ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா அணி படைத்துள்ள 5 அட்டகாசமான சாதனைகள் – லிஸ்ட் இதோ

Kkr
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலத்தில் இந்தியாவிலேயே கோலாகலமாக நடைபெறுகிறது. வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று அதற்காகா நடைபெறும் ஏலத்தில் தேவையான கிரிக்கெட் வீரர்களை வாங்கிக்கொண்டு 2023 சீசனில் கோப்பை வெல்வதற்கு தயாராகும் அணிகளுக்கு மத்தியில் 3வது சாம்பியன் பட்டம் வெல்வதற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போராடவுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் சாருக்கான் அவர்களை உரிமையாளராகவும் வரலாற்று சிறப்புமிக்க ஈடன் கார்டன்ஸ் மைதானத்தை சொந்த வீடாகவும் கொண்ட அந்த அணி 2012, 2014 ஆகிய சீசன்களில் கௌதம் கம்பீர் தலைமையில் 2 கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றில் 3வது வெற்றிகரமான அணியாக ஜொலிக்கிறது.

மும்பை, சென்னை போலவே தங்களுக்கென்று தனித்துவமான ஸ்டைலில் விளையாடி ரசிக்கப்பட்டாளத்தை கொண்டுள்ள அந்த அணி வரலாற்றின் முதல் போட்டியிலேயே பெங்களூரு அணியை ப்ரண்டன் மெக்கல்லம் அதிரடியில் புரட்டி எடுத்து பதிவு செய்த பிரம்மாண்ட வெற்றி உட்பட நிறைய சாதனைகளை படைத்துள்ளது. அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா அணி படைத்துள்ள சில வரலாற்றுச் சாதனைகளை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. பவர்பிளே சரவெடி: கடந்த 2017ஆம் ஆண்டு பெங்களூருவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 159 ரன்களை துரத்திய கொல்கத்தா அணிக்கு கிறிஸ் லின் – சுனில் நரேன் ஆகியோர் பவர்பிளே ஓவர்களில் எரிமலையாக பேட்டிங் செய்து எளிதாக வெற்றி பெற உதவினர்.

குறிப்பாக சுமாராக பந்து வீசிய பெங்களூரு பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அடித்து நொறுக்கி அந்த ஜோடி 6 ஓவர்களில் 105 ரன்கள் விளாசி ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சென்னையின் சாதனையை தகர்த்து கொல்கத்தா புதிய சாதனை படைக்க உதவினர். அதற்கு முன் கடந்த 2014 சீசனில் ரெய்னா அதிரடியால் பஞ்சாப்புக்கு எதிராக சென்னை 100 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

4. பைனல் சேசிங்: பொதுவாகவே கொஞ்சம் தப்பினால் கோப்பை பறி போகக்கூடிய பைனலில் சேசிங் செய்வது மிகவும் கடினமாகும். ஆனால் 2014 சீசனின் மாபெரும் பைனலில் பஞ்சாப் நிர்ணயித்த 200 ரன்களை துரத்தும் போது மணிஷ் பாண்டே 94 (50) ரன்கள் குவித்த அதிரடியில் வெற்றியை நெருங்கி கொல்கத்தாவுக்கு கடைசி நேரத்தில் பியூஸ் சாவ்லா 13* (5) ரன்கள் விளாசி வெற்றி பெற வைத்தார்.

அதனால் 2வது கோப்பையை வென்ற கொல்கத்தா ஐபிஎல் தொடரில் பைனலில் அதிக ரன்களை சேசிங் செய்த அணி என்ற தங்களது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தது. அதற்கு முன் 2012 பைனலில் சென்னைக்கு எதிராக 191 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

3. 5வது பார்ட்னர்ஷிப்: கடந்த 2016 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக பேட்டிங் செய்த கொல்கத்தா 24/4 என ஆரம்பத்திலேயே திணறியதால் 100 ரன்களை தாண்டுமா என்ற நிலைமை ஏற்பட்டது. ஆனால் அப்போது சாகிப் அல் ஹசனுடன் (66 ரன்கள்) ஜோடி சேர்ந்த யூசுப் (63 ரன்கள்) பதான் அதிரடியாக விளையாடி 134* (85) ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில் 5வது கிரிக்கெட்டுக்கு அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியை கொண்ட அணி என்ற சாதனையை கொல்கத்தாவுக்கு சேர்த்தனர். இருப்பினும் கடைசியில் தினேஷ் கார்த்திக் 51 (29) ரன்கள் எடுத்து அதிரடியில் குஜராத் வென்றது.

2. சூப்பர் பவுலிங்: காட்டடி பேட்ஸ்மேனாக கருதப்படும் ஆண்ட்ரே ரசல் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் முதல் முறையாக பந்து வீசும் வாய்ப்பு பெற்றார். ஆனால் எதிரணி சிக்ஸர்களை பறக்க விட துடிக்கும் கடைசி ஓவரில் அற்புதமாக செயல்பட்ட அவர் 5 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

குறிப்பாக 1.50 என்ற ஸ்டிரைக் ரேட்டில் மட்டுமே ரன்களை கொடுத்த அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை கொடுத்த பவுலர் என்ற ரெய்னாவின் சாதனையை சமன் செய்தார். அதற்கு முன் கடந்த 2011 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிராக சென்னை அணிக்காக சுரேஷ் ரெய்னா 0.3 ஓவரில் 2 ரன்களை 1.5 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் பதிவு செய்தார்.

1. தொடர் வெற்றி: 2014 ஐபிஎல் தொடரில் முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்த கொல்கத்தா பின்னர் லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு பிளே ஆஃப் சுற்றில் அசத்தி பைனலில் கோப்பையும் வென்றது.

இதையும் படிங்க: அதெல்லாம் நம்ம பிறப்பிலேயே இல்ல, நமக்கு வரவும் வராது – கேஎல் ராகுலுக்கு டிகே பதிலடி, நடந்தது என்ன

அதில் தொடர்ச்சியாக 9 போட்டிகளை வென்ற அந்த அணி 2015 சீசனின் முதல் போட்டியையும் வென்றது. அதன் வாயிலாக 10 தொடர் வெற்றிகளுடன் ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் வென்ற அணி என்ற சாதனையும் கொல்கத்தா படைத்துள்ளது.

Advertisement