துவக்கத்தில் சொதப்பி பின்னர் கேப்டனால் காப்பற்றப்பட்டு பின்னர் பெரிய வீரராக மாறிய 5 உலக வீரர்கள் – லிஸ்ட் இதோ

Raina
- Advertisement -

இந்திய அணியில் இளம் வீரர்கள் பலர் உருவாவதற்கு அவர்களது கேப்டன்கள் மிகவும் முக்கிய காரணமாக இருந்துள்ளனர். ஒருசில இளம் வீரர்கள் நன்றாக ஆட மாட்டார்கள். ஆனால் போகப்போக பட்டையைக் கிளப்புவார்கள் அப்படி துவக்கத்தில் நன்றாக ஆடாமல் இருந்த வீரர்களை காப்பாற்றி வைத்திருந்த உலக கேப்டன்களைப் பற்றி தற்போது பார்ப்போம்.

Kaif

- Advertisement -

சௌரவ் கங்குலி – யுவராஜ் சிங் :

சௌரவ் கங்குலி கேப்டன் ஆன போது யுவராஜ் சிங்கை 19 வயதில் அணியில் அறிமுகப்படுத்தினார். ஆனால் இரண்டு வருடங்களாக இவர் சரியாக ஆடவில்லை. இருந்தாலும் தொடர்ந்து அவர் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புகள் கொடுத்துக்கொண்டே இருந்தார். அதன் பின்னர்தான் இந்திய அணியின் மிக முக்கிய வீரராக யுவராஜ் சிங் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

rainayoyo

எம்எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா :

- Advertisement -

தோனி 2003 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமானார். சுரேஷ் ரெய்னா 2005 ஆம் ஆண்டு அறிமுகமானார். தோனி கேப்டன் ஆன பின்னர் ரெய்னாவை தான் தனது அணியின் மிக முக்கிய வீரராக வைத்திருந்தார். தோனியின் தலைமையில் சுரேஷ் ரெய்னா 4,362 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Watson

ரிக்கி பாண்டிங் – ஷேன் வாட்சன் :

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த கேப்டனாக ரிக்கி பாண்டிங் அவரது ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் ஆரம்பகட்டத்தில் அதிக வாய்ப்பு கொடுத்து தக்க வைத்தார். 2002ஆம் ஆண்டு 21 வயதில் அறிமுகமானார் ஷேன் வாட்சன் தொடர்ச்சியாக இருந்தாலும், அவரை ஆரம்ப கட்டத்தில் 26 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆட வைத்திருந்தார் ரிக்கி பாண்டிங்.

Waqar

இம்ரான் கான் – வக்கார் யூனிஸ் :

- Advertisement -

பாகிஸ்தான் அணி கேப்டன் இம்ரான் கான் தலைமையில் 1989 ஆம் ஆண்டு வக்கார் யூனிஸ் என்ற வேகப்பந்து வீச்சாளர் அறிமுகமானார். துவக்கத்தில் நன்றாக ஆடவில்லை இருந்தாலும் 40 ஒருநாள் போட்டிகளிலும் 11 டெஸ்ட் போட்டிகளிலும் ஆட வைத்தார் இம்ரான் கான்.

Atapattu

அர்ஜுனா ரணதுங்கா – மார்வன் அட்டப்பட்டு :

1988 ஆம் ஆண்டு அர்ஜூன ரணதுங்கா இலங்கை அணியின் கேப்டனாக பதவி ஏற்றார் 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரையும் வென்று கொடுத்தார். மார்வன் அட்டப்பட்டு அவரது தலைமையில் 1994ம் ஆண்டு அறிமுகமான முதல் 7 போட்டிகளில் ஆறுமுறை டக் அவுட் ஆகி ஒரு முறை ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்து இருந்தார். இருந்தாலும் அவரை தொடர்ந்து 21 டெஸ்ட் போட்டிகளிலும் 71 ஒருநாள் போட்டியிலும் ஆட வைத்தார் அர்ஜுன ரணதுங்கா.

Advertisement