IND vs AUS : ஆஸ்திரேலியவை சாய்க்க 2 தமிழக வீரர்கள் உட்பட இந்திய அணியில் 4 வீரர்கள் சேர்ப்பு – பிசிசிஐ பதிலடி திட்டம்

ind
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் துவங்கும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை எப்படியாவது வென்றாக வேண்டும் என்ற வெறியுடன் ஆஸ்திரேலிய அணி பெங்களூருவில் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற இத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்றாக வேண்டும் என்ற ஒரே ஒரு கட்டாயத்தில் மட்டுமே இந்தியா களமிறங்குகிறது. ஆனால் ஏற்கனவே பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட காரணத்தால் 2004க்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

அதை விட கடைசியாக தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த 2 பார்டர் – கவாஸ்கர் கோப்பைகளில் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவிடம் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா அவமானத்திற்கு உள்ளாகியுள்ளது. அத்துடன் 2017, 2018/19, 2020/21 என கடைசியாக நடைபெற்ற 3 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர்களில் அடுத்தடுத்து ஹாட்ரிக் தோல்விகளை ஆஸ்திரேலியா சந்தித்துள்ளது. எனவே இந்த அனைத்து கதைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிப்பதற்காக இத்தொடரில் இந்தியாவை தோற்கடிக்கும் முனைப்புடன் பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

- Advertisement -

4 ஸ்பின்னர்கள்:
அதற்காக கடைசியாக 2017ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்திய சுற்றுப்பயணத்தில் தரமான பிட்ச்கள் தங்களுக்கு கொடுக்கவில்லை என்பதால் இம்முறை இந்தியாவை நம்பாமல் சிட்னியில் வேண்டுமென்றே தாறுமாறாக சுழலும் பிட்ச்சை உருவாக்கி அதில் பயிற்சிகளை எடுத்து விட்டு ஆஸ்திரேலிய அணியினர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அத்துடன் மிகப்பெரிய சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் அஷ்வினை சிறப்பாக எதிர்கொள்ள தேவையான திட்டங்களை பிக்பேஷ் தொடரிலேயே வகுத்து விட்டதாக தெரிவித்த மார்னஸ் லபுஸ்ஷேன், மாட் ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அவரைப் போலவே பந்து வீசக்கூடிய மகேஷ் பிதியா எனும் லோக்கல் பவுலரை தேடிப் பிடித்து பெங்களூருவில் வலைப்பயிற்சி செய்து வருகிறார்கள்.

அப்படி இந்தியாவை சாய்ப்பதற்கு அனைத்து வழிகளிலும் ஆஸ்திரேலியா தயாராகி வருவதை கவனித்துள்ள பிசிசிஐ நாங்களும் 4 எக்ஸ்ட்ரா ஸ்பின்னர்களை களமிறக்குகிறோம் என்ற வகையில் புதிய முடிவை எடுத்துள்ளது. அதாவது சுழலுக்கு சாதகமான மைதானங்கள் அமையும் என்று எதிர்பார்க்கப்படும் இத்தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் முழுமையாக தயாராகி விளையாட வேண்டும் என்பதற்காக தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், சாய் கிசோர் மற்றும் ராகுல் சஹர், சௌரப் குமார் ஆகிய 4 சுழல் பந்து வீச்சாளர்களை இத்தொடருக்கான இந்திய அணியில் நெட் வீச்சாளர்களாக பிசிசிஐ இணைத்துள்ளது.

- Advertisement -

இவர்கள் இந்த தொடரின் 4 போட்டிகளிலும் முழுவதுமாக இந்திய அணியுடன் இணைந்து நெட் பந்து வீச்சாளர்களாக செயல்படுவார்கள் என்று பிரபல க்ரிக்பஸ் இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் வாஷிங்டன் சுந்தர் ஏற்கனவே கடைசியாக ஆஸ்திரேலியாவை காபா மைதானத்தில் எதிர்கொண்ட போது இந்தியா பதிவு செய்த சரித்திர வெற்றியில் அறிமுகமாக களமிறங்கி முக்கிய பங்காற்றினார்.

மேலும் வெள்ளை பந்து அணியிலும் சமீப காலங்களில் வாய்ப்பு பெற்று நிலையான இடத்தை பிடித்துள்ள அவருக்கு அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் போன்ற முதன்மை ஸ்பின்னர்கள் விளையாடுவதால் இத்தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் நெட் பவுலராக செயல்படும் அவருடன் மற்றொரு வளர்ந்து வரும் இளம் தமிழக வீரரான சாய் கிஷோரும் இடம் பிடித்துள்ளார். அதே போல் 2021 டி20 உலகக்கோப்பையில் விளையாடியிருந்த ராகுல் சஹர் உள்ளூர் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நெட் பந்து வீச்சாளராக தேர்வாகியுள்ளார்.

இதையும் படிங்க: வெற்றி நிச்சயம், பாதிப்பை பயன்படுத்தி பந்தாடுங்க – இந்தியாவை சாய்க்க ஆஸி அணிக்கு கிரேக் சேப்பல் கொடுத்த அட்வைஸ் என்ன

இந்த நால்வருமே வலைப்பயிற்சியின் போது தங்களது திறமையை வெளிப்படுத்தி ராகுல் டிராவிட் போன்ற பயிற்சியாளர்களை கவரும் வகையில் செயல்படும் பட்சத்தில் வரும் காலங்களில் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு ஏற்படும் என்பதும் குறிப்பிடப்பட்டது.

Advertisement