களத்திற்கு வெளியே சக இந்திய வீரர்களை கலகலப்பாக கலாய்த்த ரிஷப் பண்ட் – 5 ஜாலியான தருணங்கள்

Pant-1
- Advertisement -

டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கடந்த சில வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் முதன்மையான விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படும் அளவுக்கு சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக இந்திய விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை மாற்றிய ஜாம்பவான் தோனிக்கு பின் அவரை போன்ற ஒரு விக்கெட் கீப்பர் கிடைப்பரா என கவலையடைந்த இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாகும் வகையில் செயல்பட்டு வரும் இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சும் சாதனைகளை படைத்து வரலாற்று வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். வெள்ளை பந்து கிரிக்கெட்டிலும் நல்ல வளர்ச்சியைக் கண்டு வரும் இவர் இந்திய பேட்டிங்கின் வருங்கால சூப்பர் ஸ்டாராக கருதப்படுகிறார்.

பொதுவாக எஞ்சிய 10 வீரர்களுக்கும் உத்வேகத்தைக் கொடுக்கும் வகையில் ஸ்டம்ப்க்கு பின்புறம் நின்று ஏதாவது பேசிக்கொண்டே எப்படி பந்து வீச வேண்டும் என்ற சில ஆலோசனைகளை பவுலருக்கு கொடுத்துக்கொண்டு இருப்பதே விக்கெட் கீப்பர்களின் முக்கிய வேலையாகும். அந்த வேலைக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் செயல்படும் ரிஷப் பண்ட் ஒவ்வொரு பந்துக்கும் இடையே சக அணி வீரர்களிடம் ஜாலியாக கலகலப்பாக பேசிக்கொண்டே விக்கெட் கீப்பிங் செய்வார். அதேபோல் எதிரணி பேட்ஸ்மேன்களிடம் தேவைப்படும்போது கலகலப்பான ஸ்லெட்ஜிங் செய்யவும் தயங்காத அவர் களத்தில் மிகவும் ஜாலியான மனிதராக கருதப்படுகிறார்.

- Advertisement -

சமூக வலைதள கலாட்டாக்கள்:
சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நிக்கோலஸ் பூரனை ரன் அவுட் செய்வதற்காக கிடைத்த வாய்ப்பில் பந்தை கையில் வாங்கிய பின்பும் பெயில்ஸை எடுக்காமல் அவர் வருவாரா என்று சில வினாடிகள் காத்திருந்ததால் கேப்டன் ரோகித் சர்மா கோபமடையும் அளவுக்கு விளையாட்டு காட்டியது எடுத்துக்காட்டாகக் கூறலாம். அந்தளவுக்கு விளையாட்டு குணத்தை கொண்டுள்ள அவர் நவீன யுகத்தின் வளர்ச்சியின் உச்ச பட்சமாக கருதப்படும் சமூக வலைதளங்களிலும் சக வீரர்களை கிண்டலடிப்பது வழக்கமானதாகும். அந்த வகையில் களத்திற்கு வெளியே சமூக வலைதளங்களில் ரிஷப் பண்ட் கலகலப்பை வெளிப்படுத்திய 5 தருணங்களை பற்றி பார்ப்போம்.

1. என்னை கூப்பிடாத்திங்க: இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு இழந்துள்ள மந்தீப் சிங் கடந்த 2017இல் சந்தித்த காயத்துக்கு லண்டனுக்கு சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அந்த புகைப்படத்தை தனது ட்வீட்டரில் பதிவிட்டு நலமுடன் உள்ளதாக தெரிவித்திருந்த அவருக்கு பதிலளித்த ரிஷப் பண்ட் கலகலப்புடன் தெரிவித்தது பின்வருமாறு.

- Advertisement -

“நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் ப்ரோ, ஆனால் உங்களுக்கு ஏதாவது உதவி தேவை ஏற்பட்டால் எனக்கு தெரியப்படுத்தாதீர்கள், ஹாஹா. உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.

2. அக்சருடன் ஜாலி: கடந்த 2021இல் ஐபிஎல் தொடரின்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் உடன் ஒரு தொலைபேசி மையத்தை மையப்படுத்தி புகைப்படம் எடுத்துக்கொண்ட அக்ஷர் பட்டேல் அதை தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

அதற்கு “இது எங்களது வாழ்க்கை, எங்களுடைய ஸ்டைலும் எங்களுடைய சொந்த விருப்பமாக இருக்க வேண்டும்” என்று தலைப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ரிஷப் பண்ட் சாதாரண புகைப்படத்தை வைத்து தத்துவத்தை சொன்ன அக்சர் பட்டேலை கலாய்க்கும் வகையில் “நீங்கள் சொன்னது போலவே சார்” என்று சிரிப்புடன் பதிலளித்தார்.

3. ஸ்டைல் பண்ட்: கடந்த 2019இல் ஸ்டைலாக இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு காலை வணக்கம் தெரிவித்த ரிஷப் பண்ட்டை பார்த்த ரோகித் சர்மா தனது குழந்தையை பார்த்துக்கொள்ள உங்களைப் போன்ற ஆள் தேவைப்படுகிறது என்று கலகலப்பாக பதிலளித்தார். அப்படி செய்தால் தனது மனைவி ரித்திகா மிகவும் மகிழ்ச்சியடைவார் என்றும் கூறினார்.

- Advertisement -

அந்த சமயத்தில் நடந்த பார்டர் – கவாஸ்கர் தொடரின்போது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பைன் தனது குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு ஸ்லெட்ஜிங் செய்ததை நிஜமாக ரிஷப் பண்ட் செய்து காட்டியதே ரோகித் அப்படி கூறியதற்கான காரணமாகும். அதற்கு “ஹாஹா, யுஸ்வென்ற சஹால் தன்னுடைய வேலையை சரியாக செய்யவில்லையா? இல்லையென்றாலும் சமைராவை (ரோஹித் மகள்) பார்த்துக் கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் ரித்திகா (ரோஹித் மனைவி)” என்று ரிஷப் பண்ட் மகிழ்ச்சியுடன் பதிலளித்தார்.

4. இஷாந்த் சர்மா: 2021இல் தனது பிறந்தநாளை கொண்டாடிய போது கேக் தடவிய முகத்துடன் எடுத்த புகைப்படத்தை இஷாந்த் சர்மா பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு “நன்றி இஷாந்த் பையா. ஆனால் என்னுடைய கையை ஏன் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்” ரிஷப் பண்ட் என்று கலகலப்பை வெளிப்படுத்தினார்.

5. ரசித் கான்: ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் டி20 பந்துவீச்சாளராக கருதப்படும் ரசித் கான் கடந்த வருடம் கண்ணாடியின் முன்புறம் நின்று செல்பி எடுத்து பதிவிட்டிருந்தார். அதில் 2 – 3 உருவங்கள் தெரிந்ததை வைத்து கலாய்த்த ரிஷப் பண்ட் “ஹாஹா, ரசித்திடம் எத்தனை ரசித் இருக்கிறார் என்று கேளுங்கள்” என பதிலளித்து தன்னுடைய ஜாலியான குணத்தை வெளிப்படுத்தினார்.

Advertisement