ஐ.பி.எல் வரலாற்றில் சிறந்த 5 பவுலிங் ஸ்பெல். மிகச்சிக்கனமாக வீசிய 5 பந்துவீச்சாளர்கள் – லிஸ்ட் இதோ

Bowlers
- Advertisement -

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர்களை விட ஒரு ஓவருக்கு குறைவான ரன் கொடுக்கும் பந்துவீச்சாளர்களே அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அப்படி ஒரு போட்டியில் 4 ஓவர்களை வீசி குறைவாக ரன் கொடுத்த பந்து வீச்சாளர்களின் பட்டியலைப் பார்ப்போம். (இது இந்திய பவுலர்களை மட்டுமே வைத்து வகைப்படுத்தப்பட்டது கவனிக்கத்தக்கது).

Nehra-2

- Advertisement -

ஆஷிஷ் நெஹ்ரா :

முன்னால் இந்திய வேகப்பந்து வீச்சாளரான இவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடியபோது 4 ஓவர்கள் வீசி, ஒரு மெய்டன் ஓவர்,6 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
நெஹ்ரா ( 4-1-6-1)

Chahal

சாகல் :

- Advertisement -

முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய இவர் அதன் பின்னர் விராட் கோலியின் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். 2019ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய இவர், 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் ஓவர் 6 ஒரு விக்கெட் என அசத்தி இருந்தார். சாஹல் (4-1-6-1)

Rahul

ராகுல் சர்மா :

- Advertisement -

புனே வாரியர்ஸ் அணிக்காக 2011 ஆம் ஆண்டில் கங்குலி தலைமையில் விளையாடினார். அப்போது 4 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி இருந்தார். ராகுல் சர்மா (4-0-7-2)

Mishra

அமித் மிஸ்ரா :

- Advertisement -

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 2013ம் ஆண்டு இவர் விளையாடியபோது, 4 ஓவர்கள் வீசி 8 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். அமித் மிஸ்ரா (4-0-8-2)

கரண் ஷர்மா :

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கான 2013 ஆம் ஆண்டு விளையாடியபோது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் மற்றும் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார். கரண் சர்மா (4-0-8-0)

Advertisement