டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவுக்கு பின் அறிமுகமாகி இன்று கோச்சாக திகழும் 6 முன்னாள் வீரர்கள்

Parthiv-Patel
- Advertisement -

மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கடந்த 2006ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அறிமுகமானார். நல்ல திறமை கொண்டிருக்கும் அவர் ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் அதிகப்படியான வாய்ப்புகளை பெற்று ரொம்பவே தடுமாறி நிலையான இடத்தை பிடிக்க திண்டாடினார். இருப்பினும் 2007 டி20 உலகக் கோப்பை பைனல் இன்னிங்க்ஸ் போன்ற அவரது திறமையை கவனித்துக் கொண்டே வந்த அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி 2011 உலகக் கோப்பைக்கு பின் சேவாக், கம்பீர் ஆகியோரை கழற்றி விட்டு அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்காக 2013இல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இவரை தொடக்க வீரராக களமிறக்கும் அற்புதமான முடிவை எடுத்தார்.

Rohith

- Advertisement -

அதுவரை அம்பியாக செயல்பட்டு வந்த அவர் அதை கச்சிதமாக பயன்படுத்தி அந்நியனாக மாறி ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், 2019 ஒரே உலகக்கோப்பையில் 5 சதங்கள் உட்பட ஏராளமான சாதனைகளையும் ரன்களையும் வெற்றிகளையும் குவித்து இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார். மேலும் 2019க்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கால்தடம் பதித்த அவர் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்றதால் இன்று 3 வகையான இந்திய அணிக்கும் கேப்டனாகும் அளவுக்கு பிரம்மாண்ட வளர்ச்சி கண்டுள்ளார். அத்துடன் கடந்த 2007இல் இங்கிலாந்துக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இன்று சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடி அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்துள்ளார்.

6 பயிற்சியாளர்கள்:
ஆனால் எப்போதுமே ஆச்சர்யங்களுக்கு பஞ்சமில்லாத கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவுக்கு பின் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமாகி அவருக்கு முன்பாக ஓய்வு பெற்று இன்று பயிற்சியாளராக செயல்படும் 6 முன்னாள் வீரர்களை பற்றி பார்ப்போம்:

Balaji
1. லக்ஷ்மிபதி பாலாஜி: தமிழகத்தைச் சேர்ந்த இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த முதல் பந்து வீச்சாளராக சாதனை படைத்தாலும் இந்தியாவுக்காக கடந்த 2012இல் அறிமுகமாகி 5 டி20 போட்டிகளில் மட்டும் விளையாடினார். இருப்பினும் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படாததால் வாய்ப்புகளை இழந்த அவர் முன்னதாகவே ஓய்வு பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

2. பார்திவ் படேல்: இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பராக விளையாடி சுமாராக செயல்பட்டு தோனி இருந்ததால் வாய்ப்புகளை பெறாத இவர் கடந்த 2011இல் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2 போட்டிகளில் மட்டும் விளையாடினார்.

- Advertisement -

Parthiv

இருப்பினும் சுமாராக செயல்பட்டு 2018இல் சர்வதேச கிரிக்கட்டில் ஓய்வுபெற்ற இவர் தற்போது துபாயில் உருவாக்கப்பட்டுள்ள மும்பை நிர்வாகத்தின் எம்ஐ எமிரேட்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. வினய் குமார்: உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்ட இவர் இந்தியாவுக்காக கடந்த 2013இல் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி சுமாராக செயல்பட்டதால் 9 போட்டிகளுடன் கழற்றி விடப்பட்டார்.

- Advertisement -

அதன்பின் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை இழந்த அவர் ஓய்வுக்குப் பின் உள்ளூர் கிரிக்கெட்டில் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது எம்ஐ எமிரேட்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. ஆஷிஷ் நெஹ்ரா: இந்தியாவின் திறமையான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இவர் கடந்த 2009இல் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2016 டி20 உலக கோப்பை உட்பட 2017இல் 27 போட்டிகளில் விளையாடி ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் பெங்களூரு போன்ற ஐபிஎல் அணிகளில் பயிற்சியாளராக செயல்பட்டு கோப்பையை வெல்லாத காரணத்தால் கிண்டலுக்கு உள்ளான அவர் இந்த வருடம் குஜராத் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார்.

- Advertisement -

nehra 1

சாதாரண பேப்பரில் பிளான் போட்டு, சாப்பிட்டு நிம்மதியாக தூங்குங்கள் என்று வீரர்களிடம் அன்புடன் நடந்து கொண்ட அவருடைய கோச்சிங் ரசிகர்களை கவர்ந்த நிலையில் அவரது தலைமையிலான குஜராத் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்றது. அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் கோப்பையை வென்ற முதல் இந்திய தலைமை பயிற்சியாளர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

1. ராகுல் டிராவிட்: ஜாம்பவான் சச்சினுக்கு பின் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள இவர் பெரும்பாலும் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக அறியப்பட்டதால் தனது கேரியரின் கடைசி வருடங்களான 2011இல் இங்கிலாந்துக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதுவே அவருடைய கடைசி டி20 போட்டியாகவும் அமைந்த நிலையில் ஹாட்ரிக் சிக்சர் உட்பட 32 ரன்களை குவித்து ரசிகர்களின் பாராட்டை பெற்ற அவர் 2012இல் ஓய்வு பெற்றார்.

dravid

ஓய்வுக்குப்பின் 2016 முதல் அண்டர்-19 இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வந்த அவர் கடந்த வருடம் முதல் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் ஷர்மாவுக்கு உறுதுணையாக இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

Advertisement