- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியில் கேஎல் ராகுல் இடத்தில் விளையாட தகுதியுடைய 4 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள்

கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் 2014ஆம் ஆண்டு அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் 2019 வாக்கில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான இடத்தைப் பிடித்தார். அத்துடன் இளம் வீரராக இருந்த காரணத்தால் வருங்கால கேப்டனாக பிசிசிஐ உருவாக்க நினைத்த அவர் நாளடைவில் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்ற சுயநலத்துடன் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் நிரூபித்தனர். அதே அணுகுமுறையுடன் அதிரடியாக செயல்பட வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதே போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதால் எழுந்த கடுமையான விமர்சனங்களால் தற்போது துணை கேப்டன்ஷிப் பதவியை இழந்துள்ள அவர் விளையாடும் 11 பேர் அணியிலும் கழற்றி விடப்பட துவங்கியுள்ளார். இருப்பினும் 2023 உலகக்கோப்பையில் எப்படியாவது அவரை விளையாட வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பை இந்திய அணி நிர்வாகம் கொடுத்துள்ளது. இருப்பினும் அவரை விட அந்த இடத்தில் விளையாடுவதற்கு தகுதியான சில வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. சஞ்சு சாம்சன்: கேரளாவை சேர்ந்த இவர் 2015இல் அறிமுகமாகி 2வது போட்டியை 2019இல் விளையாடி 2021 வரை குப்பையை போல் பயன்படுத்தப்பட்டு வந்ததை அனைவரும் அறிவோம். இருப்பினும் மனம் தளராமல் போராடிய அவர் 2022ஆம் ஆண்டு கிடைத்த வாய்ப்புகளில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். குறிப்பாக கடந்த அக்டோபரில் சொந்த மண்ணில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரின் 3 போட்டியிலும் கடைசி வரை அவுட்டாகாமல் நின்ற அவர் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

ஆனாலும் அவருக்கு பதிலாக கடந்த டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக முக்கிய கேட்ச்சை விட்டு 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்திக்க காரணமாக இருந்த ராகுலுக்கு அடுத்து நடைபெறும் ஆஸ்திரலிய தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. எனவே தற்போதுள்ள ஃபார்ம் மற்றும் நியாயப்படி ராகுலுக்கு பதில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

- Advertisement -

2. இஷான் கிசான்: ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் அதிரடியான செயல்பாடுகளை வெளிப்படுத்திய இவர் சமீப காலங்களில் டி20 கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறார். இருப்பினும் கடந்த டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் இரட்டை சதமடித்த இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இன்னும் இளம் வீரராக இருக்கும் இவர் நாட்கள் செல்ல செல்ல முதிர்ச்சியடைந்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. எனவே இளம் அதிரடி ஓப்பனிங் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் இவரும் ராகுலுக்கு பதில் விளையாடும் தகுதியை கொண்டுள்ளார்.

- Advertisement -

3. நாராயன் ஜெகதீசன்: தமிழகத்தைச் சேர்ந்த இவர் முதல் தர கிரிக்கெட்டில் 33 போட்டிகளில் 1795 ரன்களை 62.80 என்ற சிறப்பான சராசரியிலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 2090 ரன்களை 49.76 என்ற நல்ல சராசரியிலும் 94.95 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்து வருகிறார்.

குறிப்பாக கடந்த விஜய் ஹசாரே கோப்பையில் 277 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்த அவர் தற்போது உச்சகட்ட பார்மில் இருப்பதால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதுவும் ராகுலுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாட முழு தகுதி உடையவராக உள்ளார்.

- Advertisement -

4. செல்டன் ஜேக்சன்: 76 முதல் தர கிரிக்கெட்டில் 5634 ரன்களையும் 58 லிஸ்ட் ஏ போட்டிகளில் 2096 ரன்கள் குவித்து தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இவர் 36 வயதை கடந்து விட்டார் என்ற ஒரே காரணத்துக்காக புறக்கணிக்கப்பட்ட வருவது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:IND vs AUS : இந்த சீரிஸ் முழுக்க அவர ஒழுங்கா யூஸ் பண்ணல, ரோஹித் சர்மாவின் முக்கிய கேப்டன்ஷிப் தவறை சுட்டிக்காட்டும் டிகே

இருப்பினும் அதே வயதால் பெற்றுள்ள அனுபவத்திற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக விளையாடும் தகுதியை இவர் பெற்றுள்ளார் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -