இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இரண்டாம் வாரத்தை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 18 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இந்த தொடரின் 19-ஆவது லீக் ஆட்டமானது ஏப்ரல் 6-ஆம் தேதியான இன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது.
4 தமிழக வீரர்களுக்கு குஜராத் அணியில் இடம் :
இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து வெளியான பிளேயிங் லெவனில் நான்கு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து விளையாட வைத்துள்ளது தற்போது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. ஏனெனில் சி.எஸ்.கே அணியே தமிழக வீரர்களுக்கு பெரியளவில் வாய்ப்புகளை கொடுக்காமல் இருக்கும் வேளையில் தமிழக வீரர்களின் திறமையை அறிந்து அவர்களுக்கு அதிகளவில் குஜராத் அணி வாய்ப்பு வழங்கியுள்ளது பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.
அந்த வகையில் துவக்க வீரரான சாய் சுதர்சன், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷாருக்கான், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் ஆகியோருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே தமிழக வீரர்கள் எந்த ஐபிஎல் அணியில் இடம் பிடித்து விளையாடினாலும் ரசிகர்கள் மத்தியில் அந்தப் போட்டிக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரே போட்டியில் நான்கு தமிழக வீரர்கள் விளையாடும் இந்தப்போட்டி அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க : இன்னும் 17 ரன் தான் தேவை.. டி20 வரலாற்றில் முதல் இந்திய வீரராக விராட் கோலி நிகழ்த்தவிருக்கும் சாதனை – விவரம் இதோ
இந்த தொடரில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



