- Advertisement -
கிரிக்கெட் செய்திகள் | Today Cricket news in Tamil

டி20 உலக கோப்பை வரலாற்றில் மறக்க முடியாத 5 சர்ச்சை நிகழ்வுகள் – வித்யாசமான பதிவு

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. பொதுவாக டி20 உலகக் கோப்பை என்றாலே அதிரடி சரவெடியாக பேட்ஸ்மேன்கள் பறக்கவிடும் சிக்சர்களும் பவுண்டரிகளும் பிரபலமாகும். ஆனால் சில சமயங்களில் ரசிகர்கள் விரும்பத்தகாத நிகழ்வுகள் களத்திலும் களத்திற்கு வெளியேயும் நடந்து சர்ச்சைகளையும் ஏற்படுத்தி செல்லும். அந்தவகையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் நடைபெற்ற சில சர்ச்சை நிகழ்வுகளை பார்ப்போம்:

5. மண்டியிட மாட்டேன்: சமீப காலங்களில் கிரிக்கெட்டில் நிலவும் நிறவெறி தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அனைத்து அணிகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டி துவங்குவதற்கு முன்பாக ஒற்றை காலை மண்டியிட்டு கையை மேலே உயர்த்தி விழிப்புணர்வையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

- Advertisement -

குறிப்பாக கருப்பு நிற வீரர்களைக் கொண்ட தென் ஆப்பிரிக்கா போட்டி தவறாமல் கடைப்பிடித்து வந்த நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் அதை குவின்டன் டி காக் செய்ய மறுத்தார். அதனால் அப்போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்ட அவர் முதலில் சொந்தக் காரணங்களுக்காக விலகினார் என்று கேப்டன் பவுமா தெரிவித்தார்.

ஆனால் பின்புதான் மண்டியிட மறுத்ததற்காக நீக்கப்பட்டது தெரிய வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின் அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்ட டி காக் இனிமேல் மகிழ்ச்சியுடன் அதை செய்வதாக மனம் திருந்தினார்.

- Advertisement -

4. டபுள் பிட்ச்: கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் 289 ரன்களைக் குவித்த டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா முதல் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருதை வென்றார். அந்த பயணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் அந்த அணியின் முகமது ஹபீஸ் வீசிய 8வது ஓவரின் ஒரு பந்து கைநழுவி டபுள் பவுன்ஸ் ஆகி வரையறுக்கப்பட்ட பிட்ச்சுக்கு வெளியே வந்தது.

விதிமுறைப்படி அதை அடிக்காமல் விட்டுருக்க வேண்டிய வார்னர் வேண்டுமென்றே பிட்ச்க்கு வெளியே வந்து சிக்ஸர் விளாசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின் நடுவர் அதை நோ பால் என அறிவித்தாலும் பிட்ச் வெளியே கைநழுவி வந்த பந்தை வேண்டுமென்றே அடித்ததற்கு வார்னர் நிறைய விமர்சனங்களை சந்தித்தார்.

- Advertisement -

3. மதவெறி தாக்குதல்: அதே உலக கோப்பையில் 1992 முதல் தொடர்ச்சியாக வென்று வந்த இந்தியாவை துபாயில் நடைபெற்ற போட்டியில் தோற்கடித்த பாகிஸ்தான் சரித்திரத்தை மாற்றி எழுதியது. அப்போட்டியில் 3.5 ஓவர்களை வீசிய இந்தியாவின் முகமது சமி விக்கெட்டுகளை எடுக்காமல் 43 ரன்களை வாரி வழங்கி சுமாராக செயல்பட்டார்.

ஆனால் அவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் இஸ்லாம் நாடான பாகிஸ்தானின் வெற்றிக்கு உதவும் வகையில் வேண்டுமென்றே செயல்பட்டதாக சமூக வலைதளங்களில் கடுமையான மதவெறி தாக்குதலை சந்தித்தார். அந்த சமயத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய அந்த நிகழ்வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விராட் கோலி முதல் சச்சின் டெண்டுல்கர் வரை ஷமிக்கு ஆதரவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2. வீட்டுக்கு போங்க: சமீபத்தில் மறைந்த ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மகத்தான வீரராக செயல்பட்டதற்கு நிகராக நிறைய விமர்சனங்களையும் சந்தித்தவர். அதில் முக்கியமாக கடந்த 2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவின் முதல் போட்டி துவங்குவதற்கு முன்பாக மது அருந்திய அவர் நன்னடத்தையின்றி நடந்து கொண்டார்.

அதனால் அதிருப்தியான ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் பாரபட்சமின்றி உடனடியாக அவரை அணியிலிருந்து அதிரடியாக நீக்கி ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிலும் அவரது கேரியரிலும்ல் மிகப்பெரிய சர்ச்சையாக இன்றும் பார்க்கப்படுகிறது.

1. வரலாற்று சம்பவம்: இது சர்ச்சை என்று சொல்ல முடியாது சரித்திரம் என்று சொல்லலாம். ஆம் 2007இல் நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பையில் டர்பன் நகரில் இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்தியாவுக்கு ஸ்டூவர்ட் பிராட் வீசிய 19வது ஓவரை எதிர்கொண்ட யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்து வெற்றியை பெற்று கொடுத்தார். அந்த ஓவரின் துவக்கத்தில் ஆண்ட்ரூ பிளின்டாப் ஸ்லெட்ஜிங் செய்ததற்கு ப்ராட் பலியானார் என்பதை அனைவரும் அறிவோம்.

ஆனால் அதற்கு முந்தைய ஓவரில் 2 பவுண்டரிகளை அடித்ததற்காக “உனது கழுத்தை (சங்கு) அறுத்து விடுவேன்” என்று ஆண்ட்ரூ ப்ளின்டாப் ஸ்லெட்ஜிங் செய்ததால் கோபமடைந்து 6 சிக்ஸர்களை அடித்ததாக கடந்த 2020ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சனிடம் இன்ஸ்டாகிராம் நேரலையில் யுவராஜ் தெரிவித்தது ஆச்சரியமாகவும் சர்ச்சையாகும் பார்க்கப்பட்டது.

அத்துடன் அதே வருடம் ஒரு ஒருநாள் போட்டியில் தன்னுடைய ஓவரில் 5 சிக்சர்களை அடித்து டிம்ரிட்டி மஸ்க்ரனஸை அப்போட்டியில் அந்த சிக்சர்களை அடித்து விட்டு முதலாவதாக பார்த்து பார்வையினாலேயே பதிலடி கொடுத்ததாக யுவராஜ் சிங் கெத்தாக தெரிவித்ததார்.

- Advertisement -
Published by