இருந்து விலகும் 5 அதிரடி வீரர்கள் – யார் தெரியுமா ?

JADEJA
- Advertisement -

நடந்து வரும் ஐபில் போட்டிகளில் பல இளம் வீரர்கள் ஆடிக்கொண்டு தான் வருகின்றனர். மேலும் ஒரு சில வயதான வீரர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்வின் கடைசி அத்தியாயத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றனர். அந்த விரிசையில் ஒரு சில சர்வதேச வீரர்களும் இருக்கின்றனர். ,மேலும் அவர்களின் சிலருக்கு இதுவே கடைசி ஐபில் தொடராக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.


அந்த வரிசையில் முதல் 5 இடத்தில் உள்ள ஒரு சில வீரர்களின் பட்டியலை இங்கே காணலாம்.

- Advertisement -

1. ஹர்பஜன் சிங் :-கடந்த 2008 முதல் 2017 வரை மும்பை அணிக்காக ஆடி வந்த இவர் தற்போது சென்னை அணியில் ஆடி வருகிறார். மேலும் 37 வயதாகும் இவர் இன்று இருக்கும் இளம் வீரர்களுக்கு போட்டி கொடுப்பது என்பது சற்று கடினமான விஷயம் தான். மேலும் ஆப் ஸ்பின்னர் பந்து வீச்சாளராக இருந்தாலும் இவர் முன்பு இருந்த அளவிற்கு தற்போது இவரின் செயல் திறன் இல்லை என்பது தான் உண்மை.

harbhajan

2. யுவராஜ் சிங்:- 36 வயதாகும் இவர் கடந்த பல ஐபில் சீசனில் வரை பஞ்சாப் அணியில் ஆடி வந்தார் . இந்த இந்த ஆண்டும் அதே அணியில் ஆடி வருகிறார். மேலும் சில ஆண்டுகளாகவே இவரது ஆட்டம் யாரையும் கவர்ந்த வண்ணம் இல்லை. இவரின் ஆட்டத்தில் வேகம் குறைந்ததினாலேயே இவரை இந்திய அணியில் இருந்தும் ஒதுக்கி வைத்துள்ளனர்.

yuvi

3. கவுதம் கம்பிர் :- ஒரு காலத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்த கவுதம் கம்பிர் தற்போது இந்திய ஆனால் அறவே கைவிடபட்ட ஒரு வீரர் .கடந்து ஆண்டு வரை கொல்கத்தா அணியில் ஆடி வந்த இவர் தற்போது டெல்லி அணியில் ஆடி வருகிறார். ஏற்கனவே இந்த ஐபில் தொடரில் டெல்லி அணியின் மோசமான தொடர் தோல்விகளால் தனது கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தார். எனவே இவர் அடுத்த ஆண்டு நடக்கும் ஐபில் போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகம் தான்.

- Advertisement -

gambir

4. யூசப் பதான்:- இந்திய அணியின் ஆல் ரௌண்ட் பிளேயராக இருந்த யூசப் தற்போது ஹைதராபாத் அணியில் விளையாடி வருகிறார். இவரது பலமே நல்ல பந்து வீச்சும் அதிரடியான பேட்டிங்கும் தான். ஆனால் இந்த தொடரில் இவரது ஆட்டம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. மேலும் 35 வயதை நெருங்கி கொண்டிருக்கும் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிலில் ஏலம் போவாரா என்பதே சந்தேகம் தான்.

yusuf

5.வினய் குமார்:-பெங்களூர் அணியின் வேகப்பந்து வீரரான இவர் இந்திய அணியில் ஒரு சில சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால் சில ஆண்டுகளாக இவரது பந்துவீச்சு மிகவும் மோசமாக தான் உள்ளது. அதிலும் இந்த ஐபில் தொடரில் இதுவரை இவர் ஆடிய 2 போட்டிகளில் இவரின் பந்து வீச்சில் 16.95 என்ற ரன் வீகிதத்தை வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக சென்னைக்கு எதிரான போட்டியில் இவர் வீசிய கடைசி ஒவேரில் 17 ரன்களை கொடுத்தது இவருக்கு மிக பெரிய அடியாக அமைந்துள்ளது.

Advertisement