கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் ரோஹித் சர்மா செய்வதற்கு பொருந்தக்கூடிய 5 வேலைகள்

Rohith
- Advertisement -

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் ரோகித் சர்மா உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் கடந்த 2006இல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அறிமுகமானார். ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் களமிறங்கி 10க்கு ஓரிரு போட்டிகளில் மட்டுமே சிறப்பாக செயல்பட்ட அவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படும் தவறியதால் இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடிக்க தடுமாறினார். அந்த நிலைமையில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர் உள்ளிட்ட சீனியர் தொடக்க வீரர்களுக்குப்பின் அடுத்த தலைமுறை அணியை உருவாக்க நினைத்த அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி 2007 – 2012 வரையிலான காலகட்டத்தில் தனது அணியில் விளையாடிய இவரின் திறமையை உணர்ந்து 2013இல் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கொடுத்தார்.

Rohit Sharma Six

- Advertisement -

அதை இறுக்கமாக பிடித்து பொன்னாக மாற்றத் துவங்கிய ரோகித் சர்மா அதற்கடுத்த வருடங்களில் அந்நியனாக மாறி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி நிலையான இடத்தைப் பிடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டைச் சதங்கள், ஒரே உலக கோப்பையில் 5 சதங்கள் உட்பட நிறைய உலக சாதனை படைத்து இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறார். ஐபிஎல் தொடரிலும் தனது மிகச்சிறந்த கேப்டன்ஷிப் வாயிலாக தோனியை மிஞ்சும் அளவுக்கு 5 கோப்பைகளை வென்ற அவர் அதன் வாயிலாக இன்று 3 வகையான இந்திய அணிக்கும் கேப்டனாகும் அளவுக்கு பிரம்மாண்ட வளர்ச்சி கண்டுள்ளார்.

2வது இன்னிங்ஸ்:
சுமார் கடந்த 10 வருடங்களாக பேட்டிங்கில் ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் தற்போது கேப்டனாகவும் நிறைய வரலாற்று வெற்றிகளை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்து வருகிறார். அடுத்ததாக வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையையும் 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையையும் வெல்வதே அவரின் பெரிய லட்சியமாக காணப்படுகிறது.

Rohit-Sharma

தற்போது 35 வயதை கடந்துள்ள அவர் ஏற்கனவே வயது காரணமாகவும் பிட்னஸ் காரணமாகவும் அடிக்கடி நிறைய தொடர்களில் ஓய்வெடுப்பதை பார்க்க முடிகிறது. மேலும் எப்பேர்ப்பட்ட ஜாம்பவானாக இருந்தாலும் ஒருநாள் ஓய்வு பெற்றே தீர வேண்டும் நிலையில் சமீப காலங்களில் அவரின் வயது அவரின் ஆட்டத்தில் எதிரொலிக்கிறது. எனவே அடுத்த சில வருடங்களில் ஓய்வு பெறப்போகும் ரோகித் சர்மா தனது வாழ்வின் 2வது இன்னிங்சில் செய்யத்தகுந்த வேலைகளை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. சினிமா துறை: வரலாற்றில் இந்திய கிரிக்கெட்டிலிருந்து நிறைய வீரர்கள் ஓய்வுக்கு பின் சினிமா பக்கம் சென்றுள்ளார்கள். சமீபத்தில் கூட முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த வகையில் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் வீரராக கொண்டாடப்படும் ரோகித் சர்மாவுக்கு தனியாக ப்ராண்ட் இருப்பதுடன் அவர் பார்ப்பதற்கு சற்று அழகாகவும் இருக்கிறார்.

Rohith

மேலும் களத்திலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் நிறைய தருணங்களில் நகைச்சுவையாக அவர் பேசுவதையும் பார்க்க முடிகிறது. எனவே மும்பையைச் சேர்ந்த அவர் பாலிவுட் பக்கம் திரும்பினால் அவரை வரவேற்பதற்கு திரையுலகமும் ரசிகர்களும் தயாராகவே உள்ளனர்.

- Advertisement -

4. இயற்கை ஆர்வலர்: களத்தில் அடிக்கும் சிக்ஸர்கள் ரசிகர்கள் மீது பட்டால் துடித்துப் போகும் ரோகித் சர்மா வாயில்லா மிருகங்கள் மீது எப்போதுமே தனி அன்பு செலுத்துபவராக உள்ளார். அந்த வகையில் ஏற்கனவே இயற்கை மற்றும் விலங்குகள் மீது ஆர்வம் கொண்டுள்ள அவர் அதை காப்பதற்காக சமீப காலங்களில் நிறைய தருணங்களில் குரல் கொடுத்து வருகிறார்.

rohith 3

குறிப்பாக அழிந்துவரும் விலங்குகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ள காண்டாமிருகத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் ஷூ, பேட் போன்ற உபகரணங்களில் அது சம்பந்தப்பட்ட குறியீடுகளைப் பயன்படுத்தி வரும் அவர் ஓய்வுக்குப் பின் அந்த வேலையை விரிவாக செய்தால் அவருக்கு பொருத்தமாக அமையும்.

- Advertisement -

3. வழக்கறிஞர்: கேப்டனாக இருக்கும் இவர் நிறைய போட்டிகளில் செய்தியாளர்கள் கேட்கும் கடினமான கேள்விகளுக்கு சாதுர்யமாக பதிலளிப்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் நல்ல பேச்சாற்றலும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் அவரின் திறமை வருங்காலங்களில் நீதிமன்றம் சென்று வழக்காடும் வழக்கறிஞராக செயல்பட அவர் முயற்சித்தால் நிச்சயம் வெற்றியை கொடுக்கும் என்றே கூறலாம்.

rohith

2. அகாடமி நிறுவனர்: கிரிக்கெட்டில் விளையாடும் சில வீரர்கள் தங்களது ஓய்வுக்குப் பின் வேறு துறையில் செல்வதற்கு மனமில்லாமல் தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் துறைக்கு வருங்கால சூப்பர் ஸ்டார்களை உருவாக்க நினைப்பார்கள். அதில் பொருளாதார அளவில் நல்ல நிலைமையுடன் இருக்கும் சிலர் கிரிக்கெட்டை கற்றுக்கொடுக்கும் அகடமியை தொடங்கி வருங்கால மன்னர்களை உருவாக்குவார்கள்.

அதிலும் கேதார் ஜாதவ் போன்ற வீரர்களே அகெடமி தொடங்கும் போது அவர்களை விட நல்ல புகழும் திறமையும் பொருளாதாரத்திலும் உயர்ந்தவராக கருதப்படும் ரோகித் சர்மா மும்பையில் கிரிகெட் அகடமி துவங்கி வருங்கால வீரர்களை உருவாக்கும் வேலையையும் செய்யலாம்.

Rohith

1. பயிற்சியாளர்: கிரிக்கெட்டில் விளையாடும் நிறைய வீரர்கள் ஓய்வுக்குப் பின் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உலகம் முழுவதிலும் பல்வேறு அணிகளில் பயிற்சியாளராக செயல்படுவதற்கு அழைக்கப்படுவார்கள். அதிலும் ரோகித் சர்மா போன்ற நல்ல திறமையும் புகழும் அனுபவமும் பெற்ற ஒருவர் பயிற்சியாளராக செயல்பட விரும்பாத அணிகளே இருக்க முடியாது.

அந்த வகையில் ஓய்வுக்குப் பின் அவர் பயிற்சியாளராக செயல்படுவதற்கு அதிகமான வாய்ப்புள்ளது. அதிலும் தங்களுக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஐபிஎல் தொடரில் அவரை நிச்சயமாக பயிற்சியாளராக வருங்காலத்தில் அமர்த்தும் என்று நம்பலாம்.

Advertisement